உண்மைகளை உரக்க ஒலிக்கும் ஜோதிடம்!

 • by
characteristics according to your zodiac signs

ஜோதிடம் என்பது விண்ணில் உள்ள கோள்களின் நகர்வுகளை முதலாக கொண்டு வருங்காலத்தைக் கணிக்க உதவும் ஒரு வாழ்வியல் நம்பிக்கை. உலகில் பலரும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் பல்வேறு இடங்களில் ஜோதிடமும் சற்று வேறுபடுகிறது. இதில் பல்வேறு வகைகள், உட்பிரிவுகள் உள்ளது. உலகில் நடக்கும் அனைத்து நன்மை தீமைகளுக்கும் ஏதோவொரு தொடர்பு வான் பொருட்களுக்கும் உண்டு என்பது ஜோதிடத்தின் அசைக்க முடியாத உண்மை.

பிரசன்னம் என்பது :

பிரசன்னம் கூறுவதென்பது பிரசன்ன ஜோதிடரிடம் ஆலோசனைக்கு வந்துள்ள நபர் கேட்கும் கேள்விக்கு அப்போது வான் மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கருத்தில் கொண்டு பதில் அளிப்பதாகும். மேலும் இது ஜோதிடத்தில் ஓர் முக்கிய அங்கமாக உள்ளது.

 • ஜோதிடரிடம் பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
 • முதல் பிரசன்னத்தில் மூலமாக ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை காண முடியும்.
 • பல கேள்விகள் இருந்தால் பல முறை பிரசன்னம் பார்க்க வேண்டும்.

வருசப்ரவேச ஜாகதம் கணிப்பு :

 • பிறந்த தேதிக்கு முந்திய அல்லது பிந்திய தேதிகள் கூட வருசப்ரவேச நாட்களாக அமையலாம்.
 • கிழமைகளின் கூடுதல் 7-க்கு மேற்பட்டால் 7-ஐக் கழித்து வரும் எண்ணுக்கான நாளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • கிழமைகளில் ஞாயிறில் ஆரம்பித்துச் சனியில் முடியும்.
 • ஒருவரின் பிறந்தநேரம், கிழமை முதலியவை ரயில்வே கடிகார முறைப்படி எழுதப்பட வேண்டும்.
 • கிழமை தான் ஒருவரின் பிறந்த நாளைத் தீர்மானிக்கிறதே தவிர பிறந்த தேதியல்ல.

திரிம்சாம்சம் :

திரிம்சாம்சப் பலன்கள் ஆண்களை விட பெண்களுக்கு மட்டுமே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. ராசியை நவாம்சம், திரேக்காணம் மற்றும் த்வாதசாம்சம் என்று பலவகையாகப் பிரித்திருப்பதைப் போலத் திரிம்சாம்சம் என்னும் ஒரு பிரிவும் உண்டு. ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த மற்ற ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும் , அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் செவ்வாய்க்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள்.

ஜோதிட வகைகள் :

ஜோதிடத்தில் பலவகைகள் பல உட்பிரிவுகள் உள்ளது. இதில் குறிப்பிடத்தகும் ஜோதிட வகைகளை காணலாம்.

 • கைரேகை ஜோதிடம்
 • எண் ஜோதிடம்
 • குறி கூறுதல்
 • பெயர் ஜோதிடம்
 • ராஜநாடி ஜோதிடம்
 • நாடி ஜோதிடம்
 • கிளி ஜோதிடம்

இப்போதுள்ள சூழலில் பலரும் திருமணம், புது வீடு குடிபுகுதல், குழந்தைக்கு பெயர், ஜாதகம் என பலவற்றிற்கு ஜோதிடர்களை ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். இந்த வகையில் ஜோதிடர் சேத்தல்லூர் விஜயகுமார் குப்தன் அவர்கள் ஆன்லைன் மூலம் தன்னை அணுகும் மக்களுக்கு ஆலோசனைகளை நாமுறையில் வழங்கிவருகிறார். பல ஆண்டு ஜோதிட அனுபவம் பெற்ற ஜோதிடர் சேத்தல்லூர் விஜயகுமார் குப்தன் அவர்கள் பாரத பஞ்சங்கம் என்னும் மிகப்பெரிய ஜோதிட சேவையை அவர் துறைக்கு ஆற்றி எப்போதும் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையை வழங்கி வருகிறார்.

ஜோதிடர் சேத்தல்லூர் விஜயகுமார் குப்தன் அவர்களை அணுக…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன