காதலி உங்களை விட்டு பிரிய போவதற்கான அறிகுறிகள்..!

5 signs your girlfriend is going to leave you

காதலில் சேர்வதும் பிரிவதும் என்றும் இருந்துகொண்டேதான் இருக்கும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் தங்களை அறியாமல் எந்நேரமும் காதில் ஆழ்ந்து இருப்பார்கள் அதுவே சில காலங்கள் ஆனபிறகு ஒருவரை ஒருவர் ஏதோ சம்பிரதாயத்திற்காக தொடர்புகொண்டு அவர்களின் காதலை வளர்த்து வருவார்கள் ஆனால் உண்மை காதல் என்பது எப்போதும் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள் அப்படி இல்லை என்றால் உங்கள்  காதலி உங்களை விட்டு பிரியப் போகிறார் என்பதை இந்த ஐந்து அறிகுறி மூலமாக கண்டறியலாம்.

1. உங்களுடன் வெளியே செல்வதை தவிர்ப்பார்கள் 

காதலித்து சில மாதங்களுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் ஒரு பெண் உங்களை விட்டு விலகப் போகிறார் என்றால் முதலில் உங்களுக்காக செலவிடும் நேரத்தை குறைத்து விடுவார்கள் நீங்கள் எப்போதும் சந்திப்பதை விட குறைந்த அளவே சந்திக்க நேரிடும் உங்களின் உறவைத் துண்டித்து மெதுவாக உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.

2. உங்களை விட்டு விலகியே இருப்பார்கள் 

நீங்கள் எங்கு அழைத்தாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி உங்களை விட்டு விலகி இருக்க முயற்சிப்பார்கள் எப்போது நீங்கள் அவருக்கு அழைப்பு விடுத்தாலும் ஏதாவது ஒரு காரணங்களை கூறி சிலநேரங்களில் உங்களிடம் தொலைபேசியில் உரையாடி அழைப்பை துண்டித்து விடுவார்கள் இதுபோன்ற செயல் நீங்கள் பிரிவதற்கான அறிகுறியாகும்.

மேலும் படிக்க – உடலுறவுக்குப் பின் தம்பதியர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்.!

3. சமூக வலைத்தளங்களில் உங்களை துண்டித்து விடுவார்கள் 

நீங்கள் அவர்களை கண்காணிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு தெரியாமல் பயன்படுத்துவார்கள் அவர்கள் எங்கு உள்ளார் என்ன செய்கிறார் என்ற எதுவுமே உங்களுக்கு தெரியாமல் அதற்கேற்ற வகையில் அதை உருவாக்குவார்கள் இதுபோல் நீங்கள் அவர்களின் எந்த ஒரு புகைப்படம் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கை போன்ற விஷயங்கள் உங்கள் எண்ணத்திற்கு வர விடாமல் தடுப்பார்கள்.

மேலும் படிக்க – ஆணாதிக்கம் கொண்ட ஆண்களை அறிவதற்கான வழிகள்.!

4. பரிசுகளை புறக்கணிப்பார்கள் 

நீங்கள் அவருக்கென்று ஏதாவது பரிசுகளும் கொடுத்தால் அதில் எந்த ஒரு சந்தோஷமும் இல்லாமல் வாங்கிக் கொள்வார்கள் சில சமயங்களில் அதை புறக்கணிக்கவும் செய்வார்கள் இதைத்தவிர்த்து உங்களுக்கு எந்த ஒரு பொருளையும் உதவியும் செய்ய மறுப்பார்கள் முடிந்தவரை நீங்கள் அவர்களுக்கு கொடுத்த பரிசை திருப்பிக் கொடுக்க நினைப்பார்கள் இப்படி ஏதாவது அவர்கள் செய்தார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் உங்களை விட்டு விலக முடிவு எடுத்து விட்டார்கள் என்பதற்கான அர்த்தம் ஆகும்.

மேலும் படிக்க – உங்கள் காதலரின் பிறந்த நாளை இந்த வழியில் கொண்டாடுங்கள்.!

5. அவர்களின் நடவடிக்கையை உங்களுக்கு தெரியப்படுத்துவதை தவிர்ப்பார்கள் 

உங்களுக்கு தெரியாமல் அவர்கள் அவ்வப்போது புதுப்புது திட்டங்களை தீட்டி வெளியே சென்று வருவார்கள் காதலில் இருக்கும்போது எங்கு சென்றாலும் உங்களிடம் சொல்லி விட்டு செல்லும் அவர்கள் உங்களை விட்டு பிரியப் போகிறாள் என்ற எண்ணம் வந்தவுடன் அதை எதையும் செய்ய மாட்டார்கள் ஏன் உங்களுக்கு தெரியாமல் வெளியூர் மற்றும் வெளிநாடுகள் கூட சென்று வருவார்கள்.

இது போல் ஒருவர் உங்களை விட்டு பிரிவது என்று முடிவு எடுத்துவிட்டால் அவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக் கொண்டு நீங்கள் அதை உணர்ந்து கொள்ளலாம் உங்களிடம் நேரம் செலவிடுவதை குறைத்து  உங்களிடம் சிரித்துப் பேசாமல் ஏதோ கடமைக்கு என்று வந்து செல்வதாக இருந்தால் நிச்சயம் அவர்கள் உங்களை விட்டு பிரியப் போகிறார்கள் என்று அர்த்தம் காதலில் எப்போதும் இது ஒரு சகஜமான நிலைதான் உங்கள் காதல் எதிர்பார்த்தபடி செல்ல வில்லை என்றால் அது நிச்சயம் பிரிவில்தான் முடியும் இந்த நிலைக்கு வராமல் தடுப்பதற்கு நாம் கவனத்தை சிதறவிடாமல் எப்போதும் அவர்களுக்கென்று அவர்களை பற்றி நினைத்து காதலித்து வாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன