கொரானா நன்கொடை திரட்டும் அனிருத் இசைமழை

  • by

இசையில் இதுவரை  அடித்துவம்சம் செய்த அனிருத் முதன் முறையாக கொரானாவை ஓட வைக்க பாட்டுப்பாடி நிவாரண தொகை திரட்டவுள்ளார்.  இளம் வயதில் இசை அமைக்க தொடங்கிய இசைமைப்பாளர் அனிருத் பக்கா மாஸ் லுக் ஆனால்  லோக்கல் மாறாத பேஸ் கொண்டவர், தான் ஒரு சென்னைப் பையன் என்பதை சென்னை  பாடல்கள் இரண்டிலும் அழகுடன் சென்னை   தொனியை அள்ளித் தெளித்திருப்பார். 

இளம் வயதில் இசை மீது காதல் அவரை, இசை இளையமாக மாற்றியுள்ளது. தலைக்கு  அவர் பாடி கெத்தவிடாத, கெத்தவிடாத பங்கு கெத்த விடாத என்ற   வரியானது வாசம் இல்லாத  கல்லையும் வசைப்பாட வைக்கும் அந்த அளவிற்கு இசையில் பலம் காட்டியிருப்பார்.   இவ்வளவு பெருமைமிக்க அனிருத் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண உதவி செய்யப் பாட்டு பாடி நிதி திரட்டுகின்றார். 

 கொரோனாவால் 33 ஆயிரம் பேருக்கு மேல் இந்தியாவில் அல்லல்ப்பட்டு கொண்டிருக்கின்றனர்.  இதுவரை 8,325 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரொனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கில்  நிற்கின்றது. நாட்டில் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. காவல் துறையும், அரசாங்கமும், நாட்டில் எல்லைப் படை வீரர்கள் இவர்களைத் தவிர தினக்கூலி செய்யும்  காய்கறி வியாபாரிகள் ஆகியோர்  பணிகள் செய்கின்றனர். ஆனால் மற்ற அனைவரும் எங்கும் செல்ல முடியாது.  கொரானா  தொற்றிலிருந்து மக்களை காக்க நாடுகள் அனைத்தும் மெனக்கெடுகின்றன. 

ஊரடங்கு நன்கொடைகள்:

ஊரடங்கால் பெரும்பாலான தின வேலை செய்யும் மக்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்காக அரசு பல சலுகைகள் கொடுத்துள்ளது. இருந்தும் அரசு நன்கொடைகள் கொரானா   நிதி வாங்கி மக்களுக்கு கொடுக்க ஆரம்ன்பித்தது. நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழில்நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவி வருகின்றனர். தமிழ் நாட்டில் உள்ள  அறக்கட்டளைகள் மற்றும் தனார்வாலர்கள் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு உதவி வருகின்றனர். 

மேலும் படிக்க:ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பனை வெல்லம்..!

அனிருத் யூடியூப் இசைப் பயணம்:

இசையமைப்பாளர் அனிருத், யுடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு அதன்  மூலம் நிவாரண நிதி திரட்ட பங்கேற்கின்றார். இந்த தகவலை அவரே  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ,இரவு 8.52 மணி நேரத்தில்  ரசிகர்கள் தங்களுக்கு விரும்பமான பாடல்களைக் கேட்கலாம் என தெரிவித்திருந்தார். அதன்படி கலக்கலாக செய்தும் முடித்தார். இது போன்ற முயற்சிகள் நன்கொடைகள் கொரானா காலத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமாகின்றது என்பதை நாம் அறிய வேண்டும். 

கொரானா  என்ற கொடிய அரக்கன் வருகையால் நாட்டு மக்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். சென்னையில்  இன்றும் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.  தமிழ் நாட்டில் ஊரடங்கு படிப்படியாகத்தான் தளர்த்தப்படும் இப்பொழுது ஊரடங்கை தளர்த்த முடியாது. ஆனால் எமர்ஜென்சி பாஸ் எனப்படும் இ பாஸீனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இதன்படி மிகவும் அவசரமான அவசியமான தேவையை ஒட்டி சென்று வரலாம்.  இதுபோல் கொஞ்சம கொஞ்சமாக அரசு ஊரடங்கை தளர்த்தும். ஆனால் நாட்டிலுள்ள 40% துறைகள் திறக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. இதனையொட்டி அரசு பலமாக திட்டமிட்டு செயல்படும். விரைவில் கொரானாவை விரட்டிவிட்டு வீதியில் சமூக விலகலுடன் வாழ்வோம்.

மேலும் படிக்க: மகத்துவ சத்துக்கள் பல கொண்ட மல்லி விதை

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன