5 இந்திய பழக்கவழக்கங்கள் நம்மை பாதுகாக்கிறது..!

  • by
5 indian habits that is saving our lives

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கலாச்சாரங்கள், உணவுகள், மொழிகள் மற்றும் மனிதர்கள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. என்ன ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான கொள்கைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே இதுபோன்ற ஒருசில பழக்கவழக்கங்களே நம்மை பாதுகாக்கிறது அது என்னவென்று காணலாம்.

இயற்கை உணவு

விவசாயம் செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருப்பது இந்தியா தான். இவர்கள் உருவாக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் அனைத்தும் இந்தியர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதை உருவாக்குவது மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்கள். எனவே இயற்கை மூலமாக உருவாக்கப்படும் இந்த உணவுப் பழக்கம்தான் இந்தியர்களை உறுதியாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – உணர்வுகளை பறை சாற்றும் வர்ணங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது???

மசாலாப் பொருட்கள்

இந்தியாவில் அதிக அளவில் விலையைப்படுவது மசாலாப் பொருட்கள்தான். அதில் மிக அதிக அளவில் பயன்படுத்துவது மிளகு, சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்ற உணவு பொருட்கள். இதை தவிர்த்து நாம் ஏராளமான மசாலாப் பொருட்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலமாக நம் உணவில் காரம் அதிகரிக்கிறது. இதனால் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலை நாடுகளில் அதிக அளவில் இனிப்பு உணவுகளை உண்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் நிலை மிக எளிதில் பாதிப்படைகிறது.

யோகா பயிற்சி

இந்தியர்கள் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டவர்கள். அதை தொடர்ந்து நடைப்பயிற்சி, உடற் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்பவர்கள். இதனால் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி சத்து முதல் உடற்பயிற்சி, யோகப் பயிற்சி செய்வதன் மூலமாக அவர்களின் உடலும் ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்தியர்களின் பழக்கம் உதவுகிறது.

அயராது உழைப்பவர்கள்

இந்தியர்கள் அயராது உழைப்பவர்கள் என்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளிப்படையாக கூறியுள்ளது. எனவே இந்தியர்கள் தொடர்ந்து உழைக்க கூடிய தன்மையைக்கொண்வர்கள் அதை தவிர்த்து விடாமுயற்சி எண்ணத்தையும் கொண்டவர்கள். இதன் மூலமாக அவர்களின் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை

இந்தியாவில் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தன் கணவன் வீட்டிற்கு செல்வார். ஆனால் ஆண்கள் எப்போதும் தங்கள் வீட்டிலேயே தன்னுடைய தாய், தந்தை, சகோதர சகோதரிகளுடன் இருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள். எனவே ஒருவருக்கு ஒருவர் உதவியுடன் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் வாழ்கிறார்கள். எனவே தனிமை சூழ்நிலையை உணராமல் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதை எல்லோரும் பின் தொடர்ந்தால் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும், அன்பாகவும் வாழ முடியும்.

மேலும் படிக்க – 144 தடையுத்தரவு நாட்களில் எவை இயங்கும்?? எவை இயங்காது??

மற்ற உயிரினங்கள்

இந்தியர்கள் கடவுளை அதிகளவில் நம்புவர்கள், அதைத் தவிர்த்து மாமிச உணவுகளை தவிர்ப்பவர்கள். உலகளவில் அதிக அளவில் சைவ உணவை சாப்பிடுபவர்கள் இந்தியர்கள்தான். இதன் மூலமாக மற்ற உயிரினங்களுக்கும் மதிப்புக் கொடுத்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க இந்தியர்கள் மறைமுகமாக உதவுகிறார்கள்.

கடவுள்களுக்காக செய்யப்படும் விரதங்கள், ஆரோக்கியமான உணவு, குடும்ப இணைப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை இதை தவிர்த்து ஏராளமான கலாச்சார வேறுபாடுகள் போன்ற அனைத்தும் இந்தியர்களிடையே அதிகளவில் பரவி இருக்கிறது. இதுதான் இவர்களின் வாழ்க்கையை அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன