முடி வளர்வதற்காக பயன்படுத்தப்படும் வைட்டமின்-ஈ மாத்திரைகளை பற்றிய தொகுப்பு.!

advantage and review of using vitamin e capsule for hair growth

நம் அழகை அதிகரிக்க உதவுவது நம் தலைமுடிதான், ஒரு சிலர் மிக இளமையான வயதிலேயே தலைமுடியை இழந்து விடுகிறார்கள், அதற்கான காரணம் என்னவென்றால் இவர்களுக்கு வைட்டமின்-ஈ பற்றாக்குறையாக இருக்கிறது. இதை சரி செய்வதற்காக இவர்கள் வைட்டமின்-ஈ உள்ள உணவுகளை உட்கொள்கிறார்கள். ஆனால் இப்போது இதற்காகவே வைட்டமின்-ஈ மாத்திரைகள் வெளிவந்துள்ளன இதை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

ஆண் பெண் இருவருக்கும் நீளமான கருமையான கூந்தல் என்றால் பிடிக்காமல் இருக்காது ஆனால் இவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைபாடுகளினால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்காக நாம் வைட்டமின்-ஈ மாத்திரைகளை உட்கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். 

மேலும் படிக்க – காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற சிறந்த உணவுகள்..!

நம் உடம்பில் சக்திகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரப்புவது நரம்புகள்தான் ஆனால் இந்த நரம்புகள் பழுதடைந்தால் எந்த ஒரு சக்தியும் மற்ற இடத்திற்கு செல்லாமல் நமது உடல் பாதிப்படையும் ஆனால் நாம் வைட்டமின்-ஈ மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் நமது நரம்பு மீண்டும் புத்துயிர் பெற்று அந்த சக்திகளை கடத்த உதவுகிறது. இதனால் தான் நமது கூந்தல் உதிர்ந்த பின்பும் வைட்டமின் மாத்திரை உட்கொள்ளும் போது மீண்டும் வளரத் தொடங்குகிறது. 

இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதினால் நம் தலை முடி பாதிப்புக்குள்ளாகும் நோய்களை இது எதிர்த்து நமது தலையில் மீண்டும் முடி வளர உதவுகிறது. நமது செல் பாதிப்புகளை சரி செய்து நமது கூந்தலை மீண்டும் வளர உதவுகிறது. இதை தவிர்த்து நம்மில் எண்ணெய் உற்பத்தியை சரி செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் நமது தலைமுடியின் வேறுகள் ஆரோக்கியம் அடைகிறது. 

மேலும் படிக்க – உளுந்து சாப்பிட்டால் ஊரை வெல்லும் பலசாலியாகலாம்

வைட்டமின்-ஈ மாத்திரைகளை உட்கொள்வதால் நமது முடி உதிர்வை தடுத்து நமது மன அழுத்தத்தைப் போக்குகிறது என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் அதிகமாக எண்ணங்களை உட்கொள்ளும்போது இது நமது முடி வளரும் துளைகளை அடைத்து விடுகிறது இதனால் நமக்கு பொடுகுகள் அதிகமாகிறது இதை தடுக்க வைட்டமின்-ஈ மாத்திரைகள் சிறந்ததாகும். இது நமது பிஎச் அளவை சமநிலையில் வைத்து நம் தலையில் ஏற்படும் எண்ணெய்ப் பிசுக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. இது நமது கூந்தல் மிக ஆரோக்கியம் அடைகிறது. இது நமது தலையில் ஈரப்பதத்தை அதிகரித்து நமது கூந்தலை பராமரிக்கிறது. இதன் மூலம் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இது வைத்துக் கொள்கிறது. எனவே வைட்டமின்-ஈ மாத்திரை உட்கொள்வது நமது கூந்தலுக்கும் மிக நல்லது.

கீரை, காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் சத்துக்களை நாம் சரியாக உட்கொள்ள முடியவில்லை என்றால் இதுபோன்று கிடைக்கும் வைட்டமின்-ஈ மாத்திரைகளை நீங்கள் நம்பிக்கையுடன் வாங்கி உட்கொள்ளலாம் ஆனால் இதை மருத்துவரின் பரிந்துரைக்கு பின்பே பயன்படுத்த வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன