உங்கள் காதலி உங்கள் மேல் கோபமாக இருக்கிறார்களா?

5 signs that your girlfriend is angry on you

காதலில் சண்டையும் சந்தோஷங்களும் அதிகமாக இருக்கும் ஆனால் சில சமயங்களில் பெண்கள் என்போது கோபப்படுகிறார்காள் என்று தெரியாமலேயே பல ஆண்கள் தவித்து வருகிறார்கள் அதைத் தவிர்த்து ஒரு பெண் எப்போது கோபத்தில் இருக்கிறார்கள் கூட சில ஆண்களுக்கு தெரிவதில்லை அவர்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் ஏதாவது செய்தால் அது மிகப் பெரிய காரியமாக மாறி விடுகிறது இதனால் பிரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவே உங்கள் காதலி எப்போது கோபமாக இருக்கிறார் என்பதை கண்டறிவதற்கான வழிகள்.

1. உங்களைப் பார்ப்பதை தவிர்ப்பார்கள் 

நீங்கள் அவர்கள் முன் வந்தீர்கள் என்றால் உங்களை பார்ப்பதை முழுமையாக தவிர்த்து விடுவார்கள் இதைத் தவிர்த்து அவர்கள் பார்த்தால் கூட அது முறைப்பது போல் இருக்கும் தங்கள் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவ்வப்போது சிந்திப்பார்கள் அருகில் உள்ள பொருட்களை குறிக்கோள் இல்லாமல் கையாளுவார்கள் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் மிக கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் படிக்க – காதல் மொழியை கண்களில் பேசி மன்னிப்பு கேளுங்கள்

2. அவர்களின் பதில்கள் 

நீங்கள் ஏதாவது கேட்டீர்கள் என்றால் உங்களுக்கும் பதிலளிக்க மறுத்து விடுவார்கள் இல்லையெனில் அந்த பதிலை இரண்டே வரியில் சொல்லி முடிப்பார்கள் உதாரணத்திற்கு அவர்களின் இந்த நாள் எப்படி சென்றது என்று நீங்கள் கேட்டால் பரவாயில்லை என்று முடித்து விடுவார்கள் அதுவே அவர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில் உங்கள் காதில் இருந்து ரத்தம் வருமளவிற்கு அன்று நடந்த கதையை பற்றி கூறுவார்கள் இதைத் தவிர்த்து நீங்கள் ஏதாவது அவர்களிடம் கேட்டீர்கள் என்றால் அதற்க்கு மிகத் தாமதமாக தான் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

3. அன்பு குறைந்து காணப்படுவார்கள் 

பெண்கள் உங்கள் மேல் கோபத்தில் இருந்தார்கள் என்றால் உங்கள் மேல் அன்பை காட்ட மாட்டார்கள் அதை தவிர்த்து உங்களை அக்கறையாக கூட பார்க்கமாட்டார்கள் இந்த நேரங்களில் நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னீர்கள் என்றால் அதை முற்றிலும் எதிர்ப்பார்கள் அதற்கு நேர்மாறாக அவர் ஒரு கருத்தைச் சொல்வார்கள் இது போன்ற சமயங்களில் நீங்கள் இவர்கள் கோபமாக இருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி நடந்து கொள்வது நல்லது.

மேலும் படிக்க – காதல் தோல்வி அடைந்தவுடன் பார்க்க வேண்டிய சிறந்த 7 திரைப்படங்கள்.!

4. பெயரைக் குறிப்பிட்டு அழைப்பார்கள் 

காதலில் விழுந்தவுடன் ஆண் மற்றும் பெண்கள் அவர்களுக்கென்று செல்லமான பெயர்களை வைத்து அழைப்பார்கள் அப்படி இல்லையென்றால் கூட மிகவும் அன்பான ஏதாவது புது வார்த்தையை சொல்லி அழைப்பார்கள் ஆனால் ஒரு பெண் எப்போது கோபமாக இருக்கிறாரோ அந்த சமயத்தில் தன் காதலனை முழு பெயரை சொல்லி அழைப்பார் இதை வைத்து அவர் கோபத்தில் இருப்பதை நாம் கண்டறியலாம்.

5. பேச்சுவார்த்தை 

உங்கள் காதலியுடன் ஏதாவது நீங்கள் பேசிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அதை எதிர்க்கும் முறையில் அவர் பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிடுவார் நீங்கள் பேசும் சம்பவங்களைப் பற்றி அவருக்கு புடிக்கவில்லை என்பதற்கான அறிகுறி அதை தவிர்த்து நீங்கள் அவர்களுக்கு ஏதாவது காரணங்களை சொல்லி அதன் பயன்களை சொன்னால் அவர்கள் ஒரே வார்த்தையில் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொன்னார்கள் என்றால் இது நிச்சயம் கோபத்திற்கான அறிகுறியாகும்.

மேலும் படிக்க – தடம் மாறும் மனைவியை கண்கானிக்கும் வழிகள்!

எனவே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கோபப்பட்டால் அந்த கோபம் அன்று இரவே முடிந்துவிடும் அதுவே ஒரு பெண் ஒரு ஆணிடம் கோபப்பட்டால் என்றால் அவர்களுக்கு பிடித்த செயலை நாம் செய்யும் வரை அந்த கோபம் இருந்து கொண்டே இருக்கும் சில சமயங்களில் இந்த கோபங்கள் மாதக்கணக்கில் செல்லவும் வாய்ப்புள்ளது எனவே உங்கள் காதலி கோபமாக இருக்கிறாள் என்பதை மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து அவர்களின் கோபத்தை உடனே தனியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன