ஒரு கோடியே 30 லட்சம் அளித்த நடிகர் விஜய்..!

  • by
actor vijay donates 1.30 crores for corona relief

தமிழகத்திற்கு நிவாரணம் தேவைப்படும்போதெல்லாம் முதலில் வந்து உதவி செய்பவர் நடிகர் விஜய், ஆனால் ஒரு சில காரணங்களினால் கொரோனா வைரஸிக்கு அளிக்கக்கூடிய நிவாரண நிதி சற்று தாமதமாக கொடுத்துள்ளார். மத்திய அரசு, மாநில அரசு, கேரள, கர்நாடகா, ஆந்திரா போன்ற அனைத்து தென் மாநிலங்களுக்கும் அவர் நிவாரணத் தொகையை அளித்துள்ளார். இதைத் தவிர்த்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் நிவாரணத் தொகையில் இருந்து ஒரு பங்கை அளித்துள்ளார். இதன் மூலம் விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட சிறந்த மனிதர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

நிவாரண உதவி

நடிகர் விஜய் அவர்கள் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அளித்துள்ளார். இதில் நடிகர் விஜய் 25 லட்ச ரூபாயை மத்திய அரசிற்கும், 50 லட்ச ரூபாயை மாநில அரசிற்கும் கொடுத்துள்ளார். அதேபோல் 10 லட்ச ரூபாயை கேரள அரசுக்கு அளித்துள்ளார். கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாயை நடிகர் விஜய் அளித்துள்ளார். இதைத் தவிர்த்து சுமார் 25 லட்ச ரூபாயை பெப்சி நிறுவனம் அதாவது தென்னிந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஜய் அளித்துள்ளார்.

மேலும் படிக்க – கடவுள் மனம் கொண்ட விஜயகாந்த்..!

வாழ்த்துக்கள் குவிகிறது

இதன் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசு நடிகர் விஜய் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதைத் தவிர்த்து தென்னிந்திய திரைப்பட சங்கம் தலைவர்களும் இவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்கள். இதை தவிர்த்து தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி அவர்களும் விஜய் செயலை பாராட்டி உள்ளார். தேவைப்படும் பொழுது சரியான சமயத்தில் உதவிய நடிகர் விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தவிர்த்து இவர் செய்த உதவி ட்விட்டர் மற்றும் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுக்கு அளித்து வந்தார்கள். ஆனால் நடிகர் விஜய் மட்டும் எந்த ஒரு உதவியும் செய்யாததால் அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள். இருந்தும் விஜய்யின் பெயரில் அவ்வப்போது ஒரு சில உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார்கள். இப்போது விஜய் அளித்திருக்கும் இந்தத் தொகையைப் பார்த்த அனைத்து ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதை தவிர்த்து இணையம் முழுவதும் விஜய்யை பற்றிய விதவிதமான பதிவுகளை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க – விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவின் க்யூட் மெசேஜ்..!

இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அதேபோல் ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைப்பதற்கும் இவர்கள் இணையதளத்தில் விதவிதமான காணொளிகளை பதிவிட்டு வருகிறார்கள். எனவே ஊரடங்கு சமயத்தில் அனைத்து சினிமா பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுக்கு உதவியாகவும் மற்றும் அவர்கள் உற்சாகமாக பார்த்துக் கொள்ள வேண்டும், என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன