15 அழகான தமிழ் காதல் வரிகள்! Tamil Love Lines

15 best romantic love quotes in tamil

15 அழகான தமிழ் காதல் வரிகள்! இதோ உங்களுக்காக!

உலகில் உள்ள பூக்களுக்கெல்லாம் போட்டி வைத்தாலும் உன் பேரழகுக்கு ஈடாகுமா என் அழகு மங்கையே… உன் புன்சிரிப்பில் எனது இதயத்தை உனது பக்கம் சாய்த்து விட்டாய்… உன் பொன் வார்த்தைகளால் என் வாய் மொழிகளுக்கு ஒரு புதிய மொழியை கற்பித்து விட்டாய்… உன் பாத கொளுசுகளில் நான் தேடும் பாதையை அறிய செய்து விட்டாய்… மொத்தத்தில் உன் நேசத்தால் என் சரீரத்தில் ஒரு அங்கமாய் நீங்காது நீக்கமற நிறைந்து விட்டாய்…!

Romantic Tamil Lines

மேலும் படிக்க – ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

உன்னை பார்க்க பார்க்க வரும் ஆனந்தம் என் காதலை உன்னிடம் உரைக்கும் தருவாயில் என்னவோ கானல் நீர் போல மறைந்து தான் போகிறது…!

best sms in tamil

மேலும் படிக்க – கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

கானகத்தின் நடுவிலே வலி தெரியாமல் நிற்பது போல உணர்கிறேன் நீ என் அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியிலும்…!

best love quote

காதலில் அவளிடம் நான் பேசிய வார்த்தைகளை விட அவள் என்னிடம் வினவிய வினாக்கள் தான் என்னமோ அதிகம்.

best love sms

மேலும் படிக்க – காதல் கைகூட இந்த தாந்தீரிகம் செய்யுங்க..!

சரியோ தவறோ என் இதயம் சொல்வதையே நான் செய்கிறேன் என் இதயமோ உன்னை தானே தினமும் கேட்கிறது

Best Love Tamil Quote

பார்வைகளை வைத்து வசியம் செய்து என்னை வசமாய் அவள் மனதிடம் மாட்டி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல என்னிடம் நாடகமாடிக்கிறாளே என் இனியவள்…!

tamil beautiful quotes

என் சொர்கத்தை எங்கும் தேட தேவை இல்லை உன்னை சற்று நினைத்தாலே போதும்.

tamil sad love quote

வேண்டாம் என்னும் சொல்லுக்கு பொருள் விருப்பமில்லாதது… காதலில் அந்த சொல் தான் மிகுந்த வேதனையானது.

tamil love lines

உன்னோடு பலர் பழகினாலும் உன் நினைவில் என்றுமே நான் மட்டுமே நீங்காத இடம் பிடித்திருப்பேன்.

tamil love message

பூ போன்ற பாதைகள் கூட நீ இல்லாத காரணத்தால் இன்று எனக்கு கரடு மேடாகவே காட்சி அளிக்கிறது.

romantic sms

தெருவில் கிடந்த என்னை காதல் எனும் உன் தேரில் ஏற்றி என்னை உலவ செய்து விட்டு இன்று பிரிவு என்ற ஒரு வார்த்தையில் முழுவதுமாக என் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டாயே.

beautiful tamil love quotes

உன் கூர்மையான வார்த்தைகளால் என்னை வதைக்காதே பெண்ணே உன்னால் எப்போதோ என் இதயம் நொறுங்கி போனது இப்போது இருப்பதோ இந்த வெற்று உடலில் உள்ள உயிர் மட்டுமே…

romantic tamil lines

உன் சம்மதம் என்ற வார்த்தைக்குள்ளே அடங்கி நிற்கிறது என் எதிர்கால வாழ்க்கையின் மகிழ்ச்சி.

inspiring love quote

ஐந்து நிமிடம் கூட நமக்காக காத்திருக்க தயங்குபவர்கள் தான் ஒரு காலத்தில் உனக்காக காலம் முழுவதும் காத்திருப்பேன் என்று சொல்லியிருப்பார்கள்.

love sms tamil


நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது… ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது மிகவும் ஆழமானது…

best love message

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன