உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஐந்து ஆசனங்கள்..!

  • by
5 effective yoga asanas to tackle hyper tension

நம்முடைய உடலில் உயர் ரத்த அழுத்தம் அதிகரித்தால் இருதயம் செயலிழக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்த்து உங்களுக்கு சிறுநீரகம் தொற்றுக்களை உண்டாக்கும் மற்றும் பக்கவாத போன்ற பிரச்சினைகளை உண்டாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. எனவே இதைத் தடுப்பதற்கு மற்றும் உங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான ஐந்து ஆசனங்களை இந்த பதிவில் காணலாம்.

உத்தன ஆசனா

இந்த ஆசனத்தை செய்வதன் மூலமாக உங்கள் நரம்பு மண்டலத்தை தளர்வு படுத்தி உங்கள் மனநிலையை அமைதியாக்க உதவும். இந்த ஆசனத்தை நாம் நேராக நின்று கொண்டு நம்முடைய இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்த வேண்டும். பிறகு மெதுவாக இரு கைகளையும் கொண்டு முன்னே வளைந்து தரையை தொட வேண்டும். இதனால் உங்கள் இடுப்பு, தோள், கைகள் போன்ற அனைத்துப் பகுதிகளும் தளர்ந்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நிலையிலும் குறைந்தது இரண்டு நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும்.

விபரீத கரணி

இந்த ஆசனம் ஒரு எளிமையான ஆசனம், இதை செய்வதன் மூலமாக உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக செயல்படும். அதைத் தவிர்த்து உங்கள் மன நிலையையும் அமைதியாகும். இந்த நிலைக்கு நாம் சுவரை ஒட்டிய இடத்தில் எதிர்துசையில் படுத்திக் கொள்ள வேண்டும், பிறகு நம் இரு கால்களையும் சுவரை முழுமையாக தொடும்படி நீட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நமது இடுப்புப் பகுதியை இருக்கைகளின் உதவியால் தூக்கிக்கொண்டு ஒரு காலை மட்டும் நாம் பார்க்கும் படி நேராக நீட்ட வேண்டும். இதையே மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை காற்றோட்டமான இடங்களில் செய்வதே சிறப்பாக அமையும்.

அரை முகம் சுயராஜ்யம்

உங்கள் மனம் மற்றும் உடலை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும் ஆசனம் இதுவாகும். இந்த நிலையை செய்வதற்கு நாம் நேராக நின்று கொண்டு நம் உடலை பாதியாக மடித்து முக்கோண வடிவில் தரையைத் தொட வேண்டும். இப்போது நம்முடைய முதுகு மேல் நோக்கியும், கால்கள் இரண்டும் பின்னும் கைகள் இரண்டும் முன்னும் நாம் தலைகீழாக பார்த்தபடி இருக்க வேண்டும். இதை தொடர்ந்து சில நிமிடங்கள் செய்வதன் மூலமாக நம் உடல் பிரச்சனை அனைத்தும் சீராகும்.

பாசிமோட்டனாசன்

யோகாசனம் என்று வந்தால் எல்லோரும் எளிமையாக செய்யக்கூடிய ஆசனத்தில் இதுவும் ஒன்று, நாம் சாதாரணமாக இரு கால்களையும் நீட்டியவாறு தரையில் நேராக அமர்ந்து கொண்டு நம் இரு கைகளையும் நம்முடைய இரு கால்களை தொடும்படி முதுகை வளைத்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அதே நிலையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து எலும்புகளும் உறுதியாகவும், உங்கள் உடலைத் தளர்வாக வைத்துக் கொள்ளும்.

சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் என்பது பாலம் என்பார்கள், நாம் பாலத்தைப் போல் நம் உடலை அமைத்துக் கொள்வதினால் இந்தப் பெயர் இதற்கு உருவானது. இதை செய்வதன் மூலமாக நம்முடைய கழுத்துப்பகுதி, இடுப்புப்பகுதி, கால் பகுதி போன்ற அனைத்தும் உறுதியாகும். நாம் சாதாரணமாக தரையில் படுத்துக் கொண்டே நம்முடைய இரு கைகளையும் தரையை தொடும்படி நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நம்முடைய குதிகால்களை மடக்கி நம்முடைய இடுப்பை மேல் நோக்கி தூக்கி கொள்ள வேண்டும். நம்முடைய தோல் தரையில் படும்படி நமது பின்புறம் அந்தரத்தில் இருக்க வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே இருப்பதன் மூலமாக உங்கள் உடல் வலிமையாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆசனங்களும் உங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதை உங்களால் முடிந்த வரை முயற்சி செய்து பாருங்கள், இல்லையெனில் ஆரம்பத்தில் சாதாரணமாக பயிற்சி செய்து தொடர் முயற்சியின் மூலமாக இதை முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன