முன்னுதாரணமாக திகழ்ந்த நடிகை ரோஜா..!

  • by
actress rojas awesome act for this corona virus

தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகை ரோஜாவை ஒரு நடிகையாகவே பார்த்து வந்தார்கள், ஆனால் அவர் அரசியல் மேலுள்ள ஆர்வத்தினால் இப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியில் எம்எல்ஏவாக பணியாற்றிவருகிறார். “செம்பருத்தி” படத்தின் மூலமாக தமிழ் உலகிற்கு அறிமுகமான இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் “வீரா” போன்ற படங்களில் நடித்தவர். இவர் தமிழில் கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட படத்தில் நடித்த பெருமை நடிகை ரோஜாவுக்கு உண்டு. ஆனால் இவர் தமிழ் உலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே தெலுங்கில் தனது முதல் படத்தில் நடித்தவர், இதை தவிர்த்து மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் இவர் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர்.

எம்எல்ஏ ரோஜா

கொரோனா வைரஸ் பாதிப்பினால் எல்லோரும் ஊரடங்கிள் இருக்கிறார்கள், ஆனால் ஒருசிலர் மட்டும் இந்த நேரத்திலும் தங்கள் பணிகளை இடைவிடாமல் செய்து வருகிறார்கள், அதில் மிக முக்கியமானவர்கள் சுகாதாரத் துறையினர் மற்றும் அரசியல்வாதிகள். இவர்களின் கட்டளையை பொறுத்து தான் இவர்களுக்கு கீழ் இருக்கும் துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றவர்கள் பணி செய்து வருகிறார்கள். எனவே ஆந்திராவில் இந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதை தவிர்த்து இதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நிலைமையில் அனைத்து தலைவர்களுக்கும் இருக்கின்றனர். எனவே இதை சரி செய்வதற்காக நகரி தொகுதியின் எம்எல்ஏ நடிகைரோஜா இறங்கியுள்ளார்.

மேலும் படிக்க – ரக்குள் பிரீத் சிங்கின் யோகா பயிற்சி..!

துப்புரவு பணியாளர்கள்

நடிகை ரோஜா எம்எல்ஏ வாக இருக்கும் இந்த தொகுதியில் கொரோனா வைரசினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் வசித்து வந்த அந்த தெருவை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர்களை கிருமி நாசினியை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அந்த இடத்திற்கு செல்ல பயந்து யாரும் அந்த தெருவை சுத்தம் செய்ய முன் வரவில்லை, எனவே இவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ ரோஜா அவர்கள் துப்புரவு பணியாளர்கள் செய்யும் வேலைகளைத் தானே செய்துவந்தார். இதைப் பார்த்த பணியாளர்கள் தங்கள் பயத்தைப் போக்கிக் கொண்டு ரோஜாவுடன் இணைந்து அவர்கள் வேலையை இடைவிடாமல் செய்து வந்தார்கள்.

ஊக்கமளித்த ரோஜா

பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த நடிகை ரோஜா இப்போது அரசியலிலும் ஏராளமான சாதனைகளை செய்து வருகிறார். எனவே எல்லாப் பெண்களுக்கும் உதாரணமாக இவர் செய்த இந்தக் காரியத்தின் மூலமாக இவர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. எனவே எல்லோரும் கொரோனா பற்றிய தெளிவான விழிப்புணர்வை கொண்டு இதை நேர்மறையாக எதிர்கொள்ளவேண்டும். இதை நினைத்து பயந்து கொண்டு இந்த வைரசுக்கு எதிராக போராடாமல் இருந்தால் இந்த வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க – சினிமா பிரபலங்கள் இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும்..!

எனவே எல்லா அரசியல்வாதிகளும் மக்களை ஊக்குவிக்கும் செயல்களை செய்ய வேண்டும். இதை கேமராவின் பின்னால் அமர்ந்துகொண்டு காணொலி மூலம் செய்வதைவிட மக்களை நேரடியாக சந்தித்து அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதே சிறந்தது. இதன் மூலமாக இதைப்பற்றி தெளிவில்லாத மக்கள் மிக எளிமையாக புரிந்து கொண்டு இந்த நோய் தொற்றுகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன