வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்…

  • by
according to vastu in which direction house should be located

நம் வாழ்வில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்ற எண்ணம் எல்லா செயலையும் சாத்தியப்படுத்தும் யோகமே வாஸ்து சாஸ்திர யோகம். நாம் கட்டப்படும் வீடுகள் கோவில்கள் மாளிகைகள் என எதுவாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி காட்டுவதன் மூலமாக தான் அதன் சிறப்பை நாம் முழுமையாக பெற முடியும்.

பஞ்ச பூதங்களின் ஆசீர்வாதம்

இந்த பிரபஞ்சத்தில் நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்கி வருகின்றன. ஒருவர் வீடு கட்டுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்யும் போது அந்த இடத்தில் பஞ்சபூதங்களின் ஆளுமை எப்படி அமைந்துள்ளது. இந்த அமைப்பானது இடத்தின் வளர்ச்சி உண்டாக்குமா, என்பதை எல்லாம் கணித்துக் கூறுவதே வாஸ்து சாஸ்திரம். அப்படிப்பட்ட வாஸ்து சாஸ்திரம் அமைந்தால்தான் நம் இல்லத்தில் சந்தோஷமும், அதிர்ஷ்டமும் கூடும் என்று வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

மேலும் படிக்க – வீட்டு நிர்வாக பட்ஜெட் பட்டியல் அவசியமானது

உருவான கதை 

வாஸ்து சாஸ்திரத்தை  நாம் சரியாக பயன்படுத்தாவிட்டால் நமக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். இதையெல்லாம் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது, இவையெல்லாம் எப்படி உருவாகியது என்பதை கதையை பார்ப்போம். 

சிவபெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் நடந்த போரில் அசுரன் நெற்றியில் ஒரு வேர்வை துளி வந்தது, அந்த வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் பசியினால் கிடைத்தவை எல்லாவற்றையும் உண்டது. ஆனாலும் அதற்கு பசி அடங்கவில்லை, இதனால் பூதம் சிவபெருமானிடம் அந்த பிரார்த்தனையில் கும்பிட்டு வேண்டினான். உடனே சிவபெருமான் காட்சி அளித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பூதம் எனக்கு பசி தீரும் வரம் தாருங்கள் என்றது, அதற்கு சிவபெருமாள் எதுவேண்டுமானாலும் சாப்பிட வரம் தந்தார்.  இந்த வாரத்தினால் இந்த உலகத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடும் என்ற அச்சத்தில் தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் முறையிட்டனர். அப்போது பிரம்மன் யாரெல்லாம் பூமியில் வீடு கட்டுகிறார்கள் அவர்கள் படைக்கும் உணவை மட்டும் தான் இந்த பூதம் உன்ன வேண்டும், யாரேனும் சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அவர்களை வாட்டி எடுப்பதற்கு அந்த பூதத்திற்கு உரிமை உண்டு. இதனால்தான் அனைவரும் வாஸ்து விற்கு பயந்து வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளை கட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க – இந்திய பாதுகாப்புத்துறையில் பட்டாசு கிளப்பும் பாரதப் பெண்கள்..!

இந்த வருட வாஸ்து நாள்

வாஸ்து சாஸ்திரத்தில் நமக்கு எந்தத் தீங்கும் வராமல் இருப்பதற்காக நாம் வாஸ்து நாள் அன்று பூஜைகளை செய்யவேண்டும். இந்த வருடம் வாஸ்து நாள் ஜனவரி 26 ஆம் தேதி வருகிறது. எனவே இந்நாளில் காலை 10:52 மணி முதல் 11:28 மணி வரை வாஸ்து பகவானுக்கு செய்யப்பட வேண்டிய பூஜை செய்வதன் மூலம் நம் இல்லத்தில் எந்தக் குறைகளும் இல்லாமல் அம்சமாக வாழ முடியும்.

அதர்வன நூல் 

இந்துக்களில் மட்டும் நான்கு வேத நூல்கள் இருக்கின்றன, அதில் நான்காவது நூலான அதர்வன நூலில் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக சொல்லி இருக்கிறார்கள். இதைத்தவிர்த்து வாஸ்து சாஸ்திர பலன்களை அக்காலத்தில் பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். எவர் ஒருவர் புதிதாக வீடு கட்டுகிறார்களே அல்லது அஸ்திவாரம் அமைகிறார்களோ அவர்கள் துளசி மற்றும் அருகம்புல் வைத்து ஈசானி மூலையில் பூஜைகள் செய்வதன் மூலமாக வீடு கட்டுபவர்களுக்கு சிறப்பாக அமையும்.

மேலும் படிக்க – மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

வாஸ்து என்றால் வாழும் இடம், எனவே நம் வாழும் இடத்தை அதன் சாஸ்திரப்படி சரியாக கட்டுவதன் மூலம் நம் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடன் வாழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன