மகனுடன் குத்தாட்டம் போடும் நடிகை..!

  • by
actress pragathi dances with her son during lockdown

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் 144 தடை உத்தரவை பின்பற்றி வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் அடைந்து கிடைக்கிறார்கள். இதனால், தங்களால் முடிந்த வரை தங்கள் பொழுதை வெவ்வேறு விதமாக கழித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில பிரபலங்கள் தங்கள் பொழுதை கழிப்பது மட்டுமல்லாமல், அதை இணைய தளத்தில் பதிவிட்டு அவர்களின் ரசிகர்களையும் மகிழ்ச்சி படித்து வருகிறார்கள். அந்த வகையில் இணையத்தளத்தில் தனது மகனுடன் குத்தாட்டம் ஆடிய நடிகை பிரகதியின் காணொளி வைரலாகி வருகிறது.

வீட்ல விசேஷங்க

1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான “வீட்ல விசேஷங்க” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பிரகதி. அதை தொடர்ந்து இவர் ஒருசில படங்களில் கதாநாயகியாக நடித்து இப்போது கிட்டத்தட்ட 20 படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு “பாபி” என்ற படத்தில் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர்கிட்டதட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழை விட தெலுங்கில் இவரின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்தது. கடைசியாக இவர் சமந்தா நடிப்பில் வெளியான “ஓ பேபி” என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க – முன்னுதாரணமாக திகழ்ந்த நடிகை ரோஜா..!

குத்தாட்டம்

“தீன் மார்” என்ற பாடலுக்கு நடிகை பிரகதி தனது மகனுடன் சேர்ந்து பயங்கரமான குத்தாட்டத்தை ஆடியுள்ளார். 44 வயதுடைய பிரகதி வேட்டி சட்டையை அணிந்து கொண்டு சிறிதும் இடைவெளி இல்லாமல் வெறித்தனமாக இந்த ஆட்டத்தை அரங்கேற்றினார். இதற்கு துணையாக தனது மகனும் இடையே ஒரு சில நடன வித்தையும் காண்பித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பார்க்கப்பட்ட காணொளியாக இது திகழ்கிறது. இந்த வயதிலும் மக்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக தனது திறமையின் வாயிலாக இந்த காணொளியை அவர் வெளியிட்டார்.

மேலும் படிக்க – சாயிஷா ஆர்யாவின் சமூக வலைதள கொண்டாட்டம்..!

வரவேற்ற மக்கள்

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இதுபோல் ஒன்றிணைந்து தங்களால் முடிந்த வேலைகளை செய்து தங்கள் நாட்களை கழிக்க வேண்டும். அதை தவிர்த்து இது போன்ற செயல்களின் மூலமாக அனைவரின் மன நிலையும் தெளிவாகவும் மற்றும் உற்சாகமாகவும் இருக்கும். எனவே வயது வரம்பில்லாமல் அனைவரும் தங்களால் முடிந்தவரை வீட்டில் பொழுதைக் கழிக்க வேண்டும். அதை தவிர்த்து வீட்டின் மூலையில் அமர்ந்து எதையோ இழந்ததைப் போல் இருப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

பிரகிருதியின் இந்த செயல் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே ஏராளமான வரவேற்பை பெற்றுள்ளது. இதை தவிர்த்து இதுபோன்ற நிலையில் இருக்கும் அனைத்து விதமான சினிமா பிரபலங்களும் பிரகதியை வாழ்த்தி உள்ளார்கள். குணச்சித்திர நடிகையாக இருந்தாலும் தனது திறமையினால் இன்றுவரை எந்த ஒரு எதிர்மறை விமர்சனங்களும் பெறாத ஒரு அற்புதமான நடிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன