வறுமைக் கோட்டிற்குக் கீழ் 40 கோடி மக்கள்..!

  • by
40 crore people under poverty in india

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியா முழுவதும் முடக்கத்தில் உள்ளது, இதனால் அன்றாட உழைத்து ஊதியத்தை பெற்று வரும் மக்களின் வாழ்வு பெரிய அளவில் பாதித்துள்ளது. இதன் மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் நிறைவடைந்தவுடன் இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் செல்வார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. பல பேர் தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தெருக்களுக்கு தள்ளப்படும் சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது, இதை இந்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது.

உதவித்தொகை

கொரோனா வைரஸினால் அடித்தட்டு மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக குடும்ப அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள் நிதிகளை வழங்கி வருகிறார்கள். ஆனால் ஒரு சில மாநிலங்களில் நிதிகள் போதுமான அளவு இல்லை என்றும், அன்றாட வாழ்க்கையை கடப்பதே மிகக் கடினமாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இருந்தும் தாங்கள் செய்யும் வேலைகளை முழுமையாக இழந்திருப்பதினால் பணம் என்று ஒன்று இல்லாமலே வாழும் சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸினால் வேலை இழப்பு அதிகரிக்குமா..!

பொருளாதாரத்தின் பிரச்சனை

ஒரு நாடு வளர்ந்திருப்பதை கணக்கிடுவது அந்த நாட்டு வளர்ச்சியைப் பொறுத்து அமைகிறது. வளர்ச்சி உள்ள நாடா அல்லது வளர்ச்சிகள் இல்லாத நாடா என்பதை முடிவு செய்வதே அந்நாட்டின் பொருளாதாரமும், அந்த நாட்டு மக்களின் வேலை வாய்ப்புகளும்தான். ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றால் நம் நாட்டின் நிலையை உலக அளவில் மோசமாக பார்க்கப்படும். எனவே அதை இந்திய அரசு உடனடியாக தடுக்கும் திட்டங்களை வகுக்க வேண்டும், இல்லையெனில் இந்தியா வறுமையான நாடு என எல்லோரும் பார்க்க படுவார்கள்.

பிரச்சினைகளுக்கான தீர்வு

ஏற்கனவே இப்போதுதான் இந்தியா படிப்படியாக வறுமைக்கோட்டிற்கு மேல் ஏறி வருகிறது ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இது மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை நிகழ்ந்துள்ளது. இதை இந்திய அரசு கருத்தில் கொண்டு அனைவருக்கும் அவர்கள் படிப்பு மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார்போல் வேலைகளை வழங்க வேண்டும். அதேபோல் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொடங்குவதற்கான வரி விகிதத்தை குறைக்க வேண்டும். இதன் மூலமாக ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைந்து சராசரி மக்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – கொரானா பரவலை தடுக்கும் வேம்பு, மஞ்சள் கற்றாலை

தினக்கூலியின் பிரச்சனை

இந்தியாவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் மக்கள் தினக்கூலி செய்பவர்கள், இவர்கள் அன்று செய்யும் வேலைக்கான ஊதியத்தை அன்றே பெற்று தங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த ஊரடங்காள் இவர்களின் வேலை முழுமையாக பறிபோயின. இதைத்தவிர்த்து இவர்கள் பணிபுரிந்த நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர் கொண்டு வருவதினால் இது பழைய நிலை திரும்ப மேலும் பல மாதங்கள் ஆகலாம் என கருத்துக்கள் வெளியாகிறது. இது போன்ற தினக்கூலியின் பிரச்சினையை தீர்க்க இந்தியா புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும் தினமும் பசி பட்டினியால் அவதிப்படுவர்களின் எண்ணிக்கையே இந்தியாவில் அதிகமாக உள்ளது. எனவே அந்த பிரச்சனையை தீர்க்கும் திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவர வேண்டும், அதை தவிர்த்து எதிர்காலத்தில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் தடுக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். இல்லையெனில் நம் நாடு இதுவரை எதிர்கொள்ளாத ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன