வெளியே சாப்பிடும் உணவுகளை தவிர்த்து விட்டு உணவுகளை அருந்துங்கள்..!

  • by
avoid eating outside food

நம் வாழ்க்கையில் அதிகமான நேரங்களை வெளியே கழிக்கிறோம். நம்முடைய அடிப்படை தேவையான உணவுகளையும் வெளியேறி எடுத்துக்கொள்கிறோம். இதை எப்போதாவது ஒருநாள் எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை, ஆனால் வெளியே சமைக்கப்படும் உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதினால் உங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் வீட்டில் செய்யப்படும் சுத்தமான உணவுகளை சாப்பிடுங்கள்.

வெளி உணவுப் பிரச்சனை

வெளியே சமைக்கப்படும் உணவில் பெரும்பாலான தேவையற்ற மசாலாக்களை கலந்து செய்கிறார்கள். வாடிக்கையாளரை கவர்வதற்காக இவர்கள் ருசியாக இருக்கும் மசாலாக்களை உங்கள் உணவில் கலந்து உங்கள் ஆரோக்கியத்தை அழித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு அஜீரண கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, கழிவுகளை வெளியேறுவதில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும். இது உங்கள் வாழ்க்கையை தரமற்றதாக மாற்றிவிடும்.

மேலும் படிக்க – சுற்றுப்புற சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்..!

எண்ணெயின் தரம்

ஓட்டல்களில் அதிக அளவில் உணவுகளை சமைக்க படுவதினால்  அவர்கள் எண்ணெய் மறுசுழற்சி செய்கிறார்கள். இதனால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கொழுப்பின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் அது அனைத்தும் கெட்ட கொழுப்பு என்பதால் உங்கள் உடல் எடையை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தை அழித்துவிடுகிறது. மிகப் பெரிய உணவகங்களில் கூட சில சமயங்களில் எண்ணெய்யை ஒருமுறை மறுசுழற்சி செய்கிறார்கள்.

தரம் குறைந்த உணவு

உணவகங்கள் என்பது நம்முடைய மன நிறைவுக்காக உருவாக்கப்படுவதில்லை. அது அவர்கள் இலாபத்திற்காக உருவாக்கப்படுவது. எனவே அவர்களுக்கு அதிக அளவிலான லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் தரம் குறைந்த உணவு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் நீங்கள் தொடர்ச்சியாக உணவகங்களில் உணவு அருந்தினால் உங்கள் உடல் ஆரோக்கியமும், தரம் குறையும்.

மேலும் படிக்க – யோகா தினசரி ஆரோக்கிய வாழ்கைக்கு அவசியம்!

சுத்தமற்ற உணவுகள்

நாம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை எப்போதும் சுத்தமான முறையில் சமைக்கிறோம். காய்கறிகள், மாமிசங்கள், மளிகை பொருட்கள் போன்ற அனைத்தையும் சுத்தப்படுத்தி அதை சமைத்து சாப்பிடுவதினால் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாது. ஆனால் உணவகங்களில் ஒரேமுறை சுத்தப்படுத்தி அதை சமைக்கிறார்கள், எனவே முடிந்தவரை அதை தவிருங்கள்.

எந்த சூழ்நிலையிலும் வீட்டு உணவை தவிர்த்து வெளியே சாப்பிடும் உணவில் உங்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதில்லை. எனவே எப்போதாவது ஒரு முறை ருசிக்காக உணவகத்தில் சாப்பிடலாம். அதை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டால் உங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன