அருண் விஜய் மற்றும் பிரசன்னா கூட்டணியில் மாஃபியா!

  • by
arun vijay and prasanna's thriller film mafia

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் பல போராட்டங்களுக்குப் பிறகு என்னை அறிந்தால் படத்தின் மூலம் அவரது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு அவர் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெற்றிகரமான படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் படம்தான் மாஃபியா. இந்த படத்தில் அருண்விஜய், பிரசன்னா பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

கார்த்திக் நரேன்

இந்த படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு என்ற மிகச் சிறந்த படத்தை எடுத்த இயக்குனர் தான் இவர். தயாரிப்பு லைகா புரெக்டக்சன்ஸ். 

29 December 2016 அன்று வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சுமார் ஒரு மணிநேரம் 52 நிமிடம் இந்த படம் ஒளிபரப்பப்படுகிறது. 

இளம் வயதிலேயே துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன் என்பவர். இது இவருக்கு மூன்றாவது படம். நரகாசுரன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இதுவே இவரது இரண்டாவது படம். இந்த படம் வெளியாவதற்கு சில தடங்கல்கள் இருந்ததால் மூன்றாவது படமாக எடுத்த மாபியா இப்போது வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க – நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

1980

இந்த படத்தை பற்றி கூற வேண்டுமானால் போதைபொருள் மற்றும் கடத்தல் போன்றவற்றை மையமாக வைத்தே இந்த  படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் கருவை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக இந்த படத்தில் காதல் காட்சிகளோ அல்லது டூயட் பாடல்கள் கிடையாது. கதையை மட்டுமே நம்பி இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். தேவையற்ற ஜோக்குகளை தவிர்த்திருக்கிறார். தேவையில்லாமல் படத்தின் நீளத்தை அதிகரித்து நம்மை போரடிக்காமல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

இந்த படத்திலும் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக வருகிறார். போதை மருந்து பொருள் தடுப்பு பிரிவில் அதிகாரியாக இருக்கிறார் அருண் விஜய். இவரின் சகோதரர் போதைப் பொருள் வாங்கச் சென்றபோது மரணமடைந்ததால், போதைப் பொருள் இல்லாத நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு வாழ்கிறார். இந்த படத்தில் அவருடைய மேலதிகாரி மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சமூக சேவகர் போன்றோர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இந்த போதை கடத்தல் யாரோ ஒருவர் தான் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அருண்விஜய் சந்தேகப்படுகிறார். அவர் யார் என்பதை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருவதே அருண்விஜயின் நோக்கமாக இருக்கிறது. இறுதியில் அந்த தலைவன் பிரசன்னா என்று கண்டுபிடிக்கிறார். இந்த முயற்சியில் பிரசன்னாவிற்கு சொந்தமான ஒரு லாரி போதைப்பொருளை கண்டுபிடிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரசன்னா அவர் குடும்பத்தை பழிவாங்க அவர்களை கடத்தி கொலை செய்கிறார். சில விளக்கமாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சி அமைப்புகள் சுவாரஸ்யத்தை சிறிது குறைகிறது. அருண் விஜய்க்கு பிரசன்னாவுக்கும் இடையேயான சண்டை காட்சிகள் விவாத காட்சிகள் சற்று குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன.

இந்த படத்தில் அருண் விஜய்யின் ஹேர் ஸ்டைல் மற்றும் தாடி கம்பீரமான நடை போன்றவை ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. அருண் விஜய் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் திறம்பட தனது வேலையை செய்திருக்கிறார். 

ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர் இந்த படத்தில் அருண் விஜய்யின் உதவியாளர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இதில் காதல் காட்சிகளுக்கு அவ்வளவாக இடமில்லை என்பதால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஒரு பார்வை பார்த்து லேசான காதல் புரிகிறார். அருண் விஜய்யின் குறிப்புகளை கேட்டு அதை மட்டுமே செய்கிறார். அருண் விஜய்யின் உதவியாளராக வரும் மற்றொருவரும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். 

மேலும் படிக்க – பஞ்சாபி தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

இப்பொழுது வில்லனாக நடித்திருக்கும் பிரசன்னாவின் நடிப்பைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். நடுத்தர மல்டி மில்லினியர் தோற்றத்தில் தனது நடிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் அவரின் டயலாக் டெலிவரி ஒரு தனி அடையாளத்தை இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். ஒரு சில காட்சிகள் எளிதாக யூகிக்கும் வகையில் இருக்கிறது. பிஜாய் அவர்களின் பின்னணி இசை இந்த படத்திற்கு நல்ல பலத்தைக் கொடுத்து இருக்கிறது. கோகுல் பினாய் அவர்களின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. கார்த்திக் நரேன் அவர்களின் படத்துக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவு காப்பாற்றி இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன