அதிரடி படத்தில் நடிக்கும் அமலா பால்..!

amala paul started to act in different kinds of movies

சிந்து சமவெளி படத்தில் மாறுபட்ட வேடத்தில் அறிமுகமாகி மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே பாகம் 2, ராட்சசன் என பல முக்கிய படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆடை திரைப்படத்தில் தனது முழு திறமையையும் வெளிகாட்டினார். ஆம், அமலாபாலை பற்றி தான் பேசுகிறோம்.

அக்கால விஜயசாந்தி முதல் இக்கால நயன்தாரா வரை பலரும் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து பல படங்களை நமக்கு தந்துள்ளார்கள். இவர்களின் வழியிலேயே அமலாபாலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுக்கிறார். ஆடையை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “அதோ அந்த பறவை போல”.

மேலும் படிக்க – பஞ்சாபி தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

அதோ அந்த பறவை போல என்ற படத்தை புதுமுக இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கியுள்ளார். இது ஒரு விதமான சண்டைகள் நிறைந்த சாகச படமாகும். காட்டில் மாட்டிக் கொள்ளும் பெண் எப்படி எல்லா தடைகளையும் மீறி வெளியேறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தப் படத்தை ஜோன்ஸ் ஆஃ இன்டர்நேஷனல் பிலிம் தயாரித்துள்ளது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் மிகப்பெரிய கட்டுப்பாடுகளை கொண்டு இப்படத்தை இயக்கி உள்ளார்கள், என்பதை இசை வெளியீட்டு விழாவில் அமலாபால் கூறியிருந்தார்.

இந்த படத்திற்காக அமலாபால் “கிரவ் மகா” என்ற தற்காப்புக் கலையை பயின்றுள்ளார். இந்தக் கலை இஸ்ரேலில் உருவானது, இதை இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் மற்றும் சிறப்பு படையினருக்கான தற்காப்புக் கலையாகும். ஜேம்ஸ்பாண்ட், மிஷன் இம்பாசிபிள், ட்ரான்ஸ்போர்டர் போன்ற படங்களில் இதுபோன்ற சண்டை காட்சிகளை நாம் பார்த்திருப்போம். இது கராத்தே, மல்யுத்தம், குத்து சண்டை, ஜூடோ போன்ற கலைகளை அனைத்தையும் ஒன்று சேர்த்து சண்டையிடுவதுதான் இந்த “கிரவ் மகா”. இந்தக் கலையை அமலாபால் பயின்று இந்தப் படத்தில் சில சண்டைகளையும் செய்துள்ளார். அந்தக் காட்சிகள் எதிர்பார்ப்பை விட குறைவாக தான் இருக்கும் என்று அமலாபால் சொல்லி இருந்தாலும், மற்ற கலைஞர்கள் அனைவரும் அமலாபால் தன்னடக்கத்தினால் சொல்கிறார்கள், சண்டைகள் சாகசமான சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்றார்கள்.

மேலும் படிக்க – அட்டு ஆனந்தியான “அறந்தாங்கி நிஷா”.!

ஆடை படத்தின் மூலமாக அமலாபால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவருவதால் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியடைய அதிக வாய்ப்புள்ளது. அதேசமயத்தில் ஆடைக்கு ஏ சர்டிபிகேட் அளித்திருந்தது. இதனால் குடும்ப ரசிகர்கள் திரையரங்குக்கு வர முடியவில்லை, ஆனால் அதோ அந்த பறவை போல திரைப்படம் யூ சர்டிபிகேட்டை வாங்கியுள்ளது. இதனால், குடும்பத்தினர்களை இந்தப்படம் அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன