ஹைபிரிட் காய்கறிகளை தவிர்த்து இயற்கை உணவை சாப்பிடுங்கள்..!

  • by
avoid hybrid vegetables and fruits in your food

சமீப காலமாகவே நாம் காய்கறிகளை குறைவாகப் பயன்படுத்தி வருகிறோம். இதற்குக் காரணம் உடனடியாக செய்யப்படும் உணவுகள் தான். எப்போதாவது நாம் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்தாலும், நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் காய்கறிகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். இது போன்ற காய்கறிகள் பார்ப்பதற்கு அழகையும், உங்களுக்கு ருசியையும் தந்தாலும் சத்துக்களை குறைத்து தான் தருகிறது.

ஹைபிரிட் காய்கறிகள்

நாம் நாட்டு காய்கறிகளை மறந்து ஹைபிரிட் காய்களுக்கு பின்னால் சென்றுள்ளோம். இது ஒருவிதமான கலப்பு காய்கறிகளாகும். இயற்கையினால் விளைந்த காய்கறிகளின் விதைகளை எடுத்து அதில் ஒரு சில கலவைகளை கலந்து அல்லது மற்றொரு காய்கறிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவது இந்த ஹைபிரிட் காய்கறிகள். ஒரு காயுடன் மற்றொரு காய்கறி கலப்பதினால் இதன் சக்தி பாதி அளவு குறைகிறது. அதை பலமுறை செய்வதன் மூலமாக இது போன்ற காய்கறியில் உங்களுக்கு எந்த ஒரு ஆரோக்கிய பலனும் கிடைப்பதில்லை.

மேலும் படிக்க – கொரானாவை முடக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

இயற்கை காய்கறிகள்

இயற்கையாக விளையும் காய்கறிகள் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். அது நம்மைக் கவரும் அளவிற்கு இல்லை என்றாலும் அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. மக்கள் தங்கள் பார்வைக்கு எது சுத்தமாகவும், அழகாகவும் இருக்கிறதோ அதுதான் உயர்ந்த காய்கறிகள் என்று நம்பி அதன் பின்னால் செல்கிறார்கள். ஆனால் இயற்கை மூலமாக செய்யும் காய்கறிகள் தான் உங்களுக்கு எல்லா விதமான சக்திகளும் தருகின்றன.

கலக்கப்படும் காய்கறிகள்

நம் நாட்டு கத்தரிக்காயில் இரண்டே கத்தரிக் காய்கள் தான் உள்ளது. அது சிறிய வகை நீல கத்திரிக்காய் மற்றும் வெள்ளைக் கத்தரிக்காய், ஆனால் ஹைபிரிட் கத்திரிக்காய் மிகப்பெரிய அளவில் மெழுகு பொம்மை போல் இருக்கும், இதுபோல்தான் தக்காளி, முட்டைகோஸ், வெங்காயம், வெண்டைக்காய், குடை மிளகாய் போன்றவைகளை உருவாக்குகிறார்கள். இது அழகாக இருந்தாலும் உங்கள் ஆரோக்கியத்தை குறைத்து விடுகிறது.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கு அதிகமாக பாக்கெட் உணவுகளை வாங்கிக் கொடுப்பவர்களா நீங்கள்???

ஆரோக்கியமான வாழ்க்கை

நீங்கள் வாங்கப்படும் ஹைபிரிட் காய்கறிகள் இந்தியாவில் விளைவிக்காமல் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. எனவே இதிலிருந்து பலவிதமான பிரச்சனைகள் நமக்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்விற்கு நம் நாட்டில், நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உற்பத்தி செய்யும் காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

இயற்கை மூலமாக செய்யப்படும் உணவுகளை எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும். மிக விரைவில் உற்பத்தி ஆகும் இது போன்ற ஹைபிரிட் காய்கறிகள் உங்கள் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன