கோவிட்-19 பற்றிய கேள்வி மற்றும் பதில்கள்..!

  • by
answers for your question related to covid 19

கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸை பற்றிய போதுமான விழிப்புணர்வு எல்லா மக்களிடமும் இருக்கிறது. இது மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு மிக எளிதான முறைகளில் பரவக்கூடிய கொடிய வைரஸாகும். உலகில் உள்ள ஏராளமான மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து இன்றும் இதனால் தவித்து வருகிறார்கள். எனவே இதைப்பற்றி ஒரு சிலருக்கு ஒவ்வொரு விதமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதில் மக்கள் அதிகளவிலான கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்புகளை இங்கே காணலாம்.

மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுமா

கொரோனா வைரஸ் என்பது சார்ஸ் வைரஸ் வகையை சேர்ந்தது. எனவே 2002 ஆம் ஆண்டு சீனாவில் ஒரு பூனையிடம் இருந்து இந்த சார்ஸ் வைரஸ் மனிதருக்கு பரவியது. அதே சார்ஸ் இனத்தை சேர்ந்த மார்ஸ் வைரஸ் என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒட்டகத்திலிருந்து மனிதருக்கு பரவியது. ஆனால் இன்று வரை இந்த வைரஸ் தொற்று மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்குவ் பரவுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் மனிதரிடமிருந்து ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இருந்தும் தெருவோரங்களில் இருக்கும் விலங்குகள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. இதன் மூலமாக நமக்கு இந்த வைரஸ் தொற்று பரவாது என்பது ஆதாரமற்ற உண்மையாகும்.

மேலும் படிக்க – வேலைப்பளுவுடன் கண்களை பாதுக்காக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் அறிகுறிகள்

நாம் தும்புவதன் மூலமாக உடனே நமக்கு கொரோனா இருக்கிறது என்று என்ன வேண்டாம். கொரோனா வைரஸ் வருவதற்கு முதலில் உங்கள் உடல் உஷ்ணமாகும், பின்பு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும் அதைத் தவிர்த்து மார்பிலிருந்து இருமல் ஏற்படும். மேலும் அடிக்கடி தும்மல் மற்றும் உடல்வலி ஏற்படும். இவை அனைத்திற்கும் மேலாக உங்கள் நாவின் சுவை தன்மை குறையும். இந்த அறிகுறிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே அது கொரோனாவாக இருக்க முடியும். இதில் ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டாலும் அதை நினைத்து பயப்படுவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸிற்க்கான மருந்து

கொரோனா வைரஸிற்கான மருந்தை இன்றுவரை எந்த நிறுவனமும் கண்டுபிடிக்க வில்லை. இருந்தாலும் இதற்கான வேலைகளை உலக சுகாதார துறை மற்றும் ஏராளமான உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சி கூடங்களில் செய்து வருகிறார்கள். இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்கு மேலும் ஆறு மாத காலம் ஆகும் என்று உலக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நோய் தொற்றுக்கான மருந்தை ஒன்றுக்கு மேற்பட்ட வையாக கண்டுபிடிக்கும் சூழல் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும் படிக்க – இந்தியாவில் வௌவால்களில் கொரானா உறுதி!

பாதுகாப்பு வழிகள்

உலக சுகாதார அமைப்பு எல்லா நாடுகளுக்கும் கொரோனாவிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற வழிகளை கூறியுள்ளது. நாம் இருபது நிமிடத்திற்கு ஒருமுறை கை கழுவுவதன் மூலமாக நாம் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும். அதே போல் முகமூடி மற்றும் சமூக இடைவெளி மிக முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களை இந்த வைரஸ் தொற்று குறைவாகவே தாக்குகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்க கூடிய விசயங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

அதேபோல் இந்த வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் இடங்களில் வேலை செய்யும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை இந்த வைரஸ் தொற்று தாக்கத் தொடங்கி விட்டது. எனவே அதிக அளவிலான பாதுகாப்பில் இருப்பவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று தகிக்கிறது எனவே உங்களை மிக எளிதாகவே பாதிக்கச் செய்யும். எனவே அதை புரிந்து அரசாங்கம் சொல்லும் வழிகளை பின்தொடர்ந்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன