பழங்கால தமிழர்களின் கோவில்..!

  • by
ancient tamil temples

இந்தியாவில் கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் மாநிலம்தான் தமிழ்நாடு. தென்னிந்தியாவை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் ஏராளமான பழங்கால கோவில்கள் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொரு கோவில்களிலும் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையை மிகவும் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் செதுக்கப்பட்டது. இன்றும் வரலாற்றில் அழியாமல் இருக்கும் கோவில்களை இங்கே காணலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

பார்வதியின் அவதாரமாக பார்க்கப்படுபவர் தான் மீனாட்சி அம்மன். அதேபோல் சிவனின் அவதாரம் தான் சுந்தரேஸ்வரர் எனவே அவர்களை வழிபடுவதற்கும் மட்டுமல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை காண்பதற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். இந்த கோவிலை கிபி ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்பு இஸ்லாமியர்கள் இந்த நகரை ஆக்கிரமித்ததினாள் இந்த கோவிலை சேதப்படுத்தினார்கள். பின்பு நாயக்கர்கள் மீண்டும் மதுரையை ஆளத் தொடங்கினார்கள். இதைப் பயன்படுத்தி அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலை அவர்கள் புதுப்பித்தார். இந்தக் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூண்களும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டவை அதிலிருந்து எழுப்பப்படும் ஓசை வெவ்வேறு விதமாக ஒலிக்கும். இது போன்ற பல சிறப்புகளைக் கொண்டது இந்த கோவில்.

மேலும் படிக்க – கல்லாக மாறும் மரங்கள்!!!

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்

சோழர்களினால் கிபி பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் இந்த கோவில். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. யுனெஸ்கோ பாதுகாக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 216 அடி உயரம் கொண்ட இந்தக் கோவிலின் மேல் பகுதியில் உள்ள விமானம் கிட்டத்தட்ட 80,000 கிலோ எடையைக் கொண்டது. இக்காலத்தில் ஆயிரம் கிலோ கொண்ட பாரையையே நம்மால் நகர்த்த முடியாமல் கஸ்டப் பட்டு வருகிறோம். ஆனால் அக்கால சிற்பக் கலைஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் இதை எப்படி கொண்டு வந்து அதை எந்தக் கருவியின் மூலமாக செதுக்கி உள்ளார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்தக் கோவிலைச் சுற்றி நூறு கிலோமீட்டர் அளவில் எந்த ஒரு கிரானைட் குவாரிகள் கிடையாது இருந்தும், இவர்களுக்கு இந்த பாறை எங்கிருந்து கிடைத்தது மற்றும் இதை எப்படிக் கொண்டு வந்தார்கள் என்பது புதிராக உள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில்

திராவிடர்களின் கட்டுமானத்தில் மிக முக்கியமான கோவில் இது. இதைத் தவிர்த்து ஆசியாவில் மிக உயரமான கோவிலும் இதுதான். கிட்டத்தட்ட 236 மீட்டர் உயரம் கொண்டது இந்தக் கோவில். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில், இந்தக் கோவிலில் விஷ்ணுவை கடவுளாக வணங்கி வருகிறார்கள். இந்தக் கோவில் எந்த காலத்தில் உருவானது என்று தெளிவாக தெரியவில்லை இருந்தாலும் கட்டிடக்கலை நிபுணர்கள் மூலமாக இது கிட்டத்தட்ட கிபி பத்தாம் நூற்றாண்டில் சோழர்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூண்கள் மற்றும் போர் புரிவதற்கு தயாராக நிற்கும் குதிரைகள் என ஏராளமான சிற்பங்களை கொண்டதுதான் இந்த கோவில்.

காஞ்சிபுரம்

காஞ்சி கைலாசநாதர் கோவில் தென்னிந்தியாவில் வழிபடுவதற்கான சிறந்த கோவிலாகும். இந்த கோவிலை கட்டும் பணி கிபி 7ம் நூற்றாண்டில் துவங்கி 8ம் நூற்றாண்டில் முடிவடைந்தது. இது பல்லவர்களின் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். சிவனுக்காக உருவாக்கப்பட்ட இந்த கோவிலில் 16 திசைகளை கொண்ட சிவனின் உருவத்தை கருப்பு கிரணிட் கற்களினால் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் பார்வதி நடனமாடுவதைப் போன்ற சிற்பங்களை அமைத்து உள்ளார்கள்.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மற்றொரு சிறப்புமிக்க கோவில்தான் ஏகாம்பரேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சிறப்பாக பஞ்ச பூதங்களை சிவன் எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் என்பதை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட கோவில் தான் இது. இந்தக் கோவிலின் பெயர் காரணம் என்னவென்றால் மாமரம். எனவே இங்குள்ள மாமரம் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. கிபி 600 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று சொன்னாலும் இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் கிபி 11 முதல் 12 நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூண்கள் மற்றும் 1008 சிவ லிங்கங்களை அக்காலத்தில் வாழ்ந்த விஜயநகர அரசர்கள் உருவாக்கினார்கள் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க – கிரகணங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது!

கபாலீஸ்வரர் கோவில் சென்னை

ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதுதான் இந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இதை 16ஆம் நூற்றாண்டு போர்ச்சுகீஸ்கர்களால் புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விஜயநகர அரசர்கள் இந்தக் கோவிலை கைப்பற்றினார்கள். சிவனை வழிபடும் இந்த கோவில் மயிலாப்பூரில் அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் கோவில், சிதம்பரத்திலுள்ள தில்லை நடராஜர் கோவில் போன்றவைகளும் மிகவும் சிறப்புமிக்க கோவில்கள். இதில் ஏராளமான வரலாறுகள் மற்றும் அற்புதமான சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை அடங்கி உள்ளது. தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த இடங்களை நிச்சயம் பார்த்துவிட்டு தான் செய்வார்கள். எனவே தமிழ்நாட்டில் உள்ள நாமும் இந்த கோவில்களை பார்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன