உடல் எனும் ஆயுதத்தை எப்போதும் தயாராக வைத்திடுங்கள்!

 • by

உடல் என்பது பரிசுத்தமாக நாம் காக்க வேண்டிய ஒன்று. ஆனால் பலர் உடலை துச்சமென நினைத்து சரியாக உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, அதீத உணவு, உணவில் மாறுபாடு என பல காரணங்களால் மனிதன் தன் உடலை சரியாக பராமரிப்பதில்லை. 2008-ம் ஆண்டில் WHO-ன் ஆய்வின் படி, 1.4 பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடை கொண்டவர்கள் மற்றும் அரை பில்லியனுக்கும் அதிகமான பருமனானவர்கள் என்று கூறியுள்ளது. இப்பொது இது இன்னும் மோசமாகியுள்ளது என்று ஆய்வில் மேலும் கூறுகிறது.

அதிக எடை மற்றும் உடல் பருமன் காரணமாக அதிக மரணங்கள் ஏற்படுகிறது. நீங்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள் ஒன்று பொருள்.

உடல் எடை குறைக்க இயற்கை பொருட்கள் :

நீர்:

 • தண்ணீர் குடிப்பதால் பசி குறையும், உடலின் மெடபாலிசம் அதிகரிக்கும். நீருக்கு அதீத நன்மைகள் உண்டு.

சிட்ரிக்:

 • திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்களில் சிட்ரஸ் உள்ளதால் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும், இவற்றில் வைட்டமின் C மற்றும் B அதிகம் உள்ளது இது பல நன்மைகளை அளிக்கும்.

கேரட் ஜூஸ்:

 • கேரட்டில் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளதால் தோலுக்கு நல்லது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, மினரல் மற்றும் வைட்டமின் ஆகியவை அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க கேரட் ஜூஸ் உதவுகிறது.

உடல் எடை அதிகரிக்கும் உணவுகள் :

 • ஒரு வாரத்துக்கு 2-3 முறை தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது உடல் எடையை கூட்டும்.
 • பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிகவும்
 • நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருப்பவர்களுக்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.
 • வெண்ணெய் தடவிய பிரட் டோஸ்ட் சாப்பிடலாம்.
 • தினமும் காலையில் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்து சாப்பிடலாம். மதியம் தயிர் அல்லது மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்.
 • எடை அதிகரிக்க வாழை உதவும். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் சாப்பிடுவது நன்மை அளிக்கும்.
 • ஒரே நேரத்தில் முழு சாப்பாடு சாப்பிடாமல், 3 வேளை உணவை 5 வேளையாக குறைவாக சாப்பிடலாம். இதனாலும் உடல் எடை அதிகரிக்கும்.

உங்களுக்கான இலக்கு எதுவாக இருந்தாலும் ஆகாஷ் தேவுடன் கீழ்காணும் ஆன்லைன் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

 • எடை இழப்பு
 • எடை அதிகரிப்பு
 • ஆரோக்கியத்தை பராமரித்தல்
 • பாடி பில்டிங்

இதில் எதுவாக இருந்தாலும், முறையான பயிற்சி, உணவு மற்றும் வாழ்க்கை முறை திட்டங்கள் மூலம் இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் அதை அடைய ஆகாஷ் தேவ் உங்களுக்கு உதவுவார். ஆகாஷ் தேவ் உடனான பயிற்சி திட்டம் மற்றும் உணவுத் திட்டம் உங்கள் வாழ்க்கை முறை மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பயிற்சி இருக்கும், இதனால் பயிற்சியின் ஒவ்வொரு நொடியையும் நீங்கள் சந்தோஷமாக உணர்வீர்கள்.

ஆகாஷ் தேவ் உடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன