பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்கள்

Things women don't like in men

ஒரு பெண்ணுக்கு ஆணிடம் ஏகப்பட்ட விஷயங்கள் பிடிக்காமல் இருக்கும் எது செய்தாலும் எனக்கு இது பிடிக்காது அது பிடிக்காது அதை சொல்லக்கூடாது என்று அடுக்கிக் கொண்டே போவார்கள் இப்படி இருக்கும் பெண்களிடம் ஆண்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருவார்கள் எனவே அவர்களுக்கு ஒரு தெளிவில்லாமல் எது ஒரு பெண்ணுக்கு பிடிக்காது என்பதை தெரிவிக்கவே இந்த பகுதி இதில் பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.

1. அவர்களை கவனிப்பதை தவிர்த்தாள் 

ஒரு பெண் எப்போதும் புதுவிதமான ஆடைகள் மற்றும் புதுவிதமான கூந்தலை கட்டி வருவார்கள் இதை ஆண்கள் எப்போதும் பாராட்ட வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் எப்போது ஒரு ஆண் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவனம் காட்டாமல் வேறு ஏதாவது பற்றி பேசினால் பெண்களுக்கு அவர்களை சுத்தமாக பிடிக்காது.

மேலும் படிக்க – திருமணத்தை எளிமையாக்கும் சிறந்த திருமண தளங்கள்!

2. மறதி உள்ளவர்கள் 

ஒரு பெண் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பது தனக்கு பிடித்த மற்றும் மிக முக்கியமான நாட்களை ஒரு ஆண் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் ஆனால் சில சமயங்களில் ஆண்கள் அதை மறந்து அந்த நாளை மோசமானதாக மாற்றிவிடுவார்கள் இதுபோன்ற செயல்கள் பெண்களுக்கு பிடிக்காது.

3. அடிமையாக இருப்பவர்கள் 

ஒரு ஆண் எப்போதும் மது மற்றும் புகையிலைக்கு அடிமையாக இருப்பார்கள் அதை தவிர்த்து இப்போது இருக்கும் ஆண்கள் மொபைல் போனில் விளையாடும் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் இதுபோன்று செய்யப்படும் செயல்கள் பெண்களுக்கு பிடிக்காது.

மேலும் படிக்க – ஒருதலைக் காதலில் வாடும் பெண்களுக்கான பாடல்!

4. உண்மை இன்மை 

எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது இவர்கள் பெண்களை சந்தோஷப் படுத்துவதற்காக எந்த ஒரு பொய் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள் அதே சமயத்தில் இவர்களை விட்டு விலகுவதற்கு மற்றும் செய்த தவறை நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் பொய்களை பெண்கள்  எப்போதும் ஏற்க மாட்டார்கள்.

மேலும் படிக்க – 90களின் மிகச் சிறந்த காதல் பாடல்கள்!

5. புரிதல் இல்லாமை 

ஒரு பெண் எதைச் சொல்கிறாரோ அதை அவள் கூறியதை விட பல மடங்கு அதிகமாக ஒரு ஆண் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள் இது போன்று இல்லாமல் தான் சொல்ல வருவதை கூட தவறுதலாக புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

எனவே இதுபோன்ற செயல்களை ஆண்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும் ஒரு பெண் உங்களை வெறுப்பதற்கான காரணங்கள் அதிகமாக இருந்தாலும் முழுமையாக வெறுப்பதற்கு இந்த காரணங்களே போதும் எனவே எப்போதும் அவர்களை புரிந்து கொண்டு அவர்களை மதியுங்கள் நிச்சயம் அவள் உங்களை விட்டு விலக மாட்டார்.

1 thought on “பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்கள்”

  1. Pingback: shocking reasons behind why tall boys love short girls

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன