கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த 91 வயது முதியவர்..!

  • by
91 old man from kerala has completely recovered from corona virus

கொரோனா வைரஸின் பாதிப்பு உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் உயிரிழப்புகளும், ஒவ்வொரு நாளும் ஏறுகிறது. உலகம் முழுவதும் அதிகளவில் உயிரிழந்தவர்கள் முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தான். ஆனால் இதன் அனைத்திற்கும் விதிவிலக்காக கேரளாவில் 91 வயதுடைய முதியவர் மற்றும் 88 வயதுடைய மூதாட்டி இருவர் கொரோனா பாதிப்பிலிருந்து பரிபூரணமாக குணமாகி உள்ளார்கள்.

கேரளாவின் நிலை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா கருதப்படுகிறது. அதைத் தவிர்த்து முதல் முதலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலமும் கேரளா தான். சீனாவிலிருந்து வந்த கல்லூரி மாணவி மூலமாக கேரளாவில் இந்த வைரஸ் தொற்று பரவியது, அதை தொடர்ந்து படிப்படியாக மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களின் மூலமாக கொரோனா நாட்டின் பல பேருக்கு பரவியது. இன்றுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் கேரளாவில் பாதித்து உள்ளார்கள். ஆனால் இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பாதித்தாலும் இந்த மாநிலத்தில் இரண்டு பேர் மட்டுமே உயிர் இழந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

வலிமை வாய்ந்த முதியவர்கள்

மார்ச் 31ஆம் தேதி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இரண்டு முதியவர்கள் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்து உள்ளார்கள். இவர்கள் மார்ச் மாதம் எட்டாம் தேதி கொரோனா பாதிப்பு முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் தாமஸ் என்ற 91 வயது முதியவரும் மற்றும் மாரியம்மாள் என்ற 88 வயது மூதாட்டி கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு ஏற்கனவே பல விதமான உடல் பிரச்சனை இருந்த நிலையிலும், இவர்களுக்கான சிகிச்சையை மும்முரமான அளித்தார்கள்.

மரணத்தை வென்றவர்கள்

60 வயதைக் கடந்து உயிர் வாழ்வதே கடினமாக இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 90 வயது வரை வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது, இருந்தும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலமாக கடந்த திங்கட்கிழமை இவர்கள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். கொரோனா வைரஸ் முதியவர்களை தாக்கினால் நிச்சயம் அவர்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று 100 சதவீதம் மருத்துவர்கள் கூறி வந்தார்கள். ஆனால் இதை தன் மன வலிமையுடன் வென்று இவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்கள்.

வைரஸ் பரவியதற்கான காரணம்

பத்தனமிட்ட மாவட்டத்திலுள்ள ரண்ணி என்ற கிராமத்தில் வசித்து வந்த இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் இவர்களின் மகன், மருமகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் சமீபத்தில் இத்தாலியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இவர்கள் மூலமாகவே இந்த முதியவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் இத்தாலியிலிருந்து வந்தவர்களை இன்னும் பெரிதாக பாதிக்கவில்லை, எனவே அவர்களைத் தனி அறையில் அடைத்து பாதுகாத்து வருகிறார்கள். இவர்கள் மூலமாக பரவிய இந்த வைரஸ் தாமஸ் மற்றும் மாரியம்மாவை பெரிதும் பாதித்தது. மிக இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரசை கண்டு பயப்படாதீர்கள்..!

கேரளாவின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அவரின் டுவிட்டர் பக்கத்தில் இவர்களைப் பற்றிய பதிவை வெளியிட்டார். இயற்கையாகவே கேரளாவில் வாழும் மக்களின் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் இயற்கையை ஒட்டி வாழ்வார்கள், உணவுகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் வாழைப்பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். இதன் காரணமாகவே கேரளாவில் ஏராளமான முதியவர்கள் கிட்டத்தட்ட நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். எனவே இந்த கொரோனா பாதிப்பும் அவர்களை முழுமையாக தாகாததற்கு காரணம் இதுவாக இருக்க வேண்டும். எனவே இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த சூழ்நிலையை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன