சீயான் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து..!

  • by
ajay gnanamuthu wishes chiyaan vikram on his birthday

“டிமான்டி காலனி” என்ற திகில் படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் அத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, ராசி கண்ணா மற்றும் அனுராக் காஷ்யப் நடிப்பில் “இமைக்காநொடிகள்” என்ற படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் சீயான் விக்ரமை வைத்து கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கோப்ரா

தனது மூன்றாவது படத்திலேயே மிகப்பெரிய நடிகரான சியான் விக்ரமை வைத்து கிட்டத்தட்ட ஏழு விதமான கதாபாத்திரத்தில் விக்ரமை மாற்றி அமைத்து இயக்கி வருகிறார். எனவே இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை பிப்ரவரி மாதம் வெளியிட்டு எல்லா ரசிகர்களின் இடையே இத்திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளார்கள். கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சீயான் விக்ரமின் இத்திரைப்படம்த்தின் மூலமாக அவரின் பல வரிசை அதிகரிக்கும் என அவர்கள் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் படிக்க – சாயிஷா ஆர்யாவின் சமூக வலைதள கொண்டாட்டம்..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் கோப்ரா குழுவினருடன் இணைந்து சியான் விக்ரம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து காணொளி ஒன்றை தயாரித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீயான் விக்ரமின் நண்பர்கள் மற்றும் கோப்ரா திரைப்படத்தின் அவர் உடன் நடித்தவர்கள், கதாநாயகிகள், ஒப்பனையாளர், ஒளிப்பதிவாளர் என எல்லோரும் அந்த காணொளியில் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். இதைத் தவிர்த்து விக்ரம் பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களையும் அந்த காணொளியில் பகிர்ந்து உள்ளார்கள். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் சியான் விக்ரம்க்கு ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வெற்றியடைய வாழ்த்துக்கள்

சீயான் விக்ரம் அவர்கள் சில வருடங்களுக்கு முன்பாக நடித்த எல்லா படங்களும் வெற்றிப் படமாக மாற்றினார். அதை தவிர்த்து இவர் நடிப்புக்காக தேசிய விருதுகளை வாங்கியவர், இருந்தும் சமீபத்தில் இவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள்  சரியான வசூலை ஈட்ட முடியாததினால் அதை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் புதுமையான கதை களத்தை கொண்ட இந்த கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனராக பணியாற்றிய அஜய் ஞானமுத்து அவர்கள் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் படிக்க – தமிழ் சினிமா பிரபலங்களில் கொரோனா நன்கொடை..!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த அனைத்து சினிமா பிரபலங்கள் மற்றும் சியான் விக்ரமின் ரசிகர்கள் இத்திரைப்படம் நிச்சயம் வேறு ஒரு தளத்திற்கு செல்லும் என தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இருந்தும் ஏராளமான திறமைகளை கொண்டுள்ள சியான் விக்ரமிற்க்கு இந்த படம் திருப்புமுனையாக அமைய வேண்டும் என விக்ரம் அவர்களுக்கு எங்கள் குழுவின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன