கரோனாவிற்க்கு மருந்து….! மாற்றி யோசிக்கும் அமெரிக்கா!

  • by
america's different approach to find medicine for corona virus

உலக நாடுகள் அனைத்தையுமே  அச்சுறுத்தலில் கொண்டுள்ள ஆட்கொண்டுள்ள கரோனா என்ற கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளும் இந்த நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு  பல ஆராய்ச்சிகளை செய்து மருந்துகளை கண்டு பிடித்து சோதனை செய்து வருகின்றனர்.

ஆனால்  அமெரிக்காவிலோ  கரோனாவிற்க்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதை விட  மனித புரதங்களின் அந்த வைரசின் பெருக்கத்தை குறைக்க  மருந்து கண்டுபிடித்து வருகின்றனர்.

மாற்றி யோசிக்கும் அமெரிக்கா  தீர்வு கிடைக்குமா?

உலகம் முழுவதும் அறிவியல் அறிஞர்களும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்  பயோ சயின்ஸ் இன்ஸ்டியூட் கரோனா வைரஸ் ரிசர்ச் குரூப் இவர்களின் அணுகுமுறை வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது. மற்றவர்கள் வைரசை அழிக்கக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவோ மனித செல்களில் உள்ள புரதத்தின் பாதுகாப்பு கவசமாக செயல்படக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க முயல்கின்றனர். 

மேலும் படிக்க – பப்பாளி மற்றும் கருஞ்சீரகம் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்..!

கரோனா வைரஸின் வளர்ச்சிக்கு  மனித புரதம் தேவையான ஒன்று. வைரஸ் உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் மனித செல்களில் உள்ள புரதங்களை நம்பியிருக்கிறது . கரோனா வை அழிப்பது  சற்று கடினமான ஒன்றாக இருப்பதால், அந்த வைரஸ் உயிர்வாழும் மனித புரத செல்களை பாதுகாப்பதற்கான மருந்துகளை கண்டறிவது சிறந்தது என எண்ணி அமெரிக்காவின்  அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வைரசை அழிப்பதற்கு பதிலாக அது பெருக்கம் அடையும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது சிறந்ததாகவே இருக்கிறது.

கரோனா வைராசுக்கு   வேறு சில மருந்துகள் கண்டுபிடிக்க பட்டனவா?

பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க உதவுபவை என இதுவரையிலும் 50  மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மருந்துகளில் பலவும் புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுவதாக இருக்கின்றன.   நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையிலும் பாரீசில் பாஸ்டர் உள்ள அறிவியலாளர்கள் இந்த மருந்துகளை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள். உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சிகளில்  ஈடுபட்டிருக்கின்றனர். பல ஆண்டுகாலம் செய்க்கூடிய இந்த ஆராய்ச்சிகளை ஒரு சில வாரங்களில் அவர்கள் முடித்திருப்பது பெரும் சாதனையாக தான் இருக்கிறது.

வயதானவர்களை அதிகம் பாதிக்கிறதா?

கரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக பல்வேறு வதந்திகள், மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. அவற்றில் ஒன்று இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை வயதானவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான். இது முற்றிலும் தவறான கருத்து அமெரிக்காவில் சுமார் 25 ஆயிரம் நோயாளிகளை வரிசைப்படுத்தினர். இதில் 38 சதவீதத்தினர் 20 முதல் 54 வயதிற்கு உட்பட்டவர்கள். இதிலும் சரி பாதிக்கு மேற்பட்டவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். வயதானவர்கள் கூடுதலான அபாயத்தை எதிர் கொள்கிறார்கள் என்றாலும், இளைஞர்களும் அபாய வளையத்துக்குள் தான் இருக்கிறார்கள் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் நிதி ஒதுக்கீடும்  எவ்வளவு?

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள அமெரிக்காவில் 7 லட்சத்து 88 ஆயிரத்து 345 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் இந்த நோய் தொற்று பரவியுள்ளது. இதுவரையில் 50 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது இந்த பிரச்சனை சுமார் பதினெட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து  அமெரிக்காவில் வைரஸ் காய்ச்சல் எதிர்கொள்ள 7, 88,345 கோடியை அந்த நாட்டு அதிபர் ரொனால்ட் ரம் ஒதுக்கியுள்ளார். இதற்கான மசோதாவில் நேற்று அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிதியின் மூலம் கரோனா வைரஸ்

காய்ச்சலுக்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும். அடுத்த கட்டமாக 97 லட்சத்து 59 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான சிறப்பு நிதியை ஏற்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும் படிக்க – வெந்தயத்தால் செய்யப்படும் ஷாம்பூ, அதன் பலன்கள்..!

பெருஞ்சுவரை தாண்டிய பேரிடி 

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த பேரழிவு தொற்றுநோய் இன்று உலகம் முழுவதும் மிக விரைவாக பரவி வருகிறது. இந்த தொற்று நோய் எப்படி கண்டம் விட்டு கண்டம் இவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதை மனித மூளை களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. தொற்று நோய்க்கு ஆளானவர்கள் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக பெருகிக்கொண்டே வருகின்றன. அமெரிக்காவில் முதலில் 5000 பேருக்கு மட்டும்தான் நோய்த்தொற்று இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் அது ஒரு சில நாட்களுக்குள்ளேயே பத்து லட்சத்தையும் தாண்டி விட்டது. இது எப்படி சாத்தியமாகும் என்று ஆராய்ச்சியாளர்களின் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கரோனா வைரஸ்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன