தாமதமாக அமையும் திருமணத்திற்கான பரிகாரம் ஜோதிடத்தில் இருக்கிறது..

  • by
marriage astrology predictions

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற வார்த்தையை பெரும்பாலான பெரியவர்கள் நமக்கு சொல்லி இருப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த வார்த்தையை பதினாறாம் நூற்றாண்டிலேயே பிரஞ்ச் பழமொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். இத்தகைய பழமை வாய்ந்த திருமணம் அமைவது என்பது கணக்கிட முடியாத விதி. ஒரு சிலருக்கு திருமணம் பாக்கியம் விரைவில் கிடைக்கும் ஆனால் ஜாதகத்தின் பிரச்சினை உள்ளவர்கள் அல்லது திருமணத்தில் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் பாக்கியம் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இவர்கள் இந்த தடையை முறித்து திருமண யோகத்தை பெற வேண்டுமென்றால் ஒரு சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

ஜாதகப் பொருத்தம்

ஆண் பெண் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்றால் அவர்களின் ஜாதகம் முதலில் பொருந்துகிறதா என்று பார்ப்பார்கள், அதில் பத்தில் 8 பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு திருமணம் நடத்தப்படுகிறார்கள்.  அப்படி பொருத்தம் பார்த்து நடத்தப்பட்டாலும் அவர்களின் இல்லற வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பிரச்சனை முளைத்து கொண்டே இருக்கும். இதை தடுப்பதற்காகவே பத்து பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து திருமணத்தை செய்கிறார்கள். ஒரு சிலரின் வாழ்க்கையில் பொருத்தங்கள் சரியாக இருந்தாலும் அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் உண்டாகிய வண்ணம் இருக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே, அதை அறிந்து எப்படி சரியாக திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஜோதிடர்களிடையே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தாமதமாக அமையும் திருமணம்

தாமதமாக திருமணம் அமைவதற்கான காரணம் இரண்டு கோள்கள். ஆண்களுக்கு ஜூபிடர் பெண்களுக்கு வீனஸ், இந்தக் கோள்கள் இருக்கும் இடம் மற்றும் இதனுடைய சக்தி போன்றவற்றை பொருத்து தான் உங்கள் திருமணம் தாமதமாக அமைகிறது. திருமணம் யோகம் என்பது ஏழாவது இடத்தில் இருக்கும். அந்த இடத்தில் கோள்கள் சரியாக அமைந்து விட்டால் உங்கள் திருமண வாழ்க்கை செழிப்பாக அமையும். உங்கள் ஜாதகத்தில் ஏழாவது இடத்தில் சூரியன் அமைந்து விட்டால் நிச்சயம் உங்கள் திருமணம் தாமதமாகும்.

மேலும் படிக்க – ஏன் மற்றும் எப்பொழுது நாம் எண் ஜோதிடரை சந்திக்க வேண்டும்..!

உடனடி திருமணத்திற்கு பரிகாரம்

ஒருவருக்கு திருமணம் செய்ய வேண்டிய சமயத்தில் குருபலம் சரியாக இருந்து விட்டால் அவர்களுக்கு திருமணம் விரைவாக நடக்கும். இதனால் உங்கள் இல்லத்தில் அதாவது ஜாதகத்தில் உள்ள வீட்டில் குரு பலம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப திருமணப் பேச்சை தொடங்க வேண்டும். இதனால் உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் குரு பலன் இருந்தால் உங்களுக்கு திருமணம் நடப்பது மட்டுமல்லாமல் புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். ஒருவேளை உங்கள் இல்லத்தில் குரு பலன் இல்லை என்றால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பால் அல்லது தண்ணீரை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். “ஓம் பார்வதி பதயே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 30 வயது முதல் 35 வயது உள்ளவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் வீட்டு வெளியே ஒரு வாழை செடியை நடவேண்டும்.

இதுபோல் ஒவ்வொரு செயல்களினால் உங்கள் திருமண யோகம் மிக விரைவில் உங்களை வந்து சேரும். உங்கள் வாழ்க்கையில் திருமண யோகம் தள்ளிப்போனால் உடனே தெரிந்த ஜோதிடரின் அறிவுரையைக் கேட்டு அதற்கேற்ப பூஜைகளை செய்திடுங்கள். இதனால் நீங்கள் நினைத்ததை போல் உங்களுக்கு திருமணம் நடந்து, புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன