ஒரே குடும்பத்தில் கொரானாவிலிருந்து குணமடைந்தனர்

  • by

தமிழகம் முழுவதும்  கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகமான கொரானா பாதிப்பு இருக்கின்றது. தற்பொழுதைய நிலையில் மாஸ்க் ஆணியாமல்   யாரும் வெளியில் வரக்கூடாது என சென்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

 நாட்டு மக்களிடையே  கொரானா பாதிப்பு அதிகரித்து காணப்படுகின்றது இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகின்றது  அதனால் இந்த பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க அரசு பலவேறு நட வடிக்கைகள் எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

சென்னையில் நடக்கும் இந்த தொற்று பரவலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில்  கடுமையான கெடுபிடிகள் நடைபெறுகின்றன. அன்றாட வாழ்க்கையே கேள்விகுறியாகிவிடும் என்ற  நிலை சென்னையில் தற்பொழுது நிலவுகின்றது. அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகள் இருந்தால் கிடைத்தால்  போதும் உயிர் மீதம் இருந்தால் போதும் என அரசு நம்புகின்றது, நாட்டின் பொருளாதாரம் அதளப் பாதாளத்தில் இருக்கின்றது. தற்பொழுது வரை     கோடிக்கு பேருக்கு மேல் வேலை இழைந்துள்ளனர். இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாடு இக்கட்டான நிலைமையில் உள்ளது. 

  ஐடி துறை, பங்குச் சந்தை,   விவசாய உற்பத்தி போன்ற துறைகள்  அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன. 3 ஆண்டுகள் இந்த பொருளாதார இழப்பை  சரி செய்ய வேண்டும். 

தமிழகத்தில் மேலும் 1173   பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் அச்சத்தில்  மக்கள் உள்ளனர். இதனை தீர்க்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படியிருக்க தமிழ்நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அச்சத்திற்கு மத்தியில்  நாம் பயப்படும் நேரத்தில் ஒரு குடும்பமே தப்பித்து பிழைத்து இருக்கின்றது. 

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

மேலும் படிக்க:கொரானா போராட்டத்தில் நாட்டின் பெண்கள்!

தமிழகத்தில் கொரானவால்  பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிழைத்துள்ளனர். இது  கொரானா பாதிப்படைந்தோர் கவனிக்க வேண்டியதாகும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அதுவும் 74 வயது மூதாட்டி  பிழைத்தார் எனில் ஏன் மற்றவர் பிழைக்க முடியாது. மன அழுத்தம் பாதி உயிரை கொள்கின்றது. இதனை போக்க வேண்டும். கொரனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையுடன் உயிர் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை கலந்த ஊக்க விதையானது அவர்கள் பார்க்கும் ஊடகம் மூலம் செய்தியாக அனுப்பினால் மனத் தைரியமே நம்மை காக்கும். மனதை கொல்லும் இந்த வியாதியை விரட்டி அடிக்க வேண்டிய பொறுப்புடன் நாம் இருக்க வேண்டும். 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதை அறிந்த பலருக்கு நம்பிக்கை  அதிகரித்துள்ளது இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் அனுப்ப பட வேண்டும். சென்னையில் அதிகரித்து வரும் கொரானா அச்சத்துடன், உயிர் பிழைத்த செய்தியை பரப்பும் பொழுது நம்பிக்கை என்பது அவசியம் என்பது தெரியவரும். 

இவ்வாறு ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 வயது பெண்மணி ஒருவரும், 23 வயது இளைஞரும் கொரோனா வைரஸ் தொற்றை வென்றுள்ளனர் என்ற செய்தியானது ஊக்கத்தை அளித்துள்ளது. தொடர்ந்து மற்றவர்களுக்கு இந்த செய்தி பரவினால் ஆரோக்கியத்துடன் மன தைரியம் அதிகரிக்கும் நோய் தாக்கம் குறையும். 

மேலும் படிக்க: கொரோனா அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன