அமெரிக்காவைவிட இந்தியா பாதுகாப்பானது அமெரிக்கர்கள் கருத்து

  • by

உலகின் மிக மோசமான கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து திரும்ப அழைத்து வர விமானங்களை ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் அவர்களில் பலர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. மாறாக, அமெரிக்காவில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கு நாட்டில் தங்குவதற்கு விசா நீட்டிப்புகள் தேவை. இந்த இந்தியர்களில், சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர், அவர்கள் COVID-19 தொற்றுநோயை சமாளிக்க அமெரிக்காவிற்கு உதவுகிறார்கள்.

இதுவரை, 13,000 அமெரிக்கர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது 24,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க நாட்டினர்,  இந்திய நாட்டில் உள்ளனர், அவர்களை மீட்பதற்காக இந்த வாரம் ஐந்து விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், இவர்களில் பெரும்பாலோர் வீடு திரும்பத் தயாராக இல்லை.

மேலும் படிக்க: வெக்கையை குறைக்கும் வெட்டிவேர் பண்புகள்

இன்று கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் உள்ளது. இதனால் மக்கள் எல்லோரும்வீட்டின் உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தி பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்கே திரும்ப கொண்டு வர அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சிலர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களை திரும்ப அமெரிக்காவிற்கு அழைத்து வர அந்நாட்டு அரசு அவர்களை தொடர்பு கொண்டது. அதற்கு அவர்கள் அமெரிக்காவை விட இந்தியா தான் பாதுகாப்பாக இருக்கிறது. என பெரும்பாலானோர் சொல்லி இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். · அமெரிக்கா  போன்ற பெரிய நாட்டை சேர்ந்தோர்கள் இந்தியாதான் பாதுகாப்பு என்று சொல்கின்றனர். இதனைப் பார்க்கும் பொழுது இந்தியா கோவித் வைரஸ் தாக்குதலை எதிர்த்து எவ்வளவு பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையாக இருக்கின்றது என்பதை நாம் உணர வைக்கின்றது. இனிமேல் இந்தியர்களான நாம்தான் இதனை உணர வேண்டும். இந்தியா வெளிநாட்டைவிட எவ்வளவு பாதுகாப்பானது என்பதை இந்தியர்கள் உணர அமெரிக்கர்கள்  தெரிவித்த கருத்துக்கள் போதுமானது ஆகும். 

மேலும் படிக்க: அயுஷ் ஆயுர்வேத குறிப்புகள் பின்பற்றுங்க

இந்தியாவில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 10 பேர் மட்டுமே அமெரிக்காவிற்கு திரும்ப செல்ல ஒப்புக்கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியா தான் பாதுகாப்பாக இருக்கிறது என இங்கேயே தங்கிவிட்டனர்.  இன்னும் பல இந்தியர்கள் தாய் நாட்டைவிட்டு வெளியே வேலைக்கு சென்றவர்கள் மாட்டித்தவிக்கின்றனர். தாய் நாடு திரும்ப முடியாத நிலையை எண்ணி வருகின்றனர். ஆனால் அதே சமயம் இது குறித்து தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்தியா   நாட்டில் இக்கட்டான சூழலில் இருந்து நாம் விடுபட வேண்டும் என அனைவரும் ஒன்றுபட்டு ஊரடங்கில் இருந்து திறம்பட கொரானாவை எதிர்த்து வருகின்றோம்.

 

கொரானாவின் தாக்கத்தை இந்தியா  குறைக்க முழுமூச்சாக இருக்கின்றது.  தன்னலமற்ற மருத்துவ சேவை புரியும் மருத்துவர்கள் கடமையை செய்யும் துப்புறவாளர்கள், மக்களின் நன்பணாக இருக்கும் காவல்த்துறை, மக்களுக்கு உழைத்து உயிர்தரும் விவசாயிகள், அன்றாடம் விவசாயிகள் பயிற் செய்யும்  காய்கறிகள், பூக்கள் விற்பனை செய்வோர்கள், தன் ஆர்வலர்கள் ஆகியோர் நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பும் அவர்களின் அடிப்படைத் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றன்ர என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  

இந்தியா வெற்றிகரமாக முதற்கட்ட   ஊரடங்கை முடித்துவிட்டது. இரண்டாம் கட்ட  ஊரடங்கை எச்சரிக்கை, பாதுகாப்பு, கவனத்துடன் இந்தியா எதிர்கொள்கின்றது.   குறிப்பிட்ட 12 தொழிகளுக்கு பாதுகாப்புடன் பணியாற்ற இந்திய அரசு ஊரடங்கில்  இருந்து சலுகை அளித்துள்ளது இவை அனைத்தும் மக்கள் நலன் காக்கபடவே ஆகும். 

மேலும் படிக்க: அமர்களமாக்கும் அளில்லா ட்ரோன் தக்ஷா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன