தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!

  • by
astonishing things about tanjore big temple

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றாலும் தஞ்சை பெரிய கோயில் என்றாலும் ஒன்றுதான். பிரகதீஸ்வரர் என்று கூறுவது சமஸ்கிருத மொழி ஆகும். அக்காலத்தில் சோழ நாடு மிகவும் செழிப்புடனும் வளமுடனும் இருந்ததற்கான சான்று பல புத்தகங்களில் உள்ளன. முக்கியமான ஒரு புத்தகம் பொன்னியின் செல்வன். அதில் சோழ நாடு எவ்வளவு சிறப்பு மிகுந்ததாக இருந்தது என்பதை மிகவும் அருமையாக விளக்கி இருப்பார்கள். வந்தியத்தேவன் என்னும் கதாபாத்திரம் சோழநாட்டை வர்ணித்து பேசும் நிகழ்வுகள் அதில் ஏராளம். இந்த பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூரிலுள்ள மிகப் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் ஆகும். 

பாரம்பரியச் சின்னம்

இந்த பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. உலகில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும். தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக இந்த கோவில் விளங்குகிறது. பத்தாம் நூற்றாண்டின் போது மிகவும் புகழ்பெற்ற மன்னராக இருந்த முதலாம் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டியிருக்கிறார். 2010ஆம் ஆண்டின் போது இந்த கோவில் கட்டி 1000 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன.

மேலும் படிக்க – திருவோண விரதத்தின் சிறப்புகள்..!

சுற்றுலா தலம்

தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக இந்த தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கருதப்படுகிறது. 1987 ஆம் ஆண்டின் போது இந்த கோவில்யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்

கோவிலின் வரலாறு

சோழ அரசன் இராஜராஜ சோழன் கட்டிய மிகசிறந்த சின்னமாக இந்த தஞ்சை பெருவுடையார் கோயில் காணப்படுகிறது. இக்கோயில் அந்த அரசன் ஆண்ட 19 ஆவது ஆண்டின் போது தொடங்கப்பட்டு பின்னர் 25 ஆவது ஆண்டின் போது முடிவடைந்து இருக்கிறது. இதில் சோழர்களின் ஆட்சி மற்றும் மக்களின் நாகரிகத்தைப் பறை சாற்றும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. சிற்பக் கலை கட்டிடக் கலை ஓவியக்கலை போன்றவற்றிற்கு சான்றாகவும் இந்த கோவில் காணப்படுகிறது. 

கோயில் உருவான வரலாறு

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் ராஜராஜனால் மிகவும் ஏற்கப்பட்டது. அதே போன்ற ஒரு கோயிலை தாம் இருக்கும் இடத்தில் நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கியது. அதன் காரணமாகவே தஞ்சை பெரிய கோயில் உருவானது. 

இக்கோயிலை கட்டுவதற்கு தலைமை சிற்பி ஆக இருந்தவர் ஆக குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் எனும் பெயர் அங்கு உள்ள சுவர்களில் பதிக்கப் பட்டு இருக்கிறது. இங்கு மிகவும் அதிசயம் வாய்ந்த ஒன்று என்றால் அது ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தியாகும். இந்த நந்தி 20 டன் எடையும் 2 மீட்டர் உயரமும் 6 மீட்டர் நீளமும் இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இன்றளவும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு அதிசய நிகழ்வாகவே தோன்றுகிறது. மேலும் இந்தியாவிலேயே இது இரண்டாவது பெரிய நந்தியாக கருதப்படுகிறது. அதன் பின்னர் பாண்டியர்களால் பதின்மூன்றாம் நூற்றாண்டின் போது அம்மன் சந்நிதியும் விஜயநகர அரசர்களால் முருகன் சந்நிதியும் கட்டப்பட்டு அதன் பிறகு வராது அரசர்களால் விநாயகர் சந்நிதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் மேம்பட தஞ்சை நாயக்கர்களின் பங்கு ஆக கூறப்படுகிறது.

மேலும் படிக்க – திருப்பதி திருமலையின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

இடைச்சிக் கல்

இந்த கட்டிட பணி நடந்துகொண்டிருந்தபோது இந்த கட்டண பணியாளர்களுக்கு உதவி செய்ய ஒரு சிவன் தொண்டு செய்யும் மூதாட்டி விரும்பினார். அவர் பெயர் அழகி. இந்த ஏழை முகத்தை தனக்கு இயன்ற வேலைகளை இந்த கோவில் கட்டுவதற்காக செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வேலை செய்யும் பணியாளர்களின் தாகத்தை போக்கும் விதமாக தயிர் மோர் போன்றவற்றை அவர்களுக்கு அருந்த வழங்கி வந்தார். இந்த மூதாட்டியின் சிவன் தொண்டை அறிந்த அருண்மொழி வர்மன் இந்த இதற்கு லாபத்திற்காக 80 டன் எடை கொண்ட ஒரு கல்லை உருவாக்கி அதற்கு அழகி என்று பெயர் பொறித்து ராஜ கோபுரத்தின் உச்சியில் இடம்பெறச் செய்தார். இந்தக் கல்லே இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அருமை அருள்மொழிவர்மன் மிகச்சிறந்த வீரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சோழ நாட்டின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை தவறாமல் படியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன