காதலியை சிரிக்க வைப்பதற்கான எளிய வழிகள்.!

5 ways to make your girlfriend laugh

ஒரு ஆணின் மிகப்பெரிய செயல் எதுவென்றால் தன் காதலியை சிரிக்க வைப்பதுதான் அவன் எப்போதெல்லாம் அவளை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் ஒரு மெல்லிய புன்னகை பூக்கும் ஆனால் அவன் அவளை மேலும் சிரிக்க வைப்பதற்காக ஏராளமான விஷயங்களை செய்வான் சில சமயங்களில் அது பெண்களுக்கு வெறுப்படைய செய்கிறது இது போன்ற சமயங்களில் நாம் செய்யும் செயலை மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் செய்து உங்கள் காதலி சிரிக்க வைக்க உதவும் ஐந்து வழிகளை பார்ப்போம்.

1. பரிசுகள் 

ஒரு பெண்ணுக்கு நீங்கள் பரிசாக எதைக் கொடுத்தாலும் அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்க்கலாம் ஆனால் ஏதோ கொடுக்கிறோம் என்று கொடுக்காமல் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான அல்லது அவர்கள் வாழ்நாளில் பார்க்கவே முடியாது என்று நினைத்த பொருளை பரிசாக கொடுத்தால் அதைப் பார்க்கும் போதெல்லாம் உங்களை நினைத்து சிரிப்பார்.

மேலும் படிக்க – தமிழ் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காதல் வரிகள்!

2. பாராட்டுங்கள் 

ஒரு பெண் உங்கள் எதிரில் வந்தார்கள் என்றால் நீங்கள் அவர்களை பார்த்து அவர்களின் அழகை புகழ்ந்து சொல்லுங்கள் இல்லையெனில் அவர்களின் இந்த உடை அழகாக உள்ளது என்று சொல்லி பாருங்கள் உடனே அவர்கள் சிரித்துக்கொண்டே உங்களுடன் அன்பாக இருப்பார்கள்.

3. விளையாடுங்கள் 

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் உங்கள் மனதிற்க்கு பிடித்த பெண்களிடம் அவ்வப்போது குறும்புகள் செய்து விளையாடுங்கள் ஆனால் அது அவர்களின் மனம் வருந்துமாறு இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது இப்படி நீங்கள் அவருடன் விளையாடிய நிமிடங்களை எப்போதும் நினைத்துக் கொண்டு அவர்கள் சிரிப்பார்கள்.

மேலும் படிக்க – 15 அழகான தமிழ் காதல் வரிகள்! Tamil Love Lines

4. குறும்புத்தனத்துடன் இருங்கள் 

எதையும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டாக எடுத்துக் கொண்டு அதை பற்றி உங்கள் கருத்துக்களை சொன்னீர்கள் என்றால் பெண்கள் கவனிப்பார்கள் அதை ஏன் நகைச்சுவையைக் கலந்து விளையாட்டான செய்முறைகளை செய்து அவர்களிடம் சொன்னீர்கள் என்றால் தன்னை அறியாமல் அவர்கள் சிரிப்பார்கள் அது மட்டுமில்லாமல் உங்கள் மேல் ஒரு மரியாதையும் வரும் குறும்புத்தனமாக இருப்பதற்காக நீங்கள் சில சமயங்களில் நடனம் ஆடினாலும் தவறில்லை இதுபோன்ற செயல்கள் பெண்களை மகிழ்விக்கும்.

மேலும் படிக்க – சுவாரசியமான தமிழ் சிறுகதை காதல் வரிகள்!

5. இனிப்புகள் வழங்குங்கள் 

உங்களுக்கு பிடித்த பெண்ணை பார்க்க செல்லும்போது அவர்களுக்கு என்று பிரத்யேகமாக விற்கப்படும் இனிப்புகளை வாங்கி செல்லுங்கள் இதை பார்த்த உடன் அவர்கள் முகத்தில் ஓர் காதல் புன்னகையை நீங்கள் பார்க்கலாம்

இது போன்றவற்றை கடைப்பிடித்து உங்கள் மனதிற்க்கு பிடித்த பெண்ணின் முகத்தில் புன்னகையை பூக்க செய்யலாம் ஒருவரை அழவைத்தால் அவர் உங்களை வெறுத்து சில நாட்களிலேயே மறந்துவிடுகிறார்கள் அதுவே அவர்களை சந்தோஷப்படுத்தினால் உங்களை ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள் எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விரும்பும் நபரை காயப்படுத்தாமல் அவர்களை மகிழ்விப்பீர்கள் இது உங்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல் உங்கள் உறவையும் வலுப்படுத்தும்.

1 thought on “காதலியை சிரிக்க வைப்பதற்கான எளிய வழிகள்.!”

  1. Pingback: strong reasons why men feel insecure in relationship

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன