டெண்டிங்காகும் சிவகார்த்திகேயன் ஹஸ்டாக்..!

  • by
actor sivakarthikeyan support to doctors made fans go crazy

சின்னத்திரையில் மேடை நகைச்சுவை தொகுப்பாளராக அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் “வி லவ் டாக்டர்” என்ற ஹஸ்டாக் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை தவிர்த்து இந்தத் கொரோனா வைரஸ் பற்றிய குறிப்புகளுடன் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

வி லவ் டாக்டர்

சிவகார்த்திகேயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காணொளியில் அவர் மருத்துவத் துறையினர் மற்றும் மக்களுக்காக பாடுபடும் அனைத்து மனிதர்களுக்கும் இந்த காணொளியில் நன்றியை தெரிவித்து இருந்தார். நகைச்சுவையாக தொடங்கப்பட்ட இந்த காணொளியில் சிவகார்த்திகேயன் அவர்கள் ஏராளமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முதலில் தனது தோற்றத்தைப் பற்றி கூறிய சிவகார்த்திகேயன் அவர்கள் ஊரடங்கை பின் தொடர்ந்து வரும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் இது போன்ற பிரச்சனை அனைத்தும் தீர்வாகும் என்று மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும் படிக்க – மகனுடன் குத்தாட்டம் போடும் நடிகை..!

மனித கடவுள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சமுதாயத்தில் பணிபுரியும் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவமனைகளில் வேலை செய்பவர்கள், காவல்துறையினர், ஊடக நண்பர்கள் போன்ற அனைவருக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது நன்றியைத் கூறினார். இதைத் தவிர்த்து மனித கடவுளாக பார்க்கப்படும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இதை தவிர்த்து இந்த காணொளி மற்றும் ஹஸ்டாக் இரண்டுமே மருத்துவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

மருத்துவர் சேவை

ஒரு சில நாட்களுக்கு முன்பாக வெவ்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் தாக்கப்பட்டார்கள். இதைத்தவிர்த்து அவர்களை தரக்குறைவாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பேசினார்கள். இதை அனைத்தையும் தவிர்த்து மக்களாகிய நாம் மருத்துவர்களுக்கு இந்த ஹஸ்டாக் மூலமாக நன்றி தெரிவிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் வேண்டினார். மருத்துவர்களின் மனநிலை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது, இதைப் போக்கும் வகையில் மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த நன்றியை மற்றும் மருத்துவர்கள் செய்த சேவைகளை மக்கள் இந்த ஹஸ்டாக் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று சிவகார்த்திகேயன் அவர்கள் இந்த காணொளியில் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க – கடவுள் மனம் கொண்ட விஜயகாந்த்..!

தவறான கேள்வி

ஒரு சில மக்கள், மருத்துவர்களை வார்த்தைகள் மூலமாக தாக்கி வருகிறார்கள். அதில் ஒரு சிலர்கள் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்குகாகவே உழைக்கிறார்கள் அதற்கு ஏன் நாம் நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். ஆனால் இதே போல் தான் இந்திய எல்லைகளில் இருக்கும் ராணுவ வீரர்கள் சம்பளத்தை வாங்கி பணியை செய்கிறார்கள், கிட்டத்தட்ட அவர்கள் செய்வதும் மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள் செய்வதும் ஒன்றுதான். கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்துவது போல் இதுபோன்ற மக்களுக்கு உதவி செய்யும் மனித கடவுள்களுக்கு சம்பளம் ஒரு காணிக்கை. எனவே இது போன்ற கேள்விகளை எழுப்பாமல் உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யுங்கள்.

உலகின் தலைசிறந்த சொல் செயல் என்று கூறி சிவகார்த்திகேயன் அவர்கள் இந்த காணொளியை நிறைவு செய்தார். எல்லா மனிதர்களும் ஊரடங்கைப் பின் தொடர்ந்து, தங்களால் முடிந்த சேவைகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார்கள். அதில் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த பண உதவி மற்றும் பொருள் உதவிகளை செய்து அவ்வப்போது காணொளிகளை வெளியிட்டு அவர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து இந்த கடினமான நாட்களை கடக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன