மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தை குறைக்க உதவும் ஜோதிடம்..!

  • by
astrology in tamil

ஜோதிடத்தில் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் உண்டு. நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் காலங்கள், நபர், சம்பவங்கள் போன்ற அனைத்தையும் முன்கூட்டியே அறிந்து உங்களை நோக்கி வர இருக்கும் அனைத்து பிரச்சனையையும் தீர்க்கும் சக்தியை கொண்டது தான் ஜோதிடம். நம்முடைய அனைத்து பிரச்சனையையும் முன் கூட்டியே அறிவதினால் அதை சமாளிக்கும் சிந்தனையும் நமக்கு கிடைக்கிறது. இதனால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் போன்ற பிரச்சினைகள் குறைகிறது.

நிலவிற்க்கான சம்பந்தம்

நம் முன்னோர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நிலவும் நம்முடைய மன நிலையும் ஒன்றாக இணைந்து இருக்கிறது என்கிறார்கள். இதனாலேயே அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் நம்முடைய மனம் மிகப் பெரிய அளவில் குழம்பி, தேவையில்லாத எண்ணங்கள் நமக்குள் உண்டாகிறது. இதுவே நம்முடைய மன அழுத்தத்திற்கான வேராக அமைகிறது. ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்து தான் இதுபோன்ற மனக்குழப்பங்கள் உண்டாகிறது. இதனால் தொடர்ச்சியான, தவறான எண்ணங்கள் தோன்றி தேவையில்லாத எதிர்மறை சிந்தனைகள் உண்டாகி நம்முடைய மன அழுத்தம் மற்றும் மன பதட்டம் அதிகரிக்கிறது.

astrology predictions in tamil

கோள்களின் அடிப்படையில்

நம்முடைய மன பிரச்சனையை உண்டாக்கும் தன்மை நிலவிற்கு உண்டு, அதே போல் புதன் என்பதே அறிவு சார்ந்த எண்ணங்களை உண்டாக்குவது. ஞானம் மற்றும் முதிர்ச்சி நிலையை அளிப்பது வியாழன் கோள் ஆகும். உங்கள் ஜாதகத்தில் இந்த மூன்று கோள்களும் பாதிக்கப்பட்டால் அது மன அழுத்தம் மற்றும் மன பதட்டம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்குகிறது. எனவே இந்த கோள்கள் பாதிக்காமல் நம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் நம் ஜாதகத்தை ஒரு முறைக்கு பல முறை சரியாக பார்த்து அதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – ராசிக் கற்களை அணிவதால் ஏற்படும் நன்மைகள்..!

செவ்வாயில் நிலவு

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள சூரியன் நிலவை பாதித்தால் அவர் உடனடியாக அமைதி நிலையை இழந்து கோபப்பட தொடங்கிவிடுவார். அதேபோல் செவ்வாய் நிலவை பாதிக்கப்பட்டால் அவர் மிகக் கோபமாக உருவெடுத்தது தாக்குதலில் ஈடுபடுவார். இதனால் காயங்கள் உண்டாகுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இது போல் உங்கள் ஜாதகத்தில் அமைந்திருக்கும் கோள்கள் எந்தெந்த இல்லத்தில் இருக்கிறதோ அதை அறிந்து உங்கள் மன அழுத்தம் மற்றும் மன குழப்பம் போன்ற பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கலாம்.

உங்கள் மனநிலை உங்கள் ஜாதகத்தை பொருத்து அமைகிறது. நீங்கள் எப்போதெல்லாம் குழம்புகிறீர்களோ அல்லது தேவையில்லாத எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அமைதி நிலைக்கு திரும்பி உங்கள் ஜோதிடரை சந்தியுங்கள். இப்போது ஜோதிடர்களை இணையத்தளம் மூலமாக சந்திக்கும் தொழில் நுட்பம் இருக்கிறது, அதை பின்தொடர்ந்து உங்கள் வாழ்க்கையை அமைதியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் கடந்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன