காதல் பிரிவில் இருந்து வெளியேறுவதற்கான ஐந்து வழிகள்.!

5 ways to overcome love failure

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு ஆரம்பத்தில் அது எந்தளவுக்கு நமக்கு மகிழ்ச்சியை தருகிறதே அதே அளவுக்கு துன்பத்தையும் தரும் இதை கடந்து காதலில் ஜெயிப்பது என்பது மிகவும் கடினம் காதலர்கள் பல ஆண்டுகளாகவே ஒன்றாக வாழ்ந்து வருவார்கள் ஆனால் அதுவே தோல்வியுற்றால் ஒருவரையொருவர் பிரிந்து மிகவும் கஷ்டப்படுவார்கள் இப்படி பிரிதலை மிக எளிமையான முறையில் மறக்க வேண்டுமென்றால் இந்த வழிகளை கடைபிடியுங்கள்.

1. செடிகளை வளருங்கள் 

காதல் தோல்வியில் நாம் எந்த ஒரு செயலும் செய்யாமல் வருத்தத்துடன் இருப்போம் இந்த சமயங்களில் உங்களுக்கு பிடித்தமான பூக்களின் செடிகளை வாங்கி வளருங்கள் தினமும் அதற்கென்று தண்ணீர் ஊற்றுங்கள் அதை அவ்வப்போது அழகு படுத்துங்கள் இது உங்களின் கவனத்தை திசை திருப்பி உங்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர உதவும்.

மேலும் படிக்க – உங்கள் உள்ளத்தை கிழித்து காதல் உணர்வை தூண்டும் சிறந்த காதல் பாடல்கள்!

2. சுற்றுலா செல்லுங்கள் 

ஒரே இடத்தில் இருந்தால் நிச்சயம் உங்கள் காதல் தோல்வியின் வலியை அதிகரிக்கும் இதனால் உங்களுக்கு பிடித்தமான இடத்திற்கு சுற்றுலா சென்று வருவது மிகவும் நல்லது ஆனால் நீங்களும் உங்கள் காதலனும் ஒன்றாக சென்ற இடத்திற்கு செல்வதை தவிர்க்கவும்.

3. உங்கள் வீட்டை அலங்கரியுங்கள் 

நீங்கள் இருக்கும் வீட்டை முழுமையாக மாற்றி அமையுங்கள் பின்பு அதை மிக அழகான பொருட்களைக் கொண்டு அலங்கரியுங்கள் இதனால் உங்கள் வீட்டின் மேல் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்குமே தவிர உங்கள் காதலைப் பற்றி யோசிக்க நேரம் இருக்காது.

மேலும் படிக்க – காதலர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய காதல் திரைப்படங்கள்!

4. பயிற்சி வகுப்புக்கு செல்லுங்கள் 

நீங்கள் படிப்பவராக இருந்தால் வீட்டிற்கு வந்தவுடன் சிறப்பு வகுப்புக்கு செல்வது நல்லது உதாரணத்துக்கு குத்துச்சண்டை பயிற்சி, யோகா பயிற்சி போன்றவற்றில் செல்லலாம் அதுவே நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் ஏதாவது விளையாட்டு பயிற்சி கூடங்களுக்கு செல்லலாம் இது உங்கள் காதல் தோல்வி உணர்வை மாற்றிவிடும்.

5. நண்பர்கள் 

எதையும் எளிமையாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களிடம் பழகுங்கள் அவர்களுடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள் ஏனென்றால் இது போன்றவர்களுடன் இருக்கும் போது உங்களுடைய நேர்மறை சக்தி அதிகரிக்கும் இதனால் நீங்கள் காதல் தோல்வி அடைந்தாலும் அந்த உணர்வு உங்களை சுற்றி வராமல் உங்களை பார்த்துக் கொள்வதில் இது போன்ற நண்பர்களின் கடமையாக இருக்கும்.

மேலும் படிக்க – சிறந்த பத்து காதல் தோல்வி தமிழ் பாடல்கள்!

காதல் தோல்வி அடைந்த பின்பு எப்போதெல்லாம் தங்கள் காதலன் அல்லது காதலியை பற்றி நினைவுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நாம் அவர்களை நினைத்து அதிகளவில் வருத்தப்படுவோம் ஆனால் மேலே குறிப்பிட்ட வழிகளை பின் தொடருங்கள் அவர்களின் எண்ணம் வராமல் எல்லாம் இருக்காது அவ்வப்போது வரும் ஆனால் அந்த வலியை நாம் ஏற்றுக் கொண்டு தனக்கென ஒரு புதிய வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்து நம் மனதையும் தேற்றிக்கொண்டு நம்முடைய வேலைகளை செய்ய ஆரம்பிப்போம் இதுபோன்று எப்போது நாம் சரியான தடத்திற்கு செல்கிறோமோ அப்போதுதான் நாம் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும் அதே சமயத்தில் நமக்கென இந்த உலகத்தில் பிறந்திருக்கும் துணையை நாம் சந்தித்து வாழமுடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன