இந்த ஐந்து விஷயங்களை தான் பெண்கள் கவர்ச்சிகரமானதாக ஆணிடம் பார்க்கிறார்கள்

women find these 5 things only interesting in men

ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு சில மணி நேரங்களே போதும் ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக திருப்தி அடையும் வரை அதிக நேரங்களை எடுத்துக்கொள்வார்கள் அப்படி அவர்கள் திருப்தி அடைய ஆண்களுக்கு தேவையான 5 பெண்கள் ஆண்களிடம் விழுவதற்கான ஐந்து விஷயங்கள் இதோ.

1. நம்பிக்கையுடன் இருப்பவர்கள் 

ஒரு பெண் ஒரு ஆணை நம்ப வேண்டுமென்றால் அந்த ஆண் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருப்பவராக இருக்க வேண்டும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் முழுமனதாக எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் இவர்களால் முடியும் என்ற எண்ணத்தில் செய்து முடிக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் எந்த ஒரு நேரத்திலும் இவர்கள் சோர்ந்துவிடாமல் முழு நம்பிக்கையுடன் செயல்படுவார்கள் இப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க – உங்கள் காதலருக்கு அனுப்ப காதல் SMS!

2. நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்கள் 

அதற்கு அடுத்தபடியாக பெண்கள் காதலில் விழுவதற்க்கான காரனம் அவர்களின் புன்னகை அப்பேர்ப்பட்ட புன்னகையை தரும் ஆணைதான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் எப்போதும் எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வுடன் பார்க்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் அதே சமயத்தில் வாழ்க்கை பற்றி சிந்திக்காமல் முழுவதுமாக நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் நபர்களை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

3. நடை உடை பாவனை 

ஒரு ஆண் தன்னை எப்படி அழகு படுத்திக் கொள்கிறான் எந்த விதமான உடை அணிகிறார் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறான் என்பதை பெண்கள் அதிகமாக கவனிப்பார்கள் இது அனைத்தையும் நாம் சரியாக, யாரையும் முகம் சுளிக்கும் மாறு உடை அணியாமல் மிகவும் அழகிய தோற்றத்தை உடைய ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க – தங்களது காதலனுக்காக பெண்கள் அர்ப்பணிக்கும் பாடல்கள்

4. திட்டங்கள் வைத்திருக்கும் ஆண்கள் 

ஒரு ஆண் எல்லா சமயங்களிலும் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டங்களை வைத்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் இப்படிப்பட்ட ஆண்கள் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை வைத்து தன் செயலை செய்வார்கள் அதில் ஒன்று தோன்றூவிட்டால் கூட மற்றொன்றின் மூலமாக வெற்றி கண்டு தன் வாழ்க்கையிலும் வெல்லக்கூடிய  அறிவை பெற்றவர்கள்தான் இந்த ஆண்கள்.

மேலும் படிக்க – தமிழ் படங்களில் இருக்கும் இனிய காதல் வசனங்கள்!

5. தனக்கென ஒரு குறிக்கோள் வைத்திருக்கும் ஆண்கள் 

ஒரு ஆண் தான் எங்கு செல்கிறோம் எதை நோக்கி செல்கிறோம் என தெளிவுடன் தன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் அதே சமயத்தில் எதிர்காலத்தில் தன் இயல்பு வாழ்க்கையை இழந்து விடாமல் சமமாக கொண்டு செல்லும் ஆண்களை மிகவும் பிடிக்கும்.

இதில் இருக்கும் ஏதாவது ஒன்றை மட்டும் வைத்து ஒரு பெண்ணை கவர முடியும் என்பது சாத்தியமான விஷயம் அல்ல பெண்கள் ஒரு ஆணிடம் இருக்கும் அனைத்தையும் பார்த்து தன் வாழ்க்கையை இவருடன் வாழலாம் என்ற தெளிவான எண்ணத்திற்கு வந்த பிறகுதான் ஒரு பெண் ஒரு ஆணை காதலிப்பாள் எனவே நீங்கள் ஒரு பெண்ணைக் கவர வேண்டுமென்றால் இதிலிருக்கும் ஐந்தையும் சரியாக கடைப்பிடித்து உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினீர்கள் என்றால் நிச்சயம் பெண்கள் உங்களை சுற்றி வருவார்கள்.

2 thoughts on “இந்த ஐந்து விஷயங்களை தான் பெண்கள் கவர்ச்சிகரமானதாக ஆணிடம் பார்க்கிறார்கள்”

  1. Pingback: must read secrets of boys depending on their kissing style

  2. Pingback: this things will spoil your strong love.. so be careful

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன