முகப்பருக்களை வருமுன் தடுப்பது எப்படி?

  • by
avoid pimples by using this steps

எல்லா ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இந்த முகப்பருக்கள். ஏனென்றால் ஒரு முறை முகப்பரு வந்துவிட்டால் கிட்டத்தட்ட 3 முதல் 5 நாட்களுக்கு இதன் தாக்கம் நம் முகத்தில் இருந்து கொண்டே இருக்கும். அதை தவிர்த்து சில நாட்களில் சிறிய புள்ளிகளாக நம் சருமத்தில் முகப்பருக்கள் மாறி விடும். எனவே நமது அழகை இதுபோன்ற முகப்பருக்கள் அதிகமாக கெடுக்கிறது. அதை வருவதற்கு முன் எப்படி தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஐஸ்கட்டி மசாஜ்

முகப்பருக்கள் உங்கள் சருமத்தில் வரவிருக்கும் உணர்வை நீங்கள் உணர்ந்தால் உடனே ஐஸ் கட்டிகளைக் கொண்டு உங்கள் முகம் முழுக்க தடவி மசாஜ் செய்யுங்கள். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் இந்த மசாஜ் செய்தவுடன் பஞ்சினை கொண்டு முகத்தை துடைத்து விடுங்கள். இதனால் உங்கள் சருமம் புத்துணர்ச்சி அடைந்து முகப்பருக்களை தடுக்கிறது.

மேலும் படிக்க – ஏவாளை மிஞ்சும் அழகு பெற எலும்பிச்சை பயன்படுத்துங்க!

அதிகமாக நீர் எடுத்துக் கொள்ளுங்கள்

உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும் பொழுது உங்களுக்கு முகப்பருக்கள் உண்டாகிறது. என்னை சருமம் உள்ளவர்களுக்கும் முகப்பரு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு நாம் வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது குடித்து கொண்டே இருக்க வேண்டும், இதனால் முகப்பரு வளராது.

ஆல்கஹால் பயன்பாடு

முகப்பருக்கள் நம் முகத்தில் தோன்றுவதாக இருந்தால் நமக்கு ஒரு சில அறிகுறிகள் மூலமாக தெரியவரும். சிறிதாக கட்டிகள் போல் எழும்பும் முகப்பருக்களை உடனடியாக குறைப்பதற்கு நாம் ஆல்கஹாலை முகப்பரு மேல் தடவ வேண்டும். இதனால் முகப்பரு வளர்ச்சி அடையாது. அதேபோல் இதை சருமத்தில் மற்ற இடங்களில் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. இல்லைஎனில் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

மேலும் படிக்க – வாழ்வை ஒளிர செய்யலாம் துளசியின் மருத்துவம்

களிமண் கொண்டு முகப்பரை அகற்றுங்கள்

இப்பொழுது களிமண் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடுவது ட்ரெண்டிங்காக உள்ளது. எனவே நீங்களும் களிமண்ணைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடுங்கள். இதனால் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி கொழுப்புத் தன்மையை உண்டாக்காமல் முகப்பருக்களை அடியோடு அழித்துவிடும். அதைத் தவிர்த்து எதிர்காலத்தில் முகப்பரு வராமல் பார்த்துக்கொள்ளும்.

இந்த வழிகளை பயன்படுத்தி உங்கள் முகப்பருக்களை முழுமையாக அகற்றி விடுங்கள். அதே போல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வழிகளை தெரியப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன