இந்திய பெண்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா..?

are women really independent in this country in modern society

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 72 வது ஆண்டு விழாவை கொண்டாடினார்கள் ஆனால்  இந்தக் கொண்டாட்டம் உண்மையானதா உலகத்தில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கின்றன ஒருவர் தன் நாட்டில் சுதந்திரமாக வாழும் வாழ்க்கையை எண்ணி, வருந்தி பின்பு அதற்காகப் போராடி பெற்றதுதான் நம் சுதந்திரம் ஆனால் இன்றுவரை பெண்களுக்கான சுதந்திரம் இந்தியாவில் கிடைக்கவில்லை என்றுதான் நாம் கூற வேண்டும் இதற்கான காரணம் என்னவென்றால் ஒரு பெண் எதை செய்கிறாள் என்பதை கூர்ந்து கவனிக்கப்பட்டு அதற்காக கொடுக்கப்படும் தண்டனை தான் கற்பழிப்பு என்று கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும் ஆண்கள் மிகவும் கௌரவமாக சொல்கிறார்கள் இது எந்த அளவுக்கு ஏற்கக் கூடியவை.

மேலும் படிக்க – உங்கள் உள்ளத்தை கிழித்து காதல் உணர்வை தூண்டும் சிறந்த காதல் பாடல்கள்!

இந்த நவீன சமுதாயத்தில் பெண்களை ஒரு சக மனிதராக பார்க்காமல் அவரை ஒரு போதை தரும் பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள் இதற்குக் காரணம் என்ன.? இந்திய மக்களா.? அல்லது இந்தியாவின் கல்வி முறையா.? சம்பந்தமில்லாமல் இதில் கல்விமுறை ஏன் வந்தது ஒருவன் சிறுவயதில் தான் செய்யும் நல்லது மற்றும் கேட்டது என்பதை நம் கல்வி முறை தான் நமக்கு கற்பிக்கிறது அதேபோல் நாம் பெண்களை எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் அவர்களின் சேவை மற்றும் செயல்கள் என்ன என்பதை நமக்கு உணர்த்த தவறிவிட்டது இந்த கல்வி முறை இதற்கு அடுத்து நம் காணும் திரைப்படங்கள் கூட பெண்கள் துன்புறுத்துவதற்க்கு காரணமாகிறது எல்லா திரைப்படங்களிலும் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் சாதாரணமாக காதலித்தால் பரவாயில்லை அந்த பெண்ணின் தலை முதல் கால் வரை அவளை உற்று நோக்கி அவளின் அழகு மற்றும் அங்கங்களை பார்த்து மயக்கமடைந்து அவளை காதலிக்கிறான் பின்பு அவள் விருப்பம் இல்லாமல் பின்தொடர்ந்து அவள் இவனை திரும்ப காதலிக்கும் வரை அவரை துன்புறுத்துகிறான் இதையெல்லாம் செய்யும் இவனை படத்தின் கதாநாயகன் என்று அவனுக்கென்று ஒரு பெருமையான அடையாளத்தை தருகிறார்கள் இதை கருத்தில் கொண்ட சிறுவர்கள் இதுதான் உண்மையான ஆண்மைக்குரிய செயல் என்று நினைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் பெண்களை பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் பெண்களை தவறுதலாக பார்க்கிறார்கள் இந்த தவறினால் தான் ஒரு பெண் ஒரு சக மனிதனாக பார்க்கப்படாமல் வெறும் சதைகளால் ஆன போதைப் பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள் இதை தவிர்த்து அவள் வலிமையில்  ஆணைவிட குறைந்து இருப்பதினால் அவளை மிக எளிமையான முறையில் தன் விருப்பத்திற்கு ஏற்ற பொம்மைகளாக மாற்றி விடுகிறார்கள் 

ஒரு ஆண் ஒரு தவறு செய்யும் பொழுது அவருடன் இருக்கும் சக நண்பர்கள் கூட இது தவறு என்று அவர்களுக்கு உணர்த்துவதில்லை சரியான கல்வி பெற்ற ஒருவர் தன் சக நண்பர்களுக்கு இது தவறு என்று உணர்த்தி அந்த செயலை தடுக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது ஆனால் இதை எத்தனை சதவீதம் நிறைவேற்றப்படுகிறது என்று தெரியவில்லை இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு கணக்கிட படாத கற்பழிப்புகள் மற்றும் பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதில் வெறும் பத்து சதவீதமே வெளிவருகிறது மற்றவைகள் எல்லாம் சகித்துக்கொள்ள பட்டு இது போன்ற செயல்களை செய்யும் ஆண்களை தண்டிக்கப்படாமல் தன் இச்சைகளை தொடர்ந்து செய்யுமாறு அனுமதிக்கப்படுகிறார்கள் இதுவே பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.

மேலும் படிக்க – காதலர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய காதல் திரைப்படங்கள்!

ஒரு இடத்தில் அதுவும் இரவு நேரத்தில் ஒரு பெண் தனியாக நின்று கொண்டிருந்தாள் என்றால் ஆண்களுக்கு தோன்றும் முதல் எண்ணம் இவள் தவறான பெண் என்று தான் இதற்கான காரணம் என்னவென்றால் நம் சமுதாயத்தில் இரவு நேரங்களில் எந்த ஒரு பெண் தனியாக ஒரு இடத்தில் நின்றாலோ அல்லது எங்கேயாவது சென்றாலும் அவள் வேறு ஒரு தொழிலை செய்யும் பெண் என்று முத்திரை அடிக்கப்படுகிறார்கள்  இந்த எண்ணத்தை ஆண்களை விட பெண்களே அதிகமாக நம்புகிறார்கள் இதற்காக எந்த ஒரு பெண்ணும் இரவு நேரங்களில் தனியாக நிற்பது அல்லது வெளியே செல்வதோ இல்லை அப்படி சென்றார்கள் என்றால் ஒரு ஆண் நண்பர்களிடம் செல்வார்கள் ஆனால் அந்த ஆண் நண்பர் பாதுகாப்பானவராக இருக்கும் வரை எந்த ஒரு பிரச்சனை இல்லை அதுவே அவன் போதைக்கு அடிமையாகி தன் சக தோழியையும் ஒரு போதை பொருளாக பார்த்துவிட்டான் என்றால் அந்தப் பெண்ணின் கதை அவ்வளவுதான் 

ஒரு ஆண் ஒரு பெண்ணை தைரியமாக பாலியல் துன்புறுத்தலை செய்கிறான் இதற்கு காரணம் நம் சமுதாயமே ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுவிட்டது என்று காவல் நிலையத்தில் பதிவு செய்ய சென்றால் என்றால் முதலில் நீ ஏன் அந்த இடத்திற்கு சென்றாய் என்று அந்த பெண்ணை தான் கேள்வி கேட்பார்கள் ஆண் என்பவன் இப்படி தான் இதை தான் செய்வான் என்று அவர்களுக்கு அறிவுறுத்துவார்கள் இது எந்த அளவிற்கு நியாயமானது இதுபோன்ற கேள்விகளால்தான் ஒரு ஆண் துணிச்சலாக தவறுகளைச் செய்கிறான் இது பாலியல் வன்கொடுமை உடன் நின்றுவிடாமல் அந்த பெண்ணை துன்புறுத்தி கொலை செய்யும் அளவிற்கு செல்கிறார்கள் நம் சுதந்திர இந்தியாவில் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சென்றால் என்றால் நிச்சயம் அவர்களுக்கு ஏதாவது ஒரு கசப்பான அனுபவம் நிகழ்ந்துவிடும் அது பெண்களை தொடுதலால் மட்டும் நிகழ்த்த படுவதில்லை பார்வைகளினாளும் நிகழ்த்தப்படுகிறது இரவு நேரங்களில் வெளியே செல்லும் பெண்களை தவறுதலாக சொல்லும் முதல் பெண்மணி அந்த பெண்ணின் அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அல்லது அவர்களின் உறவு பெண்கள்தான் இந்த எண்ணத்தை இவர்கள் மனதிலிருந்து மாற்றி தன் பிள்ளைகளுக்கு பெண்கள் என்பவள் தான் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்வாள் அதை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று தன் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு சொல்லி புரிய வைத்திருந்தால் நிச்சயம் இந்த கற்பழிப்பு சதவீதம் சற்று மாறி இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் இது இவளுக்குத் தேவைதான் என்று சொல்லும் பெண்களினால் ஆண்கள் ஊக்கப்படுத்த படுகிறார்கள். 

மேலும் படிக்க – சிறந்த பத்து காதல் தோல்வி தமிழ் பாடல்கள்!

இந்திய சட்டம் எப்படி ஒரு குற்றவாளிக்கு தண்டனை தருகிறதோ அதற்கு சமமாக ஒரு ஆண்கள் ஒரு பெண்ணுக்கு நான் தண்டனை தருகிறேன் என்று நினைக்கும் வகையில்தான் இந்தியர்களின் குற்றச் செயல் செய்யும் குற்றவாளிகளின் மனநிலையில் இருக்கிறது இதை அனைத்தையும் தடுக்கவேண்டும் என்றால் சிறு வயது முதல் நாம் இதற்கான ஒரு பாடத்தை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் இந்த செயலை இன்று தொடங்கினால் அடுத்த பத்து வருடங்களில் இதுபோன்ற செயல் வெகுவாக குறைந்திருக்கும் அப்படி இல்லை என்றால் இந்திய சட்டத்தை பெண்களை கற்பழிப்பது மாற்றி அமைக்க வேண்டும் ஒருவர் கற்பழித்து விட்டார் அல்லது பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டால் என்று போதுமான ஆதாரங்கள் கிடைத்தபின்பு உடனடியாக அவருக்கு மிகவும் கொடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் அது அனைத்தும் மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தினால் தான் இது போன்ற செயல்களை எவரும் துணிச்சலாக செய்ய மாட்டார்கள் 

கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றன உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் இது போன்ற பிரச்சனை ஏற்படுவதினால் அதை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை உலகில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நாடுகளில் மக்கள் தொகை எப்போதும் குறைவாகவே உள்ளது இதனால் தான் மனிதர்களின் மதிப்பு அவர்களுக்கு தெரிந்த ஒருவரை ஒருவர் மதித்து வாழ்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அவரின் அரசாங்கம் கல்வியில் இவர்களின் வாழ்க்கை மற்றும் அதன் காரணங்களை தெளிவாக எடுத்து வைக்கிறார்கள் இதுவே நம் நாட்டில் ஒருவர் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யலாம் ஆனால் அவர் ஒரு ஆணாக இருக்க வேண்டும் என்ற சொல்லப்படாத சட்டத்தை எழுதி உள்ளார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் இருந்த ஆணாதிக்கம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது தான் உண்மை இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் பெண்களை சித்தரிக்கும் படத்தை முதலில் தவிர்க்க வேண்டும் ஒரு ஆண் எப்போதும் வலிமையாகவும் முரட்டுத்தனமாகவும் காட்டப்படும் இந்த சமுதாயத்தில் ஒரு பெண் அழகாக தான் இருக்க வேண்டும் இதுபோன்ற ஆடைகளைத் தான் அணிய வேண்டும் என்ற விளம்பரத்தினால் தான் பெண்களின் பிறப்பைப் பற்றி ஆண்கள் தவறான எண்ணத்தை கொண்டுள்ளார்கள் ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும் போது அவளை எந்த அளவுக்கு புனிதமானவள் என்று நினைக்கிறானோ அதே பெண்ணிடம் காதல் தோல்வி அடைந்தவுடன் அவனை கொலை செய்யும் அளவிற்கு செல்லும் எண்ணத்தை இந்த ஆண்கள் கொண்டுள்ளார்கள் எனவே இந்த எண்ணங்கள் அனைத்தும் மாற வேண்டும் என்றால் இது போன்ற செயல்களை செய்யும் ஆண்களை சிறையில் அடைத்து வயது முதியவர்களாக ஆகும்வரை விடுவிக்காமல் தன் தவறுகளை உணர வைக்க வேண்டும் அதை அவ்வப்போது விளம்பரப்படுத்தி மக்களுக்கு காண்பிக்க வேண்டும் 

இதை தவிர்த்து இன்று சிறுவர்கள் சிறுமிகளாக இருப்பவர்கள் இடையே ஆண் பெண் உறவை பற்றி தெளிவான எண்ணத்தில் அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்  இது அவர்கள் வளர்ந்த பின் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்க்க உதவும் இது அனைத்திற்கும் மேலாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் ஆண்-பெண் உறவில் இருக்கும் அற்புதங்களைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும் இருவரையும் சமமாக வளர்த்து ஒரு ஆண் ஒரு பெண் எப்படி வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் தெளிவை அவர்கள் கற்பித்தார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் மனதில் ஒரு சக மனிதனின் மேல்  எப்படி மரியாதை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அனைத்து குடும்பங்களிலும் இதேபோல் தனது பிள்ளைகளுக்கு கற்பித்தார்கள் என்றால் நம் அடுத்த சமுதாயம் மாற வாய்ப்புள்ளது இதற்கு நாம் செய்ய வேண்டியவை என்னவென்றால் பெண்களைப்பற்றி தவறுதலாக சித்தரிக்கும் படங்கள், விளம்பரங்கள் மற்றும் செய்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும் இவைகளிலிருந்து தான் பெண்களை தவறுதலாக பார்க்கும் எண்ணம் இளைஞர்களுக்கு தோன்றுகிறது இவை அனைத்தையும் நிறுத்துவதற்கு தேவையானவை கடுமையான சட்டங்களும் உறவுகளைப் பற்றிய கேள்விகளும் தான்.

1 thought on “இந்திய பெண்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா..?”

  1. Pingback: do this to remove dark from face and neck - beauty tips

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன