சமூக இடைவெளியில் யோகா சாத்தியமா!

  • by

உங்கள் உடற்பயிற்சி கூடம் அல்லது ஒர்க் அவுட் வழக்கம் கொரோனா வைரஸால் தடம் புரள வாய்ப்புகள் உள்ளன. கொரோனா வைரஸ் அதன் போக்கை இயக்கும் போது நாடு முழுவதும் உள்ள ஜிம்கள், பொது பூங்கா, ஸ்டுடியோக்கள், மற்றும் பல இடங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன, இதற்கு நீங்கள் உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல.

யோகா செய்வதை நீங்கள் வழக்கமாக்கி தொடங்குவதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும்: சரியான உடல் வடிவத்தில் இருப்பது மற்றும் உலகின் நிலை குறித்த உங்கள் கவலையைக் குறைக்கவும் இந்த யோகா செய்யும். வீட்டில் யோகா பயிற்சி செய்வது மிகவும் சுலபம்.

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் பல அவற்றில் நீங்கள் இத்தகைய சூழலில்- சமூக இடைவெளியில் இருக்கும்போது யோகா வழக்கத்தைத் தொடங்க 5 காரணங்கள் பின்வருமாறு.

1. பதட்டத்தை நீக்குகிறது :

பல ஆய்வுகள் கூறுவது நீங்கள் யோகா பயிற்சி செய்வதால் பதட்டத்தை குறைக்கமுடியும் மற்றும் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவையும் குறைக்கமுடியும் என்பதாகும்.

மேலும் படிக்க – பிரபலமான யோகா நிலையும் அதன் நன்மைகளும்..!

2. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது :

நீங்கள் யோகா செய்வதால் மெலடோனின் மீது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது மேலும் இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகளும் தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை போக்க உதவுகிறது. எனவே, நீங்கள் நன்றாக தூங்குவதை உங்களால் உணர முடியும்.

3. மனச்சோர்வைத் தடுக்கிறது :

கார்டிசோலைப் பற்றி பேசுகையில், முன்னர் இருந்த ஆய்வுகள் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைப்பதன் மூலம், யோகா மன அழுத்தத்தின் அறிகுறிகளையும் குறைக்கலாம் என்று கண்டறிந்துள்ளது.

மேலும் படிக்க-> யோகா செய்வதால் ஏற்படும் 20 ஆரோக்கிய நன்மைகள் …!

4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

யோகா இதய நோய்க்கான ஆபத்து காரணிகளைக் குறைப்பதாகக் ஆய்வில் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் யோகாவை தனியாகவோ அல்லது பலருடன் இணைந்து செய்தாலும் அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைந்து இருக்கும், அது உங்கள் வாழ்க்கையை நீட்டிக்க நீண்ட தூரம் செல்லக்கூடும்.

5. வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலையை உருவாக்குகிறது :

உண்மையில் யோகா ஒருவரின் வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலையை உருவாக்குகிறது.இவைகள் தான் முதன்மை உடல் நன்மைகள்! நெகிழ்வுத்தன்மையையும் சமநிலையையும் வளர்த்துக் கொள்ளும்போது, நல்ல வடிவத்தைப் பெறவும், தங்கவும் உதவுவதற்கு யோகா ஒரு சிறந்த அமைப்பு.

மேலும் படிக்க-> நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

நீங்கள் இன்றிலிருந்து உங்கள் வீட்டில் யோகா வழக்கத்தைத் தொடங்க தயாரா? யோகா சம்மந்தமான பல ஆன்லைன் வகுப்புகள், யூடூயூப் வீடியோக்கள் என பலவற்றை கண்டு பயனடையுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன