நடிகர் விவேக்கின் கொரோனா பற்றிய காணொளி..!

  • by
actor's vivek video on corona virus

மத்திய அரசு மே 3-ம் தேதி வரை ஊரங்கை பின் தொடர வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டுள்ளது, இருந்தும் தமிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள 3 மாவட்டங்களை முழு ஊரங்கை பின்பற்றும்படி செய்துள்ளது. இதில் சென்னை, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் தொடர்ந்து நான்கு நாட்கள் முழு ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கட்டளையிட்டுள்ளது.

விவேக்கின் கருத்து

இந்நிலையில் நடிகர் விவேக் அவர்கள் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். அதைத் தவிர்த்து கொரோனா வைரஸ் தமிழக மக்களை அதிகமாக பாதிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். இதைத் தவிர்த்து மே மாதம் இறுதிவரை நாம் ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்றும், இது சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமாக தெரிய வந்தது என நடிகர் விவேக் அவர்கள் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க – ஒடிடி வெளியீடு சர்ச்சையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!

விவேக்கின் உரை

நடிகர் விவேக் அவர்கள் காணொளி மூலமாக இந்த உரையை பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் அவர் கூறியிருப்பதாவது, நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களே, இளைஞரகளே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முழுமையான ஊரடங்கை நாம் பின்பற்றி எப்படியாவது இந்த தொற்று குறைந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று வரும் போதுதான் நாம் வெளியே வர முடியும். அது நம் கைகளில் தான் இருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். சிங்கப்பூரில் ஆய்வு ஒன்றில் கிடைத்த தகவலின் படி மே மாதம் கடைசியில் இதிலிருந்து விடுதலை கிடைக்கலாம். விடிவு கிடைக்கும் என்று உலகத்துக்கே சொல்கிறார்கள். நாம் தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் ஒத்துழைத்தால் நமக்கும் விரைவில் விடிவு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

மக்கள் பாதுகாப்பு

நடிகர் விவேக் அவர்கள் கொரோனா வைரஸை பற்றிய ஏராளமான பதிவுகளை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து அவ்வப்போது ஒரு சில விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிடுகிறார். நடிகர் விவேக் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் மற்றும் மருத்துவர்கள், காவல் துறையினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் கேட்டுக்கொள்வது, மக்கள் அனைவரும் இந்த ஊரங்கை சரியாக பின்தொடர்ந்து வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான்.

மேலும் படிக்க – சூப்பர் ஸ்டாரை போட்டிக்கு அழைத்த சிரஞ்சீவி..!

எனவே உலகம் அழிவின் விளிம்பில் இருக்கும் பொழுது மக்களாகிய நாம் அதை காப்பாற்றும் சக்திகளை கொண்டுள்ளோம். இதை அனைவரும் சரியாக பயன்படுத்தி நம் நாட்டை காப்பாற்ற வேண்டும். இதற்கு, அனைத்து மக்களும் ஊரடங்கு சரியாக பின்தொடர்ந்து மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன