ஒன்பதாம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கும் ஆடுகளம்.

  • by

2011 ஜனவரி 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஆடுகளம். தனுஷின் எதார்த்தமான நடிப்பில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரியளவில் வெற்றியடைந்தது. இதைத் தவிர்த்து இந்த படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது. பொதுவாகவே சில வருடங்களாக தேசிய விருது தமிழ் படங்களுக்கு அதிகமாக கிடைப்பதில்லை. ஆனால், அந்த வருடம் ஒரேயடியாக ஆறு விருதுகள் கிடைத்தது.

இன்றுடன் ஆடுகளம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இந்த பதிவு. விளையாட்டுத்தனமாக சுற்றித்திரியும் சேவல்சண்டை போடும் இளைஞனின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது என்பதை தத்ரூபமான முறையில் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் காதல், பகை, நட்பு, துரோகம், தியாகம் என எல்லாவற்றையும் சரியான அளவில் திரைக்கதையில் சேர்த்திருப்பார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓர் அற்ப குணம் இருக்கிறது. அது சந்தர்ப்பம், சூழ்நிலைகளின் அடிப்படையில்தான் அவரின் உண்மையான குணம் வெளியே வருகிறது என்பதை ஆடுகளம் படத்தின் மூலமாக நாம் அறிந்திருப்போம்.

தனுஷ் ஒரு சிறந்த நடிகராக இருந்தார், ஆனால் அவருக்கு அங்கீகாரம் பெரிய அளவில் கிடைக்காமல் இருந்தது. முதன்முறையாக விஜய் அவார்ட் வாங்கிய அவர் “நான் வாங்கும் முதல் விருது, அதுமட்டுமில்லாமல் எனக்கெல்லாம் யார் விருது கொடுப்பார்கள் என்ற ஏக்கத்துடன் இருந்தேன்” என்று கூறிய அடுத்த ஆண்டே ஆடுகளம் மூலமாக தேசிய விருதைத் தட்டிச் சென்றார். இளம்வயதில் தேசிய விருதை தட்டிச் சென்ற கதாநாயகன் என்ற சிறப்பையும் பெற்றார்.

மேலும் படிக்க – நம்ம வீட்டு பிள்ளை “சிவகார்த்திகேயன்” வாழ்க்கை முறை.!

படத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட வெற்றிமாறனுக்கு திரைக்கதை மற்றும் இயக்குனருக்கான விருது கிடைத்தது. இதைத் தவிர்த்து பிலிம்பேர் அவார்ட் ஏராளமாக இந்தப் படத்திற்கு கிடைத்தது. பொல்லாதவன் படத்தின் மூலமாக வெற்றிமரனை குறைத்து மதிப்பிட்ட அனைவரின் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு ஆடுகளம் படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் இருந்தது. ஆடுகளத்தின் மதுரை பேச்சு வழக்கு, சேவல் சண்டைகள், துரோகம், காதல் என அவர் வாழ்க்கையில் தொடர்பில்லாத எல்லா சம்பவங்களையும் கற்பனை மூலமாக கதையாக மாற்றி திரைக்கதையாக அமைத்து இத் திரைப்படத்தை இயக்கினார். இவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதான் தேசிய விருது.

தேசிய விருதின் ஸ்பெஷல் ஜூரி விருதை இத்திரைப்படத்தின் வில்லன் ஜெயபாலன் தட்டிச்சென்றார். படத்தில் இவரின் கதாபாத்திரம், அன்றுவரை தமிழ் சினிமாவில் இதுபோன்ற விசித்திரமான வில்லனை யாரும் கண்டதில்லை.

ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு இருந்தும், இவருக்கு விருதுகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தென்னிந்திய விருதுகள், விஜய் அவார்ட் போன்ற விருதுகள் இவருக்கு கிடைத்தது.

ஒத்த சொல்லால என்ற பாடலுக்கு தத்ரூபமான முறையில் நடனத்தை அமைத்திருந்த நடன இயக்குனர் தினேஷ் குமாருக்கு தேசிய விருது கிடைத்தது. நடனம் என்றால் விதவிதமான கோணங்களில், விசித்திரமான முறையில், உடம்பை வளைத்து நெளித்து ஆடுவது என்று நம்பி வந்த அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில் படத்தில் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரம் எந்தவித நடனத்தை ஆடுவாரா அதே நடனத்தை கோரிய கிராப் செய்திருந்தார் தினேஷ். இதனாலேயே இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தவிர்த்து படத்தின் எடிட்டர் கிஷோருக்கும் தேசிய விருது கிடைத்தது. என தமிழர்களின் தலையை உயர்த்தும் வகையில் இத்திரைப்படம் இருந்ததால் இதில் சிறந்து விளங்கிய அனைவருக்கும் தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் துரதிருஷ்டவசமாக சிலருக்கு விருதுகள் கிடைக்காமல் போனது.

மேலும் படிக்க – சூரரைப் போற்று சூர்யாவின் வாழ்க்கை முறைகள்.!

ஒரு படத்திற்காக கதாநாயகன் தனது உடம்பை குறைக்க அல்லது உடல் எடையை கூட்டுவதை தவிர்த்து வேறு எந்த மெனக்கெடலும் கதாநாயகர்கள் செய்வதில்லை. ஆனால் இத்திரைப்படத்தில் மதுரை வட்டார மொழியை தனுஷ் கற்றுக்கொண்டார். இதை தவிர்த்து ஒரு சேவல் சண்டை விடும் நபர் தனது உடல் பாவனையை எப்படி செய்வார் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அசத்தி இருந்தார். இதற்காகவே இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இத்திரைப்படத்தில் தப்சி பன்னு அறிமுகமானார். இவரைத் தொடர்ந்து முருகதாஸ், நரேன் போன்றவர்களுக்கு  இது முதல்படம். இவர்களைத் தவிர்த்து மீனல், கிஷோர், அட்டக்கத்தி தினேஷ், ஜெயபிரகாஷ் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் பாடல் காட்சிகள் அனைத்தும் சம்பவங்களாகவே இருந்தது. இதற்காக பெரிய அளவில் காட்சிகளை அமைக்க வில்லை, ஒரு சாதாரண காதலர்கள் தங்களது தினசரி வாழ்க்கை எப்படி கழிக்கிறார்கள் என்பதை மிக அழகான முறையில் திரைக்கதை அமைத்திருந்தார் வெற்றிமாறன்.

மேலும் படிக்க – சிவாஜி கணேசனின் பேரனும் விக்ரம் பிரபுவின் வாழ்க்கைமுறை.!

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வட சென்னை, அசுரன் போன்ற படங்களில் இவர்களது கூட்டணி வெற்றி பெற்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இன்னும் இவர்களின் கூட்டணியில் வடசென்னையின் இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கிறது. படத்தின் ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன