கண்ணாடி போன்ற சருமத்திற்கு இந்த 7 பொருளை பயன்படுத்துங்கள்..!

7 Home remedies to get a crystal clear skin

முகத்தின் அழகை அதிகரிப்பதற்காக நாம் ஏகப்பட்ட பதிவுகளை பார்க்கிறோம். ஆனால் அதில் ஒரு சிலவற்றே நமக்கு திருப்தியை தருகிறது. அதேபோல் இதற்காக நாம் பல பொருட்களை வாங்கி ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவி, நாம் உண்மையில் அழகை அதிகரித்துவிட்டோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். எனவே இதுபோன்ற அழகு சாதன பொருட்களை முடிந்தவரை தவிர்த்து வீட்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை கண்ணாடி போல் மாற்ற முடியும்.

தேயிலை மர எண்ணெய்

உங்கள் சருமத்தின் அழகை அதிகரிப்பதற்காக இயற்கையாக கிடைக்கப்படும் தேயிலை மர எண்ணெய் பயன்படுத்துங்கள். இதை கொண்டு உங்கள் முகம் முழுக்க தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அனைத்தையும் நீக்கி உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். நாளடைவில் இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களுக்கு கண்ணாடியை போன்ற மின்னும் சருமத்தை இது தரும்.

கிரீன் டீ

நாம் உடல் ஆரோக்கியத்திற்கு கிரீன் டீயை பயன்படுத்தி வருகிறோம். இதை குடிப்பதன் மூலமாக நம் உடம்பில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. ஆனால் இதை வைத்து நமது சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் மாற்றமுடியும். இதற்கு நாம் கிரீன் டீயை பயன்படுத்திய உடன் அந்த தேயிலையை கொண்டு நம் முகத்தில்  ஃபேஸ் மாஸ்க் ஒன்றை போட்டுவிடவேண்டும். இதை 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து அழுக்குகளும் விலகி பொலிவுடன் இருப்பீர்கள்.

மேலும் படிக்க – ஸ்ருதிஹாசனின் வாழ்க்கை முறைகள் பிடித்தது பார்போம்

ஆலுவேரா

ஆலுவேரா செடியை நாம் வளர்ப்பது மிக எளிமையான காரியம். அதற்கு பராமரிப்பும் அதிகமாக தேவையில்லை. எனவே ஆலுவேராவை வீட்டில் நட்டு வையுங்கள். இதன் மூலமாக உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

ஆலுவேரா இடையில் இருக்கும் ஜெல்லை எடுத்து உங்கள் சருமம் முழுக்கத் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து தினமும் காலையில் செய்து வந்தால் உங்கள் சருமம் ஆலுவேராவை போல் மினுமினுப்பாகவும், மென்மையாக இருக்கும். ஒரு சிலர் ஆலுவேரா ஜெல்லை கடையில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதை ஒப்பிடுகையில் நாம் தயாரிக்கும் ஆலுவேரா மிக ஆரோக்கியமானது.

இயற்கை தேன்

இயற்கையாக உற்பத்தியாகும் தேனை கொண்டு நம் சருமத்தை அழகாகலாம். இதற்கு நாம் கடைகளில் விற்கப்படும் தேன்களை பயன்படுத்தாமல் இயற்கையாக மலைகளிலிருந்து எடுக்கப்படும் தேனை வாங்கி நம் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் நாம் மிகப் பொலிவுடன் அழகாகவும் இருக்க முடியும். தேனின் ஏகப்பட்ட சத்துகள் இருப்பதனால் நம் சருமத்திற்கும் அது வலுவூட்டுகிறது.

மேலும் படிக்க – சருமத்தில் பிரச்சனையா..இதோ உங்களுக்கான தீர்வு..!

தேங்காய் எண்ணெய்

நாம் தினமும் தலைக்கு பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெயை சிறிது சருமத்திலும் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை 20லிருந்து 30 நிமிடங்கள் வரை தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் சருமம் மென்மையாகவும், கண்ணாடி போல பளபளப்பாகவும் இருக்கும். இதை எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

விளக்கெண்ணெய்

வயிற்று வலியைப் போக்கி, உடல் சூட்டை தணிக்க உதவுவது தான் விளக்கெண்ணெய். இதை கொண்டு சருமத்தை மசாஜ் செய்வதன் மூலம் நமது சருமத்தின் வெப்பநிலையை சமநிலையில் கொண்டுவந்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை அகற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. எனவே விளக்கெண்ணையை கொண்டு 15 நிமிடங்கள் தினமும் மசாஜ் செய்து அழகான சருமத்தை பெற்றுங்கள்.

மேலும் படிக்க – கூந்தல் பிரச்சினையிலிருந்து விடுபட!

வலி நிவாரண மாத்திரை

மருத்துவமனைகளில் நமக்கு ஏதாவது வலிகள் இருந்தால் அவர்கள் முதலில் கொடுக்கப்படுவது ஆஸ்பிரின், அதாவது வலி நிவாரண மாத்திரை. இதை பொடியாக்கி நமது சருமத்தில் இருக்கும் முகப்பரு, கரும்புள்ளி போன்ற இடங்களில் வைப்பதன் மூலம் இது அனைத்தும் அகன்று உங்களுக்கான அழகிய சருமத்தை தரும். இதை அதிகமாக பயன்படுத்தினால் முகத்தில் எரிச்சல் உண்டாகும், எனவே முடிந்தவரை சிறிதளவு தண்ணீரில் கலந்து உங்கள் சருமத்தில் பயன்படுத்துங்கள். அதை தவிர்த்து இதன் முடிவு தேதியை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுபோல் உங்களுக்கு உடனடி பொலிவு வேண்டுமென்றால் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து உங்கள் சரும அழகை அதிகரிக்க முடியும். இதற்காக பணங்களை ஏராளமாக செலவு செய்யாமல் எளிமையான முறையில் இது போன்ற இயற்கைப் பொருட்களை உபயோகப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன