கத்தரிக்காய் பிரியர்களா நீங்கள்?? முதலில் இதைப் படியுங்கள்.!

  • by
brinjal

கத்தரிக்காய்!!! இது சாதாரண மக்களின் அன்றாட உணவுகளில் தலையாயது.
எளிதில்  எங்கும் கிடைப்பதாலும் விலையும் மலிவாக இருப்பதாலும், செட்டிநாடு
சமையல் முதல் காஷ்மீர் கிச்சன் வரை இந்தியா முழுவதும் இதன் பயன்பாடு
அதிகம் உள்ளது.

வெளிநாட்டிலிருந்து நம்முடன் வந்து ஒட்டிக் கொண்ட காய்கறிகள்
போலல்லாமல் 4000 வருடம் பழமையானது இந்த கத்திரிக்காய்.உணவில்
மட்டுமல்ல சித்தம், ஆயுர்வேதம் என நமது பாரம்பரிய மருத்துவ முறைகளிலும்
கத்தரிக்காய்க்கு முக்கிய இடமுண்டு.

கத்தரியின் சிறப்பு 

கத்தரிக்காயின் தண்டும் வேரும் மூட்டுவலி,ஆஸ்துமா இதய நோய்க்கு மருந்து 
தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. டைப் 2 நீரிழிவு நோய்க்கு பாட்டி வைத்தியம்
ஆகவும் இந்த கத்திரிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு பாரம்பரிய
பெருமை கொண்ட கத்தரிக்கு வந்துள்ள ஆபத்து என்ன தெரியுமா??? அதை
விளக்கும் பதிவுதான் இது.

மேலும் படிக்க – கம்பில் இருக்கும் அதீத நன்மைகள்..!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி கத்திரி காய்

உலகில் எந்த நாட்டிலும் மனிதர்கள் நேரடியாக உண்பதற்காக மரபணு மாற்றம்
செய்யப்பட்ட பயிர்கள் இதுவரை வணிகரீதியில் பயிரிட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த பி.டி கத்தரிக்காயை வணிகரீதியில் பயிரிட்டு நம் சமயலறைக்குள் நுழைக்க அவசர அவசரமாக முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. இந்த பி.டி கத்திரிக்காயை பயிரிடும் விவசாயிகளுக்கு சட்டரீதியான அனுமதியை வழங்கி வருகிறது மத்திய அரசு. “மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் எந்த தனி அடையாளமும்
காட்டப்படாமல் பார்ப்பதற்கு நம்ம ஊர் கத்திரிக்காய் போன்றே தோற்றமளிக்கும் “
இது மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்று கூட நம்மால் கண்டுபிடிக்க
முடியாது. இந்த பி.டி கத்திரிக்காயை உருவாக்கியது அமெரிக்க பன்னாட்டு விதை
கம்பெனியான மான்சாண்டோ தான்.

கத்தரி செடியை தாக்கும் முக்கிய நோய்களான தண்டு புழு தாக்குதல், புழுத்
தாக்குதல் இவற்றை கட்டுப்படுத்த பேசில்லஸ் துரிஞ்சியன்ஸ் என்ற
தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை கத்தரியின் மரபணுவில் புகுத்தி
இருக்கிறார்கள் இப்படி செலுத்துவதற்கு பெயர்தான் மரபணு மாற்றுத்
தொழில்நுட்பம். இப்படி செய்வதன் மூலம் கத்திரியில் சாதாரணமாக ஏற்படும்
நோய்கள் தாக்காது. ஆனால், அதில் செலுத்தப்படும் பாக்டீரியா நம் மனித
உடலுக்குள் சென்று விஷமாக மாறுகிறது.

மரபணுமாற்றம் செய்யப்பட்ட பி.டி கத்திரியை உண்பதால் உடலில் ஏற்படும்
பாதிப்புகள்

1. ஒவ்வாமை

நம் உடலுக்கு அறிமுகமில்லாத ஒரு உணவுப் பொருளை காற்றில் சுவாசிக்கும்போது உண்ணும்போது நோய் எதிர்ப்பாற்றல் படுவேகமாக செயல்படும்.  இத்திறன் அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு இயல்பான விஷயங்களுக்கும் அரிப்பு முதலான விளைவுகளை ஏற்படுத்தினால் அதை ஒவ்வாமை எனலாம். மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம் சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம். நம் மனித
உடலுக்குள் புகுந்த உடனே நம் நோய் எதிர்ப்பாற்றல் விழித்துக்கொண்டு அதிகமான வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வெள்ளை அணுக்களின் பெருக்கத்தால் உடலில் அரிப்பு, தோலில் தடிப்பு, உடல் சிவத்தல் தொடங்கும். இன்னும் சிலருக்கு மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்பட்டு சுவாசத்தில் அதைத் தொடர்ந்து சிறுநீரக செயல் முடக்கம் என ஒவ்வாமையின் உச்சம் வரை அச்சத்தை ஏற்படுத்தும் இந்த பி.டி கத்தரிக்காய்.

ஆன்ட்டிபயாட்டிக்கின் செயல் திறனைக் குறைக்கிறது

நம் குடலுக்குள் ஏராளமான பாக்டீரியாக்கள் வைரஸ்கள் கூடி இருக்கின்றன.
அவை எல்லாம் சமத்தாக இருப்பதால்தான் நம் உடல் நலமாய் இருக்கிறது. இந்த
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் உள்ள இன்னொரு விலங்கினத்தின்
மரபணுவின் புரதம் நம் உடலினுள் செல்லும் பொழுது வயிற்றிலுள்ள நலம்தரும்
பாக்டீரியாக்களுக்கு கேடு விளைவிக்கிறது. இதனால் சாதாரண பேதி காய்ச்சல்
எல்லாம் மருந்து வேலை செய்ய இயலாத நிலையை இந்த மரபணு மாற்றப்பட்ட

உணவின் புரதங்கள் ஏற்படுத்தக்கூடும். ஆன்ட்டிபயாட்டிக் செயல்திறன்
பாதிப்படைவதால் சாதாரண நோய்கள்கூட பயங்கரமானதாக நமக்கு மாறிவிடும்.

புதிய நோய்களின் உருவாக்கத்திற்கு காரணம் 

நவீன மருத்துவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாமல் திக்குமுக்காட வைக்கும்
பல நோய்களை இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் ஏற்படுத்துகிறது. இதனால் சொரியாசிஸ், ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்  போன்ற நோய்கள் அதிகமாக பெருக வாய்ப்புள்ளது.

மலட்டுத்தன்மை 

ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உருவாக்கும் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆஸ்திரிய நாடுகளில் அனுமதிக்கப்படவில்லை. இவ்வகையான மரபணு பயிர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு கூட தடை விதித்திருக்கிறது அந்நாட்டு அரசாங்கம்.

மேலும் படிக்க – விந்தணு குறைபாட்டிற்க்கு வித்திடும் காரணங்களும், தீர்வுகளும்..!

புற்றுநோய்கள் 

தற்காலத்தில் மருத்துவ உலகிற்கு சவாலாகவும் இருக்கும் புற்றுநோய்  ஏற்பட
இன்றுவரை சரியான காரணங்கள் தெரிவதில்லை .வளர்ச்சி என்ற பெயரில்
இயற்கையை பெரிதும் சிரமப்ப்படுத்துவது தான் நீர், காற்று ,உணவு என
அனைத்திலும் மாசுக்களை கலந்ததுதான் இவ்வகை நோய்களுக்கு அடிப்படைக்
காரணமாக உள்ளது. இதில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தான் உச்சகட்டம்.
இயற்கையைச் சிதைக்கும் இந்த வன்முறையில் பெருவாரியான நோய்களில்
தலையாயது இந்த புற்று நோய் தான். புற்றுநோய் உடலில் தேவையான NK Cells
மட்டும் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களை மரபணு மாற்றம் செய்யப்பட்ட
பயிர்கள் கெடுகக்கூடும் என இப்பயிர் புரதத்தை ஆய்வு செய்த அறிஞர்கள்
கூறுகின்றனர்.

நேற்றுவரை சோதனைக்குழாய் எலி, முயல், பசுமாடு என்ன சோதிக்கப்பட்ட
மரபணு மாற்றப்பட்ட கத்திரி இன்னும் சில நாட்களில் நம் சாப்பாட்டு தட்டில்
வந்து உட்கார்ந்து கொள்ள போகிறது.

காசுக்கு விஷத்தை விற்க சொல்லி கடுதாசி போடுகிறார்கள் வெள்ளைக்காரர்கள்
நம் உடல் நலமுடன் இருக்க நம் உணவில் கவனம் செலுத்துவது
அவசியமாகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன