சாணக்கிய கூறும் ஐவரிடம் கவனம் தேவை!

  • by

சாணக்கியர்  இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த  அரசியல் ஞானியாவார். அவர் உருவாக்கிய மௌரிய சாமராஜ்யம்  மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் எல்லாம் வாழ்வின் அர்த்தங்களை கூறுகின்றன.

உதவி செய்யும்பொழுது கவனமாக இரு:

உதவி செய்யும் பொழுது ஒவ்வொரும் கடைபிடிக்க வேண்டிய  வழக்காறுகளை கொண்டிருந்தார். 

நாம் உதவி செய்யும் பொழுது  பிரதிபலனை எதிர்பார்க்காமல் நாம் மற்றவர்களுக்கு செய்யும் நல்ல காரியங்களை செய்வோம். 

அப்படி இருக்கும் பட்சத்தில் உதவி செய்வது குறித்து நமக்கு இருக்க வேண்டிய அறிவு குறித்து சாணக்கியர் கூறியுள்ளார். ஒருவருக்கு  உதவி செய்யலாமா என்று யோசித்து உதவி செய்வது மட்டும் சரியா என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் வரும் அது வர வேண்டும். 

 நாம் மற்றவர்களுக்கு செய்யும் உதவிக்காக நமக்கு எந்த ஒரு பிரதிபலனும் வேண்டாம். எந்த ஒரு நல்ல பெயரும் கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை.  அவர்கள் நம்மை பாராட்டவும் வேண்டாம். ஆனால் அவர்களுக்கு உதவி செய்த ஒரே காரணத்திற்காக நம் வாழ்க்கைக்கே பெரிய பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது இதுபோன்ற  சூழநிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கிருக்க வேண்டும்.  

 நாம் செய்யும் உதவியை பெற்றுக்கொண்டு நம்மையே குறைகூறும் பலபேர் இந்த பூமியில் இருந்துதான் வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நாம் அடையாளம் கண்டு கொள்வது பற்றி அறிய வேண்டும். இதற்கான விடையை சாணக்கியர் நமக்காக சொல்லி இருக்கின்றார். 

மேலும் படிக்க: விருப்பங்களை நிறைவேற்றும் பிரபஞ்சத்தின் 555

முதலில் அடுத்தவருக்கு  துரோகம் செய்பவர்கள். நம்முடைய எதிரிகளை கூட மன்னித்து விடலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே கூடாது. நம் முன்னோர்கள் ஒரு பழமொழியை நமக்கு கூறியிருக்கிறார்கள். 

துரோகம் செய்வோர்கள்:

சாணக்கியர்

நண்பனாக இருக்கும் ஒருவர், அடுத்தவருக்கு துரோகம் செய்வதை நீங்கள் அருகில்  இருந்து பார்த்தால் கவனமாக இருக்கவும். மற்றவருக்கு துரோகம் செய்யும் அந்த நபர், இன்று உங்களுக்கு துரோகம் செய்யவில்லை. ஆனால் அடுத்தவருக்கு துரோகம் நினைக்கும் எண்ணம் கொண்டவர் உங்களுக்கும் ஒரு நாள் துரோகம் செய்ய வாய்புள்ளது. ஒருவர்  யாருக்கு துரோகம் செய்தாலும் அது துரோகம் என தான் அழைபோம்.

இது போன்ற குணம் கொண்டவர்களிடம்  நட்பு தேவையில்லை. இது போன்ற நபர்களுக்கு உதவியும் செய்து விடாதீர்கள். பின்னாளில்  உங்களுக்கு பிரச்சனையைதான் தேடித்தரும். 

மேலும் படிக்க: மகிழ்ச்சியா இருந்தால் நினைத்தது நடக்கும்!

குறை சொல்லும் மனது:

குறை சொல்லும் மனது   கொண்டவரா நீங்கள் அப்படி எனில் உங்களை மாற்றி கொள்ளவும் மற்றவர்களும் இதனை போன்ற குணம்  கொண்ட மற்ற நண்பர்கள் இருந்தால் இதனை அறியலாம். 

குறைகள் கூறூம்  மனிதர்களை விட்டு விலகி இருத்தல் அவசியம் ஆகும்.  உங்கள் நன்கு அறிமுகமான தெரிந்த நபரோ அல்லது உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் நபரோ இப்படிப்பட்ட ஒரு குணத்தை கொண்டிருந்தால் அவர்களுக்கு உதவி என்றால் செய்ய  வேண்டியது இல்லை. எப்படியாக இருந்தாலும் உங்களைப் பற்றியும், நீங்கள் செய்த உதவியை பற்றியும் மற்றவர்களிடம் சென்று குறை கூறத்தான் செய்வார்கள் இது போன்ற நட்புகள் அவசியமா அல்லது இவர்களிடம் இருக்க வேண்டிய  தூரம் அறிந்து செயல்படுங்கள். 

சாணக்கியர்

அரைகுறை அறிவு:

மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் அரைகுறையான அறிவை உடையவர்கள் ஆவார்கள். இதனை நாம் நன்கு  தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். 

ஒன்றும் தெரியாத நபர்களுக்கு  சில விஷயத்தை சொல்லி புரிய வைத்துவிடலாம். அறிவாளிகள் சொல்வதை சுலபமாக புரிந்து கொள்வார்கள்.  ஒரு விசயம் குறித்து முழுமையாக தெரியாத அரைகுறை அறிவோடு இருக்கின்றவர்களை சமாளிப்பது கடினம் ஆகும். 

மேலும் படிக்க: முதுமையிலும் இளமை பலம் தரும் அருமருந்து கடுக்காய்!

 அரைகுறை அறிவுடையோருக்கு ஒரு விஷயத்தை சொல்லி புரிய வைப்பதற்குள் போதும் என்றாகிவிடும். அவ்வளவு விவாதத்தில் ஆகவே இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியும் உங்களை பிரச்சினையில்  நிறுத்திவிடும். 

ஒழுக்கமில்லாத பெண்:

 சாணக்கிய கூற்றுப்படி  ஒழுக்க்மில்லாத பெண்கள் பற்றி கூறி அவர்களிடம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர்.  ஒரு பெண்ணிற்கு பிரச்சனை என்றால் உதவ பலபேர்கள் இருக்கின்றனர்.

சாணக்கியர்

 இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூட ஒரு பெண் விழுந்து விட்டாள் அவளை தூக்கி விட நிறைய பேர் இருப்பார்கள். அப்படி உதவ பலபேர் இருக்கின்றனர்.  ஆனால் ஒரு பெண் தன்னை ஒழுங்கு முறையில் கொண்டு செல்ல தவறும் பொழுது அது முறையல்ல. அப்படி பட்ட பெண்களிடம் கொஞ்சம் பார்த்து நடத்தல் அவசியம் ஆகும். 

நேர்மை:

நேர்மை என்பது அவசியம் ஆகும். நேர்மை இல்லாதவர்களோடு பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.   நேர்மை இல்லாதவர்களிடம் பார்த்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நேர்மை இல்லாதவர்கள் செய்யும் எந்த செயலிலும் உங்கள் பங்கு இருக்காதது போல் பார்துக் கொள்ள வேண்டும். 

பெண்களிடம் நேர்மை இல்லாதவர்களிடம் எந்த சகவாசமும் வைத்துக் கொள்ளாதீர்கள்.  இதுபோன்ற பெண்கள் ஆபத்தானவர்கள் நிச்சயம் ஒழுங்கீனம் உடையவர்களாக தான் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்தால் பிரச்சனை  நமக்குத்தான் வரும். 

 ஒருவருக்கு சரியான நேரத்தில் செய்யப்படும் உதவி என்பது மிகவும் மகத்தான ஒன்று அதனை நாம் அறிந்து செய்தல் நலம் பயக்கும். இந்த உதவியால்  நமக்கு பிரச்சினைகள் வரும் என்றால் அதிலிருந்து நாம் தள்ளி இருப்பதில் நல்லதாகும். 

 செய்யும் உதவி யாருக்கு செய்கின்றோம் என்பதை அறிந்து செய்தல் அவசியம் ஆகும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன