நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் செயல்கள்..!

  • by
activities that improve your immune system

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏராளமான உணவுகளை கடந்த சில நாட்களாகவே நாம் பார்த்திருப்போம், ஆனால் என்னதான் நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்படும் சிக்கல்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே அதை தடுத்து நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நம் செயல் மூலமாக எப்படி அதிகரிக்கலாம் என்பதைக் காணலாம்.

ஊக்கம் அளிக்கும் செயல்

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே உங்களால் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். உங்கள் வாழ்க்கை முறையை பொறுத்து தான் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சமமாக இருக்கும். ஒரு சிலர் எந்த ஒரு உடற்பயிற்சிகளும் செய்யாமல் தேவையற்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமாக அவர்கள் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைந்திருக்கும். ரத்தத்தில் எதிர்ப்புத்தன்மை ஏதும் இல்லாமல் மிக எளிதில் எல்லா விதமான உடல் பிரச்சினைகளும் அவர்களுக்கு உண்டாகும். எனவே இதில் குறிப்பிடப் இருக்கும் செயல்களை பின் தொடர்ந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கும் வழிகள்..!

புகைப்பழக்கம்

நீங்கள் என்னதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் உணவுகளை உண்டாலும் புகைப்பிடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள ஏராளமான பகுதிகள் பாதிக்கப்படுகிறது. அதைத் தவிர்த்து உங்கள் உடல் உறுப்புகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அணுக்களை அழித்து விடுகிறது. இதன் மூலமாக உங்கள் உடல்நிலை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.

உடற்பயிற்சி

உடற் பயிற்சிகள் எதுவும் செய்யாமல் உணவுகளை மட்டும் உண்டால் உங்கள் உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல் குறைவாகவே இருக்கும். எனவே அதன் ஆற்றலை அதிகரிப்பதற்காக நாம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றக் கூடிய உடற் பயிற்சிகள் செய்தாலே போதும்.

குடிப்பழக்கம்

நீங்கள் தினமும் குடிப்பவர்களாக இருந்தால் உங்களை நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் அல்லாமல் யாராலும் காப்பாற்ற முடியாது. தினமும் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் ஏராளமான பாதிப்புகள் உண்டாகிறது. இதைத் தவிர்த்து உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரிக்கின்றது, இதன் மூலமாக ரத்தத்திலுள்ள அணுக்கள் அனைத்தும் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தியை வளரவிடாமல் தடுக்கிறது. எனவே மாதத்திற்கு ஒருமுறை குடித்து உங்கள் ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் குடிப்பதன் மூலமாக உங்கள் எதிர்காலம் வீணாகும்.

மேலும் படிக்க – பாசிட்டிவிட்டியை எப்படி பகிர்வது..!

தூக்கம் அவசியம்

இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் உங்கள் ஆரோக்கியம் சீர்குழைய வாய்ப்புள்ளது. எனவே இரவில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக வேலையை செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் பொழுதுபோக்கிற்காக இரவு முழுவதும் கண் வைத்திருப்பார்கள் அதை முற்றிலுமாக முடக்கி சரியான நேரத்தில் உறங்க வேண்டும். நமக்கு குறைந்தது 8 மணி நேரம் உறக்கம் தேவை பட்டாலும் அது சரியான நேரத்தில் எடுத்தால் மட்டுமே அந்த உறக்கம் பயனுள்ளதாக மாறும்.

இதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகள், இயற்கை அளித்த பச்சை காய்கறிகள் போன்றவைகளை சாப்பிட்டு உங்கள் உடல் எடையை சமமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக எடை மற்றும் மிகக் குறைந்த எடை உங்களை பலவீனமாக்கும். அதைத் தவிர்த்து நீங்கள் பயன்படுத்தும் உணவுகளை ஒருமுறைக்கு பல முறை சுத்தம் செய்து சமையுங்கள். நம்மை எவ்வளவு தூய்மையாக பார்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன