மனைவி செய்யும் இதுபோன்ற 8 செயல்கள் கணவன்மார்களுக்கு பிடிப்பதில்லை.!

8 Things That Husbands Don't Like in their Wife

கணவன் மனைவி என்னதான் ஒன்றாக அன்பாக இருந்தாலும் அவர்களுக்குள் பிடிக்கும் மற்றும் பிடிக்காத செயல்கள் எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் பொதுவாக ஒரு ஆண், தனக்கு என்ன பிடிக்கவில்லை என்பதை வெளியில் சொல்ல மாட்டான். அதை தவிர்த்து ஒரு பெண்ணுக்கு அதை புரிய வைக்கும் வகையில் சில செயல்களை செய்ய முயற்சிப்பான். அது தோல்வி அடைந்தால் இருப்பதை இருப்பது போன்று ஏற்றுக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் வாழ்கிறான். எனவே இதுபோல் ஒரு பெண்ணிடம் ஆண்களுக்கு பிடிக்காத 8 செயல்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

பெண்கள் எப்போதும் சேமிப்பை விரும்புவார்கள். 

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வெளியே செல்லும்போது சரியாக கணக்கிட்டு தேவையான அளவு பணத்தை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். அதைத் தவிர்த்து அதற்குள் செலவு செய்யுமாறு நம்மை கட்டுக்குள் வைப்பார்கள். இதுபோன்ற செயல்கள் பெண்கள் சேமிப்பின் காரணமாக செய்தாலும் சில சமயங்களில் நாம் நினைத்த பொருளை நினைத்தபடி வாங்க முடியாமல் அதன் விலையை பார்த்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். சேமிப்பு வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் வெளியே செல்லும் போது இது போன்ற செலவுகளுக்கு வழி வழங்குவது நல்லது.

மேலும் படிக்க – தடம் மாறும் மனைவியை கண்கானிக்கும் வழிகள்!

வேறு ஒரு பெண்ணை பாராட்டினால்

ஒரு கணவன் வேறு ஒரு பெண்ணை பாராட்டினாள் உடனே தன் மனைவி அந்தப் பெண்ணையும் தன்னையும் ஒன்றாக இணைத்து ஒப்பிட்டுப் பார்ப்பாள். இது போன்ற செயல் ஆண்களுக்கு பிடிப்பதில்லை. என்னதான் இருந்தாலும் அவள் தன் மனைவி அவன், அவளை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவளுடன் வாழ்ந்து வருகிறான். ஆனால் வேறு ஒரு பெண்ணை புகழ்ந்ததின் காரணமாக தன்னைவிட அவள் சிறந்தவளா என்ற கேள்விகளை கேட்டு சண்டையிடுவாள்.

குடும்ப ஒப்பிடு

தன் குடும்பத்தையும் கணவன் குடும்பத்தையும் வெவ்வேறு குடும்பமாகவே பார்ப்பாள். ஒரு பெண்ணின் சகோதரன் அல்லது சகோதரி எதை சொன்னாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பெண். தன் கணவனின் சகோதரன் அல்லது சகோதரி சொல்லும்போது அவர் ஏன் எனக்கு கட்டளை விதிக்கிறார் என்ற கேள்விகளை கேட்பாள். அதுமட்டுமல்லாமல் எப்போதும் எதிரியை போலவே அல்லது வேற்றுகிரகவாசிகளை போல் அவர்களை பார்ப்பாள்.

மேலும் படிக்க – மாமியார் மருமகள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும்

பாராட்டை எதிர்பார்பது

ஒரு பெண் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆண்கள் கவனித்து பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். ஆண்கள் ஒரு பெண்ணை பார்வையால் ரசிப்பார்கள் ஆனால் அதை வார்த்தையாக சொல்லும்போது அவர்களின் முதிர்ச்சி நிலை தடுத்துவிடுகிறது. இதை அறியாத பெண் தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் பாராட்டவேண்டும் என்ற நேரடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.

நேரத்தை அழிப்பது

அதே போல் ஒரு ஆண் நண்பர்களுடன் நேரத்தை கழிக்கும்போது அல்லது ஏதாவது அலுவலக கொண்டாட்டங்களுக்கு சென்று இருக்கும்போது ஒரு பெண் அவ்வப்போது தொலைபேசி மூலமாக அவர்களின் செயலை பற்றி அறிந்து கொண்டே இருப்பார்கள். இது போன்ற செயல் ஆண்களுக்கு பெரிதாக பிடிப்பதில்லை.

மேலும் படிக்க – பெண்களிடம் பழகும் ஆண்கள் கவனத்திற்கு..!

சண்டைகள் 

ஒருமுறை சண்டைகள் ஏற்பட்டால் அந்த சண்டையை அப்போதே மறந்து விடாமல் அடுத்த சண்டையிலும் முன் சண்டையில் பேசிய வார்த்தைகள் மற்றும் பயன்படுத்திய சொற்கள் அனைத்தையும் ஒப்பிட்டு சண்டைக்கான டைம்லைனில் வகுத்து வைத்திருப்பார்கள்.

இயல்பு வாழ்க்கையை மறுப்பது

கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் ஒருவித பயத்திலேயே இருப்பார்கள். நான் கருமையாக உள்ளேன், என் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளது, எனது முடி உதிர்கிறது என்று இயற்கையாக நடக்கக்கூடிய விஷயங்களைக்கூட பெரிதாக எடுத்துக்கொண்டு மனம் உளைச்சளில் இருப்பார்கள்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்

எந்த ஒரு திருமண கொண்டாட்டத்திற்கு சென்றாலும் இவர் என்னைப் பற்றி என்ன நினைத்தார், அவர் என்ன நினைக்கிறார் என் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். அதை தவிர்த்து, மற்ற கணவர்களின் வருமானம் எவ்வளவு என்பது அறிவதற்கான முயற்சிகளை செய்வார்கள். முன்பின் தெரியாதவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற எண்ணம் அதிகரிக்கும் பெண்கள் தன் கணவன் என்ன நினைக்கிறான் என்பதை பற்றி சிந்திப்பதில்லை.

எனவே பெண்கள் தன் வாழ்க்கையை தனக்கு பிடித்ததை போல் வாழ்ந்து கொண்டு மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி அவ்வப்போது அவர்களும் மன உளைச்சலுக்கும் செல்கிறார்கள். எனவே இதைத் தவிர்த்து தங்களுக்கு பிடித்தமான வாழ்க்கை சுதந்திரமாக வாழ்வதை அவர்கள் உணர வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன