உடல் உறுப்பு தானத்தால் ஏற்படும் 5 நன்மைகள்..!

  • by
5 benefits of doing organ donation

ஒரு காலத்தில் தானம் என்றால் கண்தானம், இரத்ததானம் அல்லது உணவுகளை தானமாக வழங்கி வந்தார்கள். ஆனால் இதற்கு மேலாக கடந்த சில வருடங்களாகவே எல்லோரும் துணிந்து செய்யக் கூடியது தான் உடல் உறுப்பு தானம். இதை பொதுவாக இறந்தபிறகு செய்கிறார்கள், ஆனால் ஒரு சிலர் இதன் அருமையை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. இதனால் பல உயிர்கள் ஏதோ ஒரு மூளையில் பல வேதனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே உடல் உறுப்பு தானத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதில் இருக்கும் திருப்திகளை இந்த பதிவில் காணலாம்.

தானத்தினால் ஏற்படும் நன்மைகள்

ஒருவர் தனது உடல் உறுப்பை தானம் செய்வதின் மூலமாக கிட்டத்தட்ட 8 உயிர்களை அவர் காப்பாற்றுகிறார். அதைத் தவிர்த்து திசுக்கள் மற்றும் கண்களை தானமாக செய்வதன் மூலமாக கிட்டத்தட்ட ஐம்பது உயிர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறார். எனவே இதை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு தானத்தை இன்றே மேற் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் யாராவது இறந்திருந்தால் அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக எழுதி தாருங்கள்.

மேலும் படிக்க – ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள்!

மற்றவர்களை மகிழ வையுங்கள்

உடல் உறுப்பு தானத்தை செய்யும்பொழுது உங்கள் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் இந்தத் தானத்தினால் உங்களுக்கு முன்பின் தெரியாதவரின் வாழ்க்கை அழகாகும். இதனால் உங்களுக்கு திருப்தியும், உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சந்தோஷத்தையும் அள்ளித்தரும். நீங்கள் தானமாக அளித்தவரை பார்க்கும்போதெல்லாம் உங்களின் எண்ணங்கள் அவர்களுக்கு தோன்றும்.

இலவசமாக ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்

உடலுறுப்பு தானம் செய்வதற்காக நீங்கள் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை. அதேபோல் உங்கள் உறுப்புகள் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு, பணம் ஏதும் வாங்காமலேயே சென்றடையும். முதலில் யார் இதற்கான தேவைகளை பதிவிட்டுள்ளார்களே அவர்களுக்கு சென்றடையும் வகையில் உங்கள் உறுப்புகள் இருக்கும்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு

நாம் எப்படி நம் வாழ்க்கைக்கு காப்பீட்டுத் திட்டங்களை மேற்கொள்கிறேம்மோ அதேபோல் நாம் ஏதேனும் மிகப் பெரிய ஆபத்தான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது அதற்கு முன்பாக உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வது சிறந்தது. அதை தவிர்த்து ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் நடந்து விட்டால் உங்கள் உறுப்புகள் யாருக்கு சென்றடையும், என்பதை நீங்கள் காணவும் செய்யலாம். இதனால் உங்கள் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.

மேலும் படிக்க – வெயிலை தணிக்க வெளிநாட்டு பானங்களா? வேண்டவே வேண்டாம்!!!

எல்லோரும் தானம் கொடுத்தால்

இறக்கும் ஒவ்வொருவரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் அடுத்த ஆறு மாதங்களிலேயே எல்லாருடைய குறைகள் விலகும். ஆனால் உறுப்புகளை தானம் செய்வதற்கு பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை. எனவே உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் இன்று உங்களின் உடல் உறுப்புகளை தானம் அளியுங்கள்.

ஒவ்வொரு 12 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு லட்சத்து 23 ஆயிரம் நபர்கள் ஏதேனும் ஒரு குறைபாட்டினால் உடல் உறுப்புகளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை அழகு கூட்டுவதற்காக உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய செயலை செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன