கற்றாழை, வேப்பிலை மற்றும் மஞ்சள் கொரோனாவுக்கு எதிராக போராடும்..!

  • by
aloevera, neem leaves and turmeric fight against corona virus

கொரோனா வைரஸின் தாக்குதலினால் இந்தியாவில் ஏராளமான மக்களை சுகாதாரத்துறை வீட்டிற்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். இவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் வீட்டில் தனிமையாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் நமக்கு ஒரு வேளை கொரோனா வைரஸ் இருந்தாலும் அதை நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை கொண்டு எதிர்கொள்ளலாம்.

சோற்றுக் கற்றாழை

மிக குறைந்த பராமரிப்பில் அதிக ஆரோக்கியத்தை தரும் மூலிகை செடிதான் இந்த சோற்றுக் கற்றாழை. இதை அப்படியே சாப்பிடுவதன் மூலமாக நமது உடல் குளிர்ச்சி அடைந்து உடலில் உள்ள அனைத்து கெட்ட கழிவுகளை அகற்றுகிறது. அதேபோல் உங்கள் சருமத்தையும் பாதுகாப்பாக வைப்பதற்கு கற்றழை உதவுகிறது. இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட கற்றாழையை நாம் சாப்பிடும் போது நம் உடலுக்குள் இருக்கும் கிருமிகள் தாக்கம் குறைகிறது. கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமை படுத்தி இருந்தால் இதை மஞ்சள் மற்றும் வேப்பிலையுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க – வாழைபழம் ஆரோக்கியத்துக்கு அவசியம்

எதிர்ப்பு பண்பு

நம் உடலில் இருக்கும் கிருமிகள் அனைத்தையும் அழிக்கும் எதிர்ப்பு பண்புகள் மஞ்சள் மற்றும் வேப்பிலைக்கு அதிகமாக உள்ளது. வேப்பிலையை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமாக நமது உடல் முழுவதும் சுத்தம் அடைந்து தேவையற்ற கழிவுகள் அனைத்தும் வெளியேறுகிறது. அதேபோல் மஞ்சளில் இருக்கும் எதிர்ப்பு பண்புகள் கிருமிகள் எதுவும் உங்கள் உடலில் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

உணவாக சாப்பிடுங்கள்

வேப்ப இலையை நன்கு அரைத்து அந்த விழுதினை மோர் அல்லது மஞ்சள் கலந்து தண்ணீரில் சேர்த்து குடிப்பது நல்லது. ஒரு சிலர் மஞ்சள் நீரில் கற்றாழை ஜெல் மற்றும் வேப்ப இலை விழுதை நன்கு சேர்த்து குடிப்பார்கள். இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலமாக உங்கள் செரிமான சக்தி அதிகரித்து கிருமித் தொற்றுகள் அனைத்தையும் கொள்கிறது. இது எந்தளவிற்கு கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் என்பது அறிவியல் பூர்வமாக தெரியவில்லை இருந்தாலும் கிருமிகளை அழிக்கும் ஏராளமான பண்புகள் இதற்கு இருப்பதினால் கொரோனா வைரசை தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

மேலும் படிக்க – கொரானா பரவலை தடுக்கும் வேம்பு, மஞ்சள் கற்றாலை

கொரோனா வைரசை உணவுகள் மூலமாக எதிர்கொள்ளலாம் அதற்கு நீங்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இதுபோன்ற இயற்கை உணவுகளையும் மற்றும் மூலிகைப் பொருட்களையும் சாப்பிடுவதன் மூலமாக நமது உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் அகலும். கொரோனா வைரசை தவிர்த்து எந்த தொற்றுகள் உங்கள் உடலில் இருந்தாலும் அது கழிவுகள் மூலமாக வெளியேறி விடும். எனவே இந்த வைரஸை நினைத்து பயப்படுபவர்கள் இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்டு தைரியமாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன