மனோதத்துவ நிபுணரை பார்ப்பதற்கான 7 அறிகுறிகள்..!

  • by
7 signs that you should consult a psychologist

குடும்பத்தில் அமைதி, உறவுகளின் சந்தோஷம், தேவையான செல்வம், வெளி உலக தொடர்பு, எட்டு மணி நேரம் தூக்கம், பாசம், காதல் இது போன்ற அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் சரியாக இருந்தால் உங்களை விட ஆசிர்வதிக்கப்பட்டவர் இந்த உலகில் யாரும் இல்லை. ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் இதில் ஒன்று கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள். அதைத் தவிர்த்து இதில் ஒரு சில பகுதிகள் இருந்தும் ஒரு சிலர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி நீங்கள் வந்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும், அதை கண்டறிந்து உங்கள் வாழ்க்கையை செம்மையாக்குவதற்காக உதவுபவர்தான் மனோதத்துவ நிபுணர்.

போபியா என்ற பயம்

பயம் என்பது ஒரு உணர்வு, அந்த உணர்வு எப்போது நம் கட்டுப்பாட்டை விட்டுச் செல்கிறதோ அப்போதுதான் அது சோபியாவாக மாறுகிறது. ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பயம் நிச்சயம் இருக்கும், ஆனால் அது அனைத்தும் சமநிலையில் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு தெரியாது ஆனால் ஒரு சிலரின் ஒரே ஒரு பயம் மட்டும் அவர்களை வாட்டி வதைக்கும். உயரம், பள்ளம், சரிவு போன்றவைகளை பார்க்கும்போது ஒரு சிலருக்கு பயம் இருக்கும். பாம்பு, பல்லி, பூச்சிகள் போன்றவைகளைப் பார்க்கும்போதும் ஒரு சிலருக்கு பயங்கள் உண்டாகும். இருட்டு, பூட்டிய அறை, புதிதாக யாரையாவது சந்தித்தால் போன்றவைகளால் பயங்கள் உண்டாகும். இதுபோன்ற பயங்கல் உங்களை முந்திக்கொண்டு உங்கள் உணர்வுகளை காயப்படுத்தினால் உடனே மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும்.

மனோதத்துவ நிபுணரிடம் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு பெற இந்த இணைப்பை அழுத்தவும்

மன அழுத்தம் மனப் பதற்றம்

நமக்கு முன்பின் தெரியாத செயலை தொடங்குவதாக இருந்தால் நிச்சயம் நம்முடைய மனம் அழுத்தத்திற்கு உள்ளாகும். ஆனால் எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும், நாம் மன அழுத்தம், மனப் பதட்டம் போன்ற பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் அது ஒரு தீராத வியாதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது போல் மனம் பிரச்சினைகளில் சிக்கி உள்ளவர்கள் அதை எளிதாக தீர்ப்பதற்கு மனோதத்துவ நிபுணர்கள் உதவுகிறார்கள்.

குடும்பம் மற்றும் உறவு

குடும்பத்தில் அமைதி இல்லாமை, உறவுகளுக்குள் எப்போதும் பிரச்சினைகள் போன்றவைகள் இருந்தால் நீங்கள் உடனே மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் உண்டாகும் குடும்ப பிரச்சனையை எளிதாக எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வை அளித்து வந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினையினால் உங்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி இன்மை அதிகரித்தால் அதற்கு உடனடித் தீர்வு அளிக்க வேண்டும். லிட் வாழ்க்கையில் அதிக நேரம் நாம் வீட்டில் இருக்கிறோம், அந்த வீட்டில் நாம் அமைதியான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். அது தவறும் பொழுது வாழ்க்கையை எதிர் கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் படிக்க – உடல் உஷ்ணத்தை சீராக்கி ஆரோக்கியமாக வாழுங்கள்..!

செயல்திறன் பிரச்சனை

நம்மைச் சுற்றியுள்ள எல்லா பிரச்சினைகளையும் நம் மனதுக்குள் போட்டுக் கொண்டால் நம்முடைய செயல்திறன் மிகப் பெரிய அளவில் பாதிப்படையும். வேலைகளில் உங்கள் செயல்திறன் மோசமாக இருந்தாலோ அல்லது குடும்பத்தில் உங்களால் பிரச்சினைகள் உண்டானாலும் உடனே நீங்கள் மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும். செயல்திறன் இல்லாமை உங்கள் வாழ்க்கையில் தொய்வை உண்டாக்கும். இதனால் தவறான எண்ணங்களை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும். இதை ஆரம்பத்திலேயே மனோதத்துவ நிபுணரை சந்தித்து உரையாடி உங்கள் வாழ்க்கையை திரும்பப் பெறலாம்.

தெளிவில்லாமல்

நீங்கள் பிறந்து, வளர்ந்த உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு நிலையை அடைவீர்கள். அப்போது உங்களைச் சுற்றி உள்ளவர்கள் எட்டாத உயரத்தில் இருந்தால், உங்கள் மனதில் ஏராளமான கேள்விகள் உண்டாகும். உங்களை தவிர்த்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வளர்ந்து இருந்தும், நீங்கள் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு வந்தால் நிச்சயம் உங்களுக்கு மணப் பிரச்சினை இருக்கும். இது உங்களின் அறியாமை என்று ஒரு சிலர் சொன்னாலும் உண்மையில் உங்களுக்கு தெளிவின்மை பிரச்சனை இருக்கும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் கண்மூடித்தனமாக செய்யும் தவறான சிந்தனையில் நீங்கள் வாழ்வீர்கள். எனவே இது போன்ற சிந்தனைகளை அடியோடு அழித்து எல்லா செயலையும் ஆராய்ந்து தெளிவாக செயல்படுத்தும் எண்ணத்தை வளர்க்க வேண்டும். அதற்கான சிறந்த தீர்வாக மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும்.

இழப்பு மற்றும் காதல் தோல்வி

மிக அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இடியாக ஒரு சில பிரச்சனைகள் உண்டாகும். அது நெருங்கியவர்களின் இழப்பு அல்லது உயிருக்கு உயிராக காதலித்தவர்களின் பிரிவு போன்றவையாகும். தினமும் நாம் சந்தித்து வரும் ஒரு நபர் நிரந்தரமாக நம்மை விட்டுப் பிரிந்தால் அது நம் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அவரை மீண்டும் சந்திக்க முடியாத சூழல் உங்கள் மனதை பலவீனமாக்கும். இதிலிருந்து வெளிவர மனோதத்துவ சிகிச்சை உங்களுக்கு உதவும். அதேபோல் எண்ண முடியாத அளவிற்கு இதயத்தில் வலியை உருவாக்கும் சம்பவம் தான் காதல் தோல்வி. ஒரு சிலர் இதிலிருந்து எளிமையாக வெளி வருவார்கள், ஆனால் மற்றவர்களோ இதில் சிக்கி நம்மையும் மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் கஷ்டப்படுத்தி வருவோம். இதை உடனடியாக தீர்ப்பதற்கு நாம் இந்த சிகிச்சையை பெற வேண்டும்.

மேலும் படிக்க – உணவுகளை டெலிவரி செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து..!

தீய பழக்கங்கள்

எல்லோர் வாழ்க்கையிலும் தடுமாற்றம் என்பது நிச்சயம் இருக்கும், அப்படி நாம் தடுமாறிய நிலையில் நமக்கு ஒரு சில தீய பழக்கங்களில் சகவாசம் உண்டாகும். புகை பிடித்தல், மது அருந்துதல் அல்லது பெண்கள் மேல் மோகம் போன்ற தீய பழக்கங்கள் நம்மை ஒவ்வொரு நொடியும் கீழே தல்லும். அதில் இருந்து நிரந்தரமாக வெளிவருவதற்கு நாம் மருத்துவரை சந்திக்க வேண்டும். அப்படியும் உங்களால் இது போன்ற பழக்கங்களை கைவிட முடியவில்லை என்றால் மனோதத்துவ நிபுணரை சந்தித்து அதற்கான தீர்வைப் பெறலாம். தீய பழக்கங்களைத் தவிர்த்து நாம் கைவிட நினைக்கும் எந்த பழக்கமாக இருந்தாலும் அது அனைத்திற்க்கும் மனோதத்துவ சிகிச்சையில் தீர்வு இருக்கிறது.

நாம் வாழப்போகும் ஒரு வாழ்க்கையை இது போன்ற பிரச்சினைகளை கொண்டு சீரழிக்க வேண்டாம். அதை தவிர்த்து நம் வாழ்க்கையை புதுப்பித்து ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ வேண்டும். நீங்கள் மனோதத்துவ நிபுணரை சந்திக்கும் பொழுது அவர் அளிக்கப்படும் சிகிச்சையினால் உங்கள் வாழ்க்கையின் மாற்றத்தை நீங்களே உணரலாம். அதே போல் மனம் விட்டு பேசும் மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன