கெட்ட கனவுகள் நமக்கு என்ன சொல்ல வருகிறது..!

8 most Common bad dreams and what they mean

நாம் வாழ்க்கையில் சாதிக்க முடியாத பலவற்றையும் நம் கனவுகள் மூலமாக சாதித்து வருகிறோம். கனவு காண்பது என்பது சில சமயங்களில் நமக்கு மனநிறைவைத் தந்தாலும் பல சமயங்களில் சில தீய கனவுகளினாள் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறேம். இதுபோன்ற நேரங்களில் நாம் அதை வெளியில் சொல்லலாமா, வேண்டாமா என்ற தயக்கம் நமக்கு ஏற்படும்.

கனவுகள் ஏற்படுவதற்கான காரணம்

நமக்கு கனவுகள் வெவ்வேறுவிதமான காரணங்களினால் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு பகல் நேரத்தில் கனவுகள் ஏற்படும். மற்றவர்களுக்கு இரவு இரவில் ஏற்படும். இரவில் மட்டும் மூன்று வகையான இரவுகள் இருக்கின்றன, இதில் நாம் காணும் கனவுகள் ஒவ்வொரு இரவிலும் வெவ்வேறு விதமான வெளிப்பாட்டை நமக்கு தருகிறது. இதை அறிந்து அதற்கேற்ப பரிகாரங்களை செய்வதன் மூலம் நமது கனவுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

கெட்ட கனவுகளும் அதன் விளைவுகளும்

ஒரு ஆசிரியர் உங்களுக்கு பாடம் நடத்துவதை போன்ற கனவுகளைக் கண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். 

திருமணமாகாதவர்கள் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் அவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகும். திருமணமானவர்களுக்கு செல்வம் வந்து சேரும்.

இறந்தவர்களின் உடலை கனவில் கண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் உங்கள் நண்பனின் ஆயுள் அதிகரிக்கும்.


மேலும் படிக்க – சனி பெயர்ச்சியில் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம்!

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கனவுகள்

மேலிருந்து கீழே விழுவதைப் போல் கனவு கண்டால் உங்களுக்கு பணம் பாராட்டுக்கள் அதிகரிக்கும். தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் உங்களை நெருங்கி வந்த ஆபத்துக்கள் விலகும்.

இறந்தவர்களுடன் பேசுவதைப் போல் கனவுகள் வந்தால் உங்களுக்கு அதிகாரம், பதவி, லாபங்கள் அனைத்தும் கூடிவரும். மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு புதையல் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

மலத்தை மிதிப்பதை போல் கனவு கண்டால் உங்களுக்கு சுபச் செலவுகள் அதிகரிக்கும். புயல் காற்று, சூறாவளி போன்றவைகளை கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் குணமாகும்.

மேலும் படிக்க – தர்பணம் தர சிறந்த நாள் தை அம்மாவாசை

பாதிப்படையச் செய்யும் கனவுகள்

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். இடியுடன் கூடிய மழையை கனவில் கண்டால் குடும்பத்திற்குள் அல்லது சொந்தங் களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும். எலிகளை கனவில் கண்டால் உங்கள் எதிரியின் பலம் அதிகரிக்கும்.

பசு உங்களை விரட்டுவதை போன்று கனவு கண்டால் உங்களை ஏதோ ஒரு வியாதி தாக்கப்பட போகிறது என்பதற்கான அர்த்தம். எனவே இதுபோன்ற சமயங்களில் கனவைப் பற்றி வெளியே சொல்லாமல், பசுவிற்கு கீரை அல்லது புல்களையே உணவாக அளிப்பதன் மூலம் நீங்கள் வியாதியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – திரிபாலா ஆரோக்கியத்தின் ஆசானுன்னு சொல்லலாம்.!

இதுபோல் உங்களுக்கு கெட்ட கனவுகள் வந்தால் நல்ல காரியங்களும், நல்ல கனவு வந்தால் கெட்ட காரியங்கள் என மாறி மாறி வரும். எனவே அதற்கான அர்த்தங்களை அறிந்து அதற்கேற்ப பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் கனவுகள் பாதிப்படையாமல் சந்தோஷமாக இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன