கொரோனா வைரஸிர்க்கான விழிப்புணர்வு பாடல்கள்..!

  • by
awareness songs for corona virus

கொரோனா வைரஸ் தொற்றை பற்றிய தெளிவான விபரங்களை அறியாத மக்களே ஏராளமான தவறுகளை செய்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு இதன் தாக்குதல் பற்றியும், இதன் வீரியத்தை பற்றியும் புரிய வைப்பதற்காக ஏராளமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களால் முடிந்த வரை விழிப்புணர்வு பாடல்களை தயாரித்து வருகிறார்கள். இதை தவிர்த்து இணையதளத்தில் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்களை பதிவிட்டு வருகிறார்கள்.

எஸ்பிபி வைரமுத்து

கொரோனா வைரஸ் பற்றிய கவிதையை எழுத்தாளர் வைரமுத்து அவர்கள் எழுதி உள்ளார், எனவே இந்த வரிகளை வைத்து பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தானே ஒரு பாடலுக்கான இசையை உருவாக்கி உள்ளார். கொரோனா வைரஸின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற அனைத்தையும் அழகாக எழுதிய வைரமுத்து வரிகளை கொண்டு இந்த பாடலை தத்துரூபமாக பாடியுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள். இணைய தளத்தில் இருக்கும் இந்தப் பாடலைக் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

மேலும் படிக்க – நாம் பார்க்க மரந்து சிறந்த திரைப்படங்கள்..!

இசையமைப்பாளர் வர்ஷன்

புறம்போக்கு என்னும் பொதுவுடமை திரைப்படத்தின் இசையமைப்பாளர் வர்ஷன் அவர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்கான பாடல் ஒன்றை இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வரிகளை அஸ்மின் அவர்கள் எழுதியுள்ளார், இவர் விஜய் ஆண்டனியின் “நான்” படத்தின் இசையில் வெளியான தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலை எழுதியவர். இந்த பாடலை இசையமைத்து பாடிய வர்ஷன் அவர்கள் பியானோ இசையில் உலக பிரபலமடைந்த லிடியனின் தந்தையாவார்.

சென்னை கானா

இதைத் தவிர்த்து சமூக ஆர்வம் கொண்ட சென்னையில் உள்ள கானா பாடல் பாடுபவர்கள் தங்கள் திறமையை வெளியிடும் வகையில் ஏராளமான விழிப்புணர்வு பாடல்களை இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். கானா சுதாகர், சரவெடி சரண் மற்றும் கானா புகழ்பெற்ற கானா பாலா போன்றவர்கள் தங்களால் முடிந்தவரை கொரோனா வைரசை பற்றிய விழிப்புணர்வுகளை தங்கள் பாடல் மூலமாகவும், பாடல்வரிகள் மூலமாகவும் மக்களுக்கு அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுனுக்கு நடந்த விபரீதம்..!

இதைத் தவிர்த்து ஏராளமான பாடல்கள் இணையதளத்தில் உலா வருகிறது. அதிலும் “முத்து” படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான தில்லானா தில்லானா என்ற பாடலின் வரிகளை முழுமையாக மாற்றி அமைத்து கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றியுள்ளார்கள். இது அனைத்திலும் ஏராளமான அர்த்தங்கள் மற்றும் விழிப்புணர்வு வரிகளை கொண்டுள்ளது. எனவே இது வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல் அதில் இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன