கோடைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

  • by
avoid these foods during summer season

கோடைகாலம் வந்துவிட்டாலே நம் உடலில் உள்ள அனைத்து சக்திகளும் இழந்து எப்போதும் சோர்வாக இருப்போம். அதைத்தவிர இக்காலத்தில்தான் ஏராளமான உடல் பிரச்சினைகள் நமக்கு ஏற்படும். எனவே கோடை காலங்களிலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஒருசில உணவுகளை தவிர்க்க வேண்டும், அவர்களை இந்த பதிவில் காணலாம்.

காரமான உணவுகளை தவிர்க்கவும்

காரமான உணவுகளை நாம் சாப்பிடுவதன் மூலமாக நம் உடல் உஷ்ணம் அடையும். இது மற்ற காலங்களில் சிறந்ததாக இருந்தாலும் கோடை காலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் காரமான உணவுகள் உங்கள் உடலின் வெப்ப நிலையை சீர் குலைக்கும். அதிக காரத்தை சேர்க்காமல் போதுமான அளவு சேர்த்து உணவை சாப்பிடுவது சிறந்தது.

மேலும் படிக்க – கர்ப்பிணி பெண்களே தாய் என்ற தைரியம் போதும்

அசைவ உணவுகள்

கோடைக் காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் அசைவ உணவுகள் நம் உடலில் வெப்பத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலில் வியர்வையை அதிகரிக்கிறது. இதன் மூலமாக உங்களுக்கு பலவிதமான கிருமித் தொற்றுகள் ஏற்படும். எனவே கோழிக்கறி, ஆட்டுக்கறி மற்றும் மீன் வகைகளை கூட முடிந்தவரை கோடைக்காலங்களில் தவிர்க்கலாம்.

ஜங்க் ஃபுட்

ஜீரண சக்தியை சீர்குலைத்து நம் உணவு பாதையை அழிக்கும் ஜங்க் உணவுகளை கோடைக்காலங்களில் தவிர்த்திடுங்கள். எப்போதாவது ஒரு முறை என்று கூட இது போன்ற உணவுகளை கோடைக்காலங்களில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது. பிட்சா, பர்கர் மற்றும் சாலை ஓரங்களில் எண்ணெய்களால் பொறிக்கப்படும் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக இருங்கள்.

தேநீர் மற்றும் காபி

கோடைக்காலங்களில் முடிந்தவரை குளிர்ச்சியைத் தரும் குளிர் பானங்களை அருந்துங்கள், அதிலும் பழரசமாக இருந்தால் சிறந்தது. இச்சமயங்களில் நாம் டீ, காபி போன்ற உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – மருதம் மரத்தின் இருக்கு மகத்தான வாழ்வியல் மருத்துவம்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளான மாமிசங்கள், பொரிக்கப்பட்ட உணவுகள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவுகளை நாம் முழுமையாக கோடை காலங்களில் தவிர்க்க வேண்டும்.

இந்த எல்லா உணவுகளும் ஏதாவது ஒரு வழியில் உங்கள் உடல் உஷ்ணத்தை அதிகரித்து பல விதமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே அதை தவிர்ப்பதற்கு நீங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக கோடைகாலங்களில் எடுத்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்தை பல மடங்கு அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன