கடலுக்குள் மூழ்கி இருக்கும் பண்டைய காலத்து நகரங்கள்!!!

  • by
ancient cities which are drowned in water

பண்டைய காலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி பல பகுதிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம். 

போர்ட் ராயல்

ஜமைக்காவில் உள்ள இந்த போர்ட் ராயல் கடற் கொள்ளையர்களுக்கு பெயர் போன ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. இந்த இடத்தில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தினால் இந்த தீவு கடலுக்குள் மூழ்கிய தாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக கூறுகின்றனர். 

மேலும் படிக்க – கொரானாவிலிருந்து வீட்டுப் பெரியோர்களை காத்தல்

பிரமிட் ஆஃ ப் யோன குனி ஜிமா

ஜப்பானில் உள்ளது இந்த யோன குனி நினைவுச்சின்னம். இது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது தானாக உருவானதா என்று இன்று வரை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கிடைத்த ஆதாரங்களை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்தபோது இது இயற்கையாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நம்பப்படுகிறது. அப்படி இல்லை என்றால் இது மனிதராக மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தால் கடைசி பனி யுகத்தில் இது அமைக்கப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதுவும் இயற்கை சீரழிவு காரணமாக கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

துவாரகை 

கடலுக்கு அடியில் மூழ்கிய பண்டைய நகரங்களில் மிகவும் முக்கியமான ஒரு இடம் துவாரகை. பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த இடம் என்று இந்த துவாரகை இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. இயற்கையால் ஏற்பட்ட சீரழிவால் இந்த இடம் கடலுக்குள் மூழ்கிதாக நம்பப்படுகிறது. கடந்த  2000 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் உள்ள இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புராண கதையில் இந்த இடத்தைப்பற்றி 70,000 மாளிகைகளும், தங்கமும், வைரமும் நிறைந்த இடமாக கூறுகின்றனர். இந்த நகரம் தற்போது கடலுக்குள் 135 அடி கீழே மூழ்கி இருக்கிறது.

லயன் சிட்டி ஆப்  குயன்டோ லேக்

சீனாவில் உள்ளது இந்த லயன் சிட்டி ஆப்  குயன்டோ லேக். பல நுணுக்கமான கட்டிட கலை  வேலைப்பாடுகளுடன் இந்த இடம் அமைக்கப்பட்டிருக்கிறது. கடலுக்கு அடியில் மூழ்கிய மிகவும் அற்புதமான நகரங்களில் இதுவும் ஒன்று. இங்கு இருக்கும் சிலைகள் அனைத்தும் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் சீனாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க – சித்த அமைப்பின் மருத்துவ முறைகள் !

கிளியோபாட்ரா மாளிகள்

எகிப்து நாட்டில் வாழ்ந்த ராணி கிளியோபாட்ராவின் மாளிகை தான் இது. இதுவும் நீருக்கடியில் மூழ்கியிருக்கிறது. இந்த நகரம் ஒரு பூகம்பத்தின் போது கடலுக்கடியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ராணி கிளியோபாட்ராவின் கல்லறை ராஜமாளிகை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவைகளும் இங்கு மூழ்கிவிட்டன. இந்த இடம் இப்பொழுது சுற்றுலாத் தலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன